Tuesday 3 November 2015

வக்கிரத்தின் வலி

வணிக நகர வாலிபன்
கணினியில் தொலைத்த கண்ணை மீண்டெடுத்து
இரவு நேர உலா செல்ல,

கண்ணெதிர உலகத்தை உள்ளடுக்கும் அலைப்பேசியில்
நவநாகரிக பெண் ஒருத்தி அளவளாவ..
வைத்த கண் வாங்காது
உடலின் அமைப்பை உடையின் அளவோடு ரசித்தபடி
"செம பீஸ்" என கூறிக்கொண்டு நடை பயணிக்க,

கண்ணுக்கு விருந்தளித்த மனசு வயித்துக்கும் விருந்தளிக்க தூண்ட
தள்ளுவண்டியில் நடுத்தர வர்கத்தின் நட்சத்திர உணவகத்தில்
சில பல தோசைகளை முழுங்கிய வாறே
அன்னமிட்ட அஞ்சலையின் அங்கத்தை
உணவின் சூட்டோடு சூடாக ரசித்தபடி
மனதுக்குள் "நாட்டு கட்டை" என்று எண்ணியவன்,

புகை போட பொட்டிகடை செல்ல
அருகில் தெரு சுத்தம் செய்யும் பெண்ணின்
சரிசெய்யப்படா ஆடைவழியே தெரியும் இடையை
இமை கொண்டு இச்சித்த படி "சூப்பர் பிகரு" என நகர்ந்தவன் கண்ணில்

கணினி கம்பெனி கன்னி காரில் வந்திறங்க,
ஆங்கிலேயர் கீழ் பணிபுரிபவள்
ஆங்கிலேயனுக்கே பணிபுரிபவலாய் எண்ணி "ஐயிட்டம்" என முனுகிகொண்டே நடக்க.
 அலைப்பேசியில் மணி அடிக்க,
"ஏரியா பசங்க கிண்டல் பண்ணிச்சின்னு தங்கச்சி தற்கொலை பண்ணிகிட்டா"ன்னு அம்மா குரல் ஒலிக்க,

ஒரு கணம் அவன் மனதில் பெண் குறித்த தன் வக்கிரத்தால் வலி உண்டாவதை உணர்ந்தான்.

7 comments:

  1. அருமை அருமை. அழகான சொல்லாடல்.
    திரும்ப படிக்க திகட்டவில்லை.
    உறுத்தாத உசுப்பிவிடும் கருத்து
    வருத்தம் உணர்ந்து திருந்துவார் பலர் முடிவில் :)))

    வாழ்த்துகள். இன்னும் இது போல் பலபல :))

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மக்கா..
      இனி வரும் படைப்புகளில் சமுக பிரச்சனைகளை இயல்போடு வெளிப்படுத்த முயல்வேன்.

      Delete
  2. Wow semma semma 👌 loved it man

    ReplyDelete