Wednesday 23 December 2015

களவியுகம்

காமம் : இதுதான் இன்று சமுகத்தில் பெண்களின் நிலையை சீர்குலைக்கும் விஷயங்களில் முதன்மை ஆனதாக இருக்கிறது.

உண்மையில் பெண்கள் படைக்க பட்டது வெறும் காம சுகம் பெறுவதற்காக தானா? காமம் என்பது வெறும் தேகம் சார்ந்த மோகம் நிறைந்த சுகம் மட்டுமேவா? இல்லை.

ஒரு ஆண் தன் ஆண் குறியை பெண் குறியோடு இணைக்கையில் உண்டாகும் உணர்வு மட்டுமே காமம் அல்ல.

மனசும் மனசும் உரசுகையில் உண்டாகும் உணர்வான காதல் போல உடலும் உடலும் உரசுகையில் உண்டாகும் உணர்வே காமம்.

எப்படி காதல் என்பது ஒருவர் தமது மனதினில் இருந்து வெளிப்படும் அன்பை புரிந்தவரிடம் மட்டுமே உணருகிறாரோ, காமத்தையும் அவரிடமே பெற வேண்டும். அவ்வாறு மனம் உணர்ந்த உள்ளங்களிடையே மனமுவந்து காமம் கொள்கையில் அவ்வுறவில் பல உறவுகளின் சங்கமம் இடம்பெறும்.

உறவின் போது சின்ன சின்ன குறும்புகளோடு செய்திடும் சீண்டல்கள் நண்பர்கள் போலும்,
விழியோடு விழி பேச இதழ்கள் இணைகையில் காதலர்கள் போலும்,
உறவின் முடிவில் ஒருவர் நெற்றியில் ஒருவர் மாறி மாறி முத்தம் இடுகையில் தந்தையை போலும்,
அன்பின் அசதியில் தோள்களில் சாய்த்து அரவணைப்பதில் தாயை போலும் உணர்தல் ஏற்படும்.

இத்தகைய உணர்வுகள் இருவரின் மனதிலும் "இனி நீ என்பதும் நான் என்பதும் நாமே" என்றுணர்த்தி இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் இருகரம் கொண்டு இறுக்கி அணைக்கையில் "வாழ்வின் எந்த நிலையிலும், உன்னை விட்டு நீங்காது உன்னோடு இணைந்திருப்பேன்" என்ற எண்ணம் ஏற்படும்.

மேலும் காமம், ஆண்-பெண் இருவரும் சமம் என்னும் எண்ணத்தை உடல்கள் வழியே ஆழ்மனதில் அழுத்தமாய் பதிக்கும். அன்பை மனதார பகிரும் ஆண்/பெண் இடம் மட்டுமே ஒரு பெண்/ஆண் இத்தகைய உணர்வை காமத்தில் பெற முடியும்.

மற்றபடி சதையில் சந்தோசம் நாடும் அனைவரும் மார்கழி மாதத்தில் நாக்கை தொங்க போட்டு கொண்டு திரியும் நாய்க்கு ஒப்பானவர்களே.

காமத்தை போதையாகவும், அந்த போதை தரும் கருவியாக பெண்களையும் எண்ணாது..ஆண்-பெண் உறவின் உன்னதத்தை உடல் மற்றும் மனதின் வழியே கற்பிக்கும் கருவியே களவி என உணர்ந்து இருபாலினருக்கும் சமுகத்தில் சமத்துவம் ஏற்படும் வகையில் வரும் ஆண்டுகளில் வாழ்வோம்.