Tuesday 31 December 2013

அன்புடன் 2013

அனைவருக்கும் வணக்கம்,

நான்தான் 2013,

சாதிக்கணும்னு நினச்ச பலரோட கனவுகளுக்கு கை கொடுத்தேன்.சிலரோட ஆசைகளுக்கு ஆப்பு வச்ச்சேன்  (இதை எழுதுற @tigerthia-க்கும் சேர்த்துதான்).

தேஞ்சி போன அரசியல்வாதிகள் முதல் காய்ஞ்சி போன காம பிசாசுகள் வரை பல்லு முளைக்காத குட்டிகள்ல ஆரம்பிச்சி பல்லு போன பாட்டிகள் வரை ஒருத்தரை விடாம வயசு கணக்கா,சைசு கணக்கா பாரபட்சம் பார்க்காம காத்து கருப்பு மாதிரி வந்து காசு,கற்ப்பு களவாடி தேசத்தை சேதபடுதிட்டாணுக.என்னதான் ரைமிங்கா சொன்னாலும் ரணம் இருக்கு நெஞ்சுக்குள்ள..எல்லாத்தையும் பார்த்திட்டு,படிச்சிட்டு வெறும் வார்த்தைகள்ல மட்டும் வேதனையை வெளிபடுதிட்டு போற இயலாமை ஈஈனு இளிச்சிகிட்டு,இழிவுபடுதிகிட்டு இருக்கு உங்களை..

கலவி தரத்தோட வளர்ச்சி கல்வி கூடங்களின் கட்டிடங்களின் தரத்தில் தான் பார்க்க படுகிறது இன்னும் ஊருல..building strong..teaching weak கதை தான் தொடருது.இந்த சோக கதையை தாண்டியும் சில சாதனை கதைகள் இடம்பெறத்தான்  செய்யுது...படிக்க வசதிஇல்லாத இடத்துல சாதிக்க மனசு உள்ள வயசுல உள்ள மாணவர்கள் செய்யும் சாதனை அபாரமானது.ஆனால அவர்களுக்கு கை கொடுக்காமல்,உயர செல்ல தடை விதிக்கும் நம் கல்வி திட்டமும்,அந்த திட்டத்துக்கு தீனி போடும் அறிவில்லா அதிமேதாவிகளின் கொட்டமும் அகோரமானது.

காதலும்,கடலையும் சார்ந்த காலேஜ் மாணவர்களின் சமுக அக்கறையும், தமிழ் உணர்வும் ஈழ போராட்டத்தில் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தின் மூலமும்,அதற்க்கு ஆதரவு தெரிவித்து தமிழக அணைத்து கல்லூரிகளின் போராட்டத்திலும் வெளிப்பட்டபோது "அவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்" நினைப்பு தான்..சூப்பர் பா..

ஆனா அதுக்குகுட லீவ் விடாம,எங்களை லீவ் போடவும் விடாம உக்கார வச்சி வேலை கொடுத்து இம்சை கொடுத்த அயல் நாட்டு அப்பாடேக்கர்கள் அதான் MNC நிறுவன நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி கும்பிடுகள்..மோசம் பா..

ஆரம்பத்துல சாம்பியன் கோப்பை கைபற்றி வெற்றிகரமா ஆரம்பிச்சாலும் போக போக சுறா தேய்ஞ்சி சுண்டெலி ஆன கதைதான்.ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஜொலித்தாலும்,தென் ஆப்ரிக்கா தொடரில் பல்லிளிக்கும் படி சொதப்பிவிட்டனர்...சச்சின் என்னும் மந்திர சொல் கடைசி முறை கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்ததும்,காலிஸ்  என்னும் ஜாம்பவான் விடை பெட்ட்றதும் ஒரு சுகமானா சோகம்.விஸ்வநாதன் ஆனந்த் ஆட்டம் கே.வீ .ஆனந்த் மாற்றான் போல் பெரும் எதிர்பார்ப்போடு வந்து பப்படம் ஆகிவிட்டது...சரிவென்பது சகஜம்.அதை நீங்கள் வெல்வீர் என்பது நிச்சயம்.இறகு பந்தாட்டம் (badminton ) வியாபாரம் ஆக்கபட்டதின் பெரும் பங்கு IPL போய்  சேரும்..இருப்பினும் பல திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது (இப்படித்தாண்ட IPL ஆரம்பிச்சோம்)..விளையாட்டு வினால் ஆனால் கூட பரவாயில்லை.வியாபாரம் ஆனால் ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் கதைதான்.

நம்ம ஊர் விஞ்ஞானிகள் விடும் ராக்கெட்டை விட வேகமாக மேல செல்கிறது தங்கம் விலை.அதுக்கு கீழே கொஞ்சம் வேகமாக செல்கிறது காய்கறிகள் விலை.நடுத்தர வர்க்கம் இனி நடுதெருவுக்குத்தான் வருகும்.

தலைவான்னு பேரு போட்டதுக்கே பாம் போடுறேன்னு சொன்ன புரட்சி புயல்கள் அடுத்த முதல்வர்,அடுத்த பிரதமர்,அடுத்த பீதமகர்..அம்புட்டு ஏன்..கடவுள்ன்னு கூட பேன்னர்,போஸ்டர் ஓடும்போது பாம் இல்லை சாணி கூட அடிக்கலை...விஸ்வரூபம் படத்தை எடுப்பதற்கு விட,அதை வெளியிடுவதற்கு கமல் எடுத்த முயற்சிகள் ஹாலிவுட்டே அதிர அளவுக்கு இருந்துச்சி.நாட்டை விட்டே போற அளவுக்கு புண்படுதிட்டாணுக..அப்படி என்னதாண்ட அந்த ரெண்டு படத்துலயும் இருக்குதுன்னு பார்த்தா பாம் இல்லை..பிஜ்லி வெடி வைக்குற அளவுக்கு கூட சமாசாரம் எதுவுமில்லை பெருசா...தனக்கு விளம்பரம் தேடுறேன்னு பேருல படத்துக்கு விளம்பரம் பண்ணிட்டணுக.யாரு பேத புள்ளையோ..நல்லா இருக்கணும் சாமி..பார்ட்-2 வர போகுதாம்..ரெடி யா..

ஒவ்வொரு வருஷமும் கடந்து போகும்போது நமக்கு சொல்லிட்டு போறது ஒரே விஷயம் தான்.அதைதான் நானும் சொல்லபோறேன்..என் வருஷத்துல இருந்த நீ அடுத்த வருஷத்துல இருப்பியானே தெரியாது..அப்புறம் ஏன் இந்த கொலை,கொள்ளை,வஞ்சம்,வெறி,காமம்,லஞ்சம்,துரோகம் எல்லாம்...அடுத்த வருஷம் இருந்தா மனிதனாக வாழ முயற்சி செய்.மிருகமா,அடிமையாய் வாழாதே...2014 - உங்களை அன்புடன் வரவேற்க காத்திட்டு இருக்கு..சென்று வருகிறேன்.


இப்படிக்கு
2013