Friday 17 August 2012

குமார்:மச்சான்...இன்னிக்கு எப்படியாச்சும் லவ் வ சொல்லிடனும் டா

சுகு:யாருகிட்டடா?

குமார்:டேய்...என்னடா கேள்வி இது...என் ஆளு கவி கிட்ட தான்.

சுகு:சாரி டா..தினம் பல பொண்ணுகளை பார்க்கிறோமா.அதான் குழம்பிட்டேன்.

குமார்:எப்படியாச்சும் இன்னைக்கு என் மனச ஓபன் பண்ணிடனும் அவகிட்ட.

சுகு:இததாண்டா மூணு வருஷமா சொல்றான்.இந்தா கேப்புல பல பேரு அவகிட்ட சொல்லிடாணுக.உன் கெட்ட நேரம்,அவனுங்க நல்ல நேரம்.....எதையும் அவ ஒத்துக்கல.

குமார்:என்னங்கடா நக்கலா...அவ அருமை உங்களுக்கு எங்க தெரிய போகுது.

பாண்டி:அவ அருமை,பெருமைய தெரிஞ்சிக்கிட்டு அவ பேருல புக்கா ரிலீஸ் பண்ண போறோம்.நீ முதல உன் லவ்வ ரிலீஸ் பண்ணுடா.

குமார்:பண்ணுறேன் டா.பாரு.அதோ என் ஆளு பஸ் வருது.

சுகு:உன் ஆளு பஸ் சா.உன் ஆளு வர பஸ்.

குமார்:லொள்ளு டா.வா வா பஸ் ல ஏறுவோம்.டேய்,லவ்வ சொல்ல போறேன்.வலது கால் வச்சி ஏறவா?

பாண்டி:வலது காலோ,இடது காலோ.பார்த்து ஏறு.தவறிச்சுன்னு வை,ரெண்டு காலும் மிஸ்டு கால் தாண்டியோவ்.

குமார்:ஏண்டா வாயா வைக்குறீங்க.

பாண்டி:அட அக்கறையா சொன்னா...எதுவும் சொல்லல ராசா,நீங்க போய் காதல் கொடிய நடுங்க போங்க.

சுகு:மச்சான்...இவன் லவ்வ சொல்வான்னு நினைக்குற?

பாண்டி:கண்டிப்பா சொல்வான்.என்ன அந்த பொண்ண தவிர்த்து,மத்த எல்லார்கிட்டயும் தான் அவள லவ் பண்றதா சொல்வானே தவிர அந்த பொண்ணுகிட்ட சொல்லமாட்டான்.

சுகு:ஏண்டா அப்படி?

பாண்டி:ஏன்னா மத்தவங்க கிட்ட சொன்னா கேட்டுட்டு போய்டுவாங்க.அவகிட்ட சொன்னா ஓங்கி ஒன்னு விட்டுட்டு போய்டுவா.அதான்.

சுகு:ஹஹஹஹஹஹா.....சரி சரி...துரை என்ன பண்ணுறாரு னு பார்ப்போம்.

குமார்:(க..க..க..கவி...நான்..உ..உ..உன்னை..உன்னை...)

சுகு:என்னடா காதல சொல்றத என்னமோ கடவுள் வாழ்த்து சொல்ற மாதிரி இப்படி தினறான்.இவன் சொல்லி முடிகிறதுக்குள்ள பஸ் ஸ்டாப் வந்திடும் போல.இதயம் முரளிய விட மோசமா இருக்கானே.

பாண்டி:டேய்..டேய்...குமாரு....

குமார்:என்னடா...?

பாண்டி:என்னடா பண்ற?

குமார்:எப்படி லவ் சொல்றதுன்னு எனக்குள்ளையே சொல்லி பார்க்கிறேண்டா

சுகு:ஐயோ....மூணு வார்த்தைய சொல்ல மூணு வருஷமா முக்கு முக்கு னு முக்குறானே.இவன் முக்குறது பத்தாதுன்னு எங்களையும் வேற பாடாய் படுத்துறான்.

பாண்டி:இவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள எங்க சோலிய முடிச்சிடுவான் போல.

குமார்:க.க.கவி...

கவி:அஹ..ஹே குமாரு...நீயா...நேத்தே உன்கிட்ட சொல்லணும் னு நினச்சேன்.மறந்துட்டேன்.

குமார்:அப்படியா...நான்கூட உன்கிட்ட ஒன்னு சொல்லணும் பா.

கவி:இஸ் இட்.வாட்ஸ் தெட்?

சுகு:பார்த்தியா...முனிசிபாலிட்டி ஸ்கூல் ல படிச்சிட்டு மோனலிசா கணக்கா பீட்டர் வுடுறத.

குமார்:அது..அது..அது வந்து..

பாண்டி:அதான் வந்துடியேடா...சொல்லி தொலைடா சொம்பி பயலே.

குமார்:நான் உன்கிட்ட...உன்னை..

கண்டக்டர்:தம்பி டிக்கெட் எடுத்தியா....

சுகு:அவன் ஸ்பீட் எடுக்குறதே பெரும் பாடு.இதுல ஸ்பீட் பிரேக்கர் வேறயா.விளங்கும்.

குமார்:டிக்கெட்டா..முன்னாடி என் பிரெண்ட்ஸ் இருக்காங்க.அவங்க எடுக்கிறாங்க.

பாண்டி:என்னது நாங்க எடுக்குறோமா..அடப்பாவி,இவன நம்பி தான நாமலே வெறும் பேக்கட்டோட வரோம்.இதுல எங்கத்த இவனுக்கு எடுக்க.

கண்டக்டர்:தம்பிகளா..அந்த தம்பிக்கும் சேர்த்து நீங்க டிக்கெட் எடுக்குறீங்களா?

சுகு:நாங்களா...?

பாண்டி:ஓகே.ஆமா கிரெடிட் கார்டு அசெப்ட் பண்ணுவீங்களா?

கண்டக்டர்:என்னது கிரெடிட் கார்ட்டா?

பாண்டி:யாஹ்...தென் விசா கார்டு,மாஸ்டர் கார்டு..அட் லீஸ்ட் விசிடிங் கார்டாச்சும் அசெப்ட் பண்ணுவீங்களா?

கண்டக்டர்:ஒ..வித் அவுட் பார்டியா நீயு.அதான் சவுண்ட் ஓவரா இருக்கு.நீங்க கேட்ட கார்டு எல்லாம் ப்ளைட் ல தான் அசெப்டு பண்ணுவாங்க.அதுல போ வேண்டிதானடா 

சுகு:அதுல போக வுட்டா நாங்க ஏன்யா இந்த டப்பா வண்டில வரோம்.

கண்டக்டர்:என்னடா சொன்னா?

சுகு:அஹ..அது...நத்திங்.ஜஸ்ட் ஜோக்....ஹேவ் எ ஹேப்பி ஜெர்னி டு ஆல்..அஹ.பை..ப..பை...

பாண்டி:என் தாத்தா அப்பவே சொல்லுச்சு....சிரிக்கும் பெண்ணை நம்பு,அவளை பார்க்கும் நண்பனை நம்பாதே னு .நான்தான் சரியாய் கேக்கல.

சுகு:ஏன்டா கேக்கல?

பாண்டி:அப்போ நான் தூங்கிட்டு இருந்தேண்டா.அதான் சரியாய் கேக்கல.

சுகு:த்து...வா..

குமார்:(அப்பாடா ஒழிஞ்சாணுக...இனி நிம்மதியா நம்ம லவ்வ சொல்லலாம்)...கவி நீ டிக்கெட் எடுத்திட்டியா?

கவி:அஹ..நான் எடுத்திட்டேன்.நீ எடுக்கலையா?

குமார்:இன்னுமில்லை.

கவி:பஸ் பாஸ் எடுக்கலாம் ல.

குமார்:டைம் பாஸ்சுக்கு பஸ் ல போறவனுக்கு எதுக்கு பஸ் பாஸ்.அதான் அதையும் எடுக்கல.

கவி:ரொம்பத்தான் லொள்ளு.இப்போ கண்டக்டர் வந்து கேட்பாரே என்ன பண்ணுவ.

குமார்:அதான் நீ இருக்கியே.எனக்கு டிக்கெட் எடு.

கவி:உனக்கு நான் டிக்கெட் எடுத்தா,நீ எனக்கு என்ன கொடுப்ப?

குமார்:(என்னையே கொடுப்பேன்)..அஹ..தேங்க்ஸ் னு சொல்லி கை கொடுப்பேன்.

கவி:அஹ..தோடா..உன் கைய வச்சிக்கிட்டு நான் என்ன பண்ண?

குமார்:என் கைய ஷேக் பண்ணு.

கவி:ஹஹஹஹா...போடா...இறு டிக்கெட் எடுத்திட்டு வந்து கேக்குறேன்.

குமார்:என்ன கேட்பா...கைமாத்தா காசு கேப்பாளோ...ச்ச..ச்ச...டிக்கெட் எடுக்கவே வக்கில்லாம இருக்கோம்.நம்மகிட்ட ஏன் கேட்க போறா...ஒருவேளை அவளும் லவ் சொல்லுவாளோ...ஐயோ ஒன்னுமே புரிலயே 

கவி:குமாரு....இந்தா டிக்கெட்.

குமார்:(அடடா...ஒரு டிக்கெட்டே டிக்கெட் தருகிறதே...)

பயணி:செருப்பால அடி

குமார்:என்னது....

பயணி:குடுத்த காச கேட்ட சவுண்ட் விடுறானா...செவுலு திரும்பிடும் னு சொல்லு...

குமார்:(ச்ச..போன் பேசுறானா...என்ன சொல்ற மாதிரியே இருக்கு...)

கவி:குமாரு..குமாரு..

குமார்:அஹ..என்ன கவி..

கவி:என்னாச்சு..ஏதோ பலத்த சிந்தனை போல.ஏதோ சொல்ல வந்தல.என்னது?

குமார்:அஹ.லேடீஸ் முதல.நீ சொல்லு..

கவி:ஹிஹி....அது ஒன்னுமில்லை...

குமார்:ஒன்னுமில்லையா...அப்போ விடு

கவி:ஹே..ஒன்னு இருக்குபா....சொல்ல தயக்கமா இருக்கு.

குமார்:(லவ் தான்.கள்ளி....சட்டுன்னு சொல்லுடி..)பரவால சொல்லு.என்கிட்ட என்ன தயக்கம்.

கவி:உன்கிட்ட தான் தயக்கமே.இதனை நாளா பிரெண்டா பலகிட்டோம்மா.அதான்.

குமார்:கூல்.தைரியமா சொல்லு.என்ன மேட்டர் னு.

கவி:லவ் மேட்டர் தான்.

குமார்:(குமாரு...அவளே ஓபன் பண்ணிட்டா...இனி என்னடா வெட்கம்.எலேய் சுகு,பாண்டி...தேறாது னு சொன்னீங்களே...தேத்திட்டேன் பார்த்தீங்களா.இப்போ சொல்றேன்..)நம்ம பாண்டியு...

கவி:கிரேட் டா குமாரு..பாண்டிய தான் நான் லவ் பண்றேன்.இத அவன்கிட்ட எப்படி சொல்றது னு தவிச்சேன் ரொம்ப நாளா.நல்லவேளை நீயே புரிஞ்சிகிட்ட.நீ எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான பிரெண்ட்.சோ,நீதான் இதை அவன்கிட்ட சொல்லி ஓகே பண்ணனும் டா.நீ மட்டும் இதை ஓகே பண்ணேன்னு வையு எங்களுக்கு புறக்க போற குழந்தைக்கு உன் பேரையே வைக்குறேன்.அது பொம்பள குழந்தையா இருந்தாலும் சரி.

குமார்:(அடிபாவி...உனக்கு காதலனா வரலாமுன்னு பார்த்த,உன் காதலுக்கு தூதுவனா அனுபிட்டிஎடி...உன்னை......ஒன்னும் பண்றதுக்கில்லை.டிலே பண்ணேன் பாரு,என்ன சொல்லணும்.)

கவி:என்னடா ஓகே வா...இத சொன்னா அவன் உருகிடுவான் லா.

குமார்:(எதிர்லயே நான் ஒருத்தன் உருகிட்டுகிடக்கேன்.என்ன வுட்டுபுட்டு எங்கேயோ இருக்கிறவன் பத்தி பேசுறாலே சண்டாள சிறுக்கி)

கவி:அவன நினச்சாலே உள்ளுக்குள்ள என்னனமோ பண்ணுதுடா

குமார்:(ஏண்டி பண்ணாது...உனக்காக பில்டிங் கட்டுனது நான்.குடியேற போறது அவனோடயா....நீங்கலாம் நல்லா வருவீங்கா )

கவி:குமார் ஸ்டாப் வந்துடிச்சு.

குமார்:(புரிது.கிளம்புறேன்.)

கவி:குமார்,உன்னைத்தான் நம்பிரிக்கேன்.கவுத்துடாதடா....பை.

குமார்:உன்னை நம்பிரிந்தேன்.என்னையே கவுத்துட்ட.இதுல நான் எங்கத்த உன்னை கவுக்க.

சகு:என்னடா மச்சான்...லவ்வ சொல்லிட்டியா?

பாண்டி:அட என்னடா இதெல்லாம் கேட்டுகிட்டு இருக்க.அவன் மூஞ்ச பாரு.லவ்வ புட்டு புட்டு வச்சிடாண்டா....என்ன மாப்புள,நான் சொல்றது ரைட் தான?

குமார்:புட்டு புட்டு  வச்சேன்னா...புட்டு கிச்சுடா

சுகு:என்னடா சொல்ற.என்னாச்சுடா...

குமார்:அவ ஒருத்தன லவ் பண்றாளாம்.அதுகூட பரவாலை டா.அதுக்கு என்னையே தூது அனுப்பினா பாரு.அதுதாண்டா எண்ணலா பொறுக்க முடில.

பாண்டி:என்னா கொழுப்பு அவளுக்கு...அவன் யாரு னு சொல்லுடா...கையா கால பிரிச்சி தோரணமா தொங்க விடுறேன்.

குமார்:அது உன்னால முடியாதுடா

பாண்டி:டேய்..என்ன சொன்னா...என்ன பார்த்து சொல்லு...என்னால முடியாதா...டேய் சுகு என்ன பத்தி தெரியல இவனுக்கு இன்னும்.நான் அடிச்சா அண்ட சராசரமே அட்ரஸ் இல்லாம போய்டும் டா.ஆளு யாருன்னு மட்டும் சொல்லு.நாங்க பார்த்துக்கிறோம்.

குமார்:அவன் இங்கதாண்ட இருக்கான்.அதுவும் என் எதிர்ல தாண்டா இருக்கான்.

பாண்டி:வாட் டூ யு மீன்?

குமார்:மீன் இல்லடா.கருவாடு..இனி உனக்கு சுடுகாடு.டேய்,துரோகி...கூடவே இருந்து குழி பறிச்சிட்டியேடா

சுகு:டேய்,என்னடா சொல்ற...இவன் என்னடா பண்ணான்

குமார்:அவ லவ் பண்றதே இவனதாண்டா 

சுகு:என்னது இவனையா...அடபாவி,எனக்கும் துரோகம் பண்ணிட்டியேடா.

குமார்:உனக்குமா..என்னடா குழப்புற.

சுகு:நீ ட்ரை பண்றேன்னு தான் நான் சும்மா இருந்தேன்.ஆனா இப்போ இவனும் ட்ரை பண்ணிரிக்கான்.ச்ச...சொல்லிரிந்தா நானும் வந்துரிப்பேன் ல.மூணு பெரும் சேர்ந்து பண்ணிரிக்கலாம் ல.என்ன மட்டும் டீல் ல விட்டீங்கலேடா....

குமார்:அடிங்க....இவன் ஓகே பண்ணாதே தப்புன்னு சொல்றேன்.இதுல நீ வேறயாடா....கொன்னுடுவேன்.

சுகு:இல்லடா,எப்பவும் எதுலயும் ஒண்ணா இருக்கிற நாம இதுலயும் ஒண்ணா செயல்பட்டு இருக்கலாமே என்ற ஆதங்கம் தான்.வேறொன்னும் இல்லடா

குமார்:இவன் ஒருத்தன்.டேய் பாண்டி,அவ எப்படி டா உன்னை லவ் பண்ணா?

பாண்டி:அததாண்டா நான் யோசிச்சுகிட்டு இருக்கேன்.அவ எப்படி என்னை லவ் பண்ணா...என்கிட்ட இருக்கிற எது அவளை இம்ப்ரெஸ் பண்ணுச்சு னு யோசிக்கிறேன் டா...பட் எதுவும் புலபடலை....உனக்கு எதாச்சும் தோணுதா மச்சான்.

குமார்:நான் இங்க நூந்து நூடுல்ஸ் ஆகிருக்கேன்.நீ என்னடானா எப்படின்னு கேட்டு என்னையே உசுபேத்துரியா?

பாண்டி:மச்சான்...கோபப்பட்டு கண்ட இடத்துல அடிச்சிடாத.அப்புறம் உன் தங்கச்சிக்கு நீ பதில் சொல்ல வேண்டிருக்கும்.

குமார்:அது யாருடா என் தங்கச்சி?

பாண்டி:ஹிஹிஹி..வாட்ஸ் நான்சென்ஸ் யு ஆர் ஆஸ்கிங்...இட்ஸ் கவி டா...மை வுட்பி..

குமார்:அடிங்க...உடுப்பி ஹோட்டல் ல ஒ.சி ல சாப்பிடுற பக்கி,உனக்கு வுட்பி கேக்குதா...மவனே இன்னியோட நீ காலி டா.....

பாண்டி:மச்சான்................................

Friday 10 August 2012

ரோமேன்ஸ் 

புதிதாய் ஒரு பரவசம் 
புது உலகில் என் பிரவேசம் 

மேலே நிர்வாணமான வானம் 
வெண்மேகத்தை புத்தாடையாய் உடுத்திக்கொள்ள 
கீழே நீலக்கடல் கரை வந்து கரகோஷம் எழுப்ப 

வீசுகின்ற தென்றல் காற்றும் 
தேகத்தினுள் உரசி செல்ல 

கூச்சலிடும் மனிதர்கள் பேச்சும் 
கீச்சுகின்ற பறவையாய் தோன்ற 
அகிலமே அழகாய் தெரிந்தது 
என் அழகி என் அருகில் அமர்ந்ததும் 

கருப்பு கூட அழகு என்று 
அவள் கூந்தல் அசையும் போது புரிந்தது 
சிகப்பு கூட சிறப்பு என்று 
அவள் கன்னம் சிவக்கும் போது புரிந்தது 
வெண்மை கூட எளிமை என்று 
அவள் சின்ன சிரிப்பின் போது புரிந்தது 
நானும் கூட கவிஞன் என்று 
அவளை நினைக்கும் போது புரிந்தது 
அவளும் என் தாய்தான் என்று 
என் வலியால் அவள் விழியில் தெரிந்தது 

அவள் இமை போன போக்கிலே 
என் இதயமும் உடன் பயணித்தது 
அவள் கரம் பிடிக்கும் நோக்கிலே 
என் விரல்களும் விரல் கோர்க்கிது 

வாஞ்சையுடன் என் நெஞ்சில் சாய்ந்ததும் 
பிஞ்சு குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்தேன் 
முகத்திலே அவள் முடியும் படர்ந்ததும் 
மயில் தோகையின் வருடல் உணர்ந்தேன் 

உடல்களும் இருக்கமாய் இருந்தும் 
உள்ளமோ இறகாய் இருந்தது 
வெட்கம் அவள் இமைகளில் இருந்தும் 
வெட்கப்பட்டு மறைவில் இருந்தது 

என்னைவிட என்னை நேசிக்க 
காதல் கொண்ட தாயும் நீயே 
என்னுள் என்னை நானே கண்டிட 
காதல் தந்த சேயும் நீயே 
ரவுசு 

புதுசா ஒரு பீலிங் 
புது ரிலீசா ஐ அம் கம்மிங் 

ஜிலோன்னு கீது வானம் 
அதுல பலூன்னா போது மேகம்

சரக்கடிச்ச கணக்கா கீது பீச்

அடிக்கிற உப்பு காத்தும் 
அடிக்காமலே மப்ப ஏத்தும்

சவுண்ட் வுடுற சில்லறை பீஸும் 
ரவுண்டு அடிக்கிற bird டா தெரியும் 
ஹோல் வேர்ல்ட் டே கோல்ட் டா தெரியும் 
என் ஆளு என்னாண்டா இருந்தா 

கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு 
அவ மூடி காத்துல ஆடும்போது ஜோரு
ரெட் ஒரு டேன்ஜெர் ஆன கலரு 
என் ஆளு மூஞ்சி காண்டாகும்போது பாரு 
வைட் ஒரு லைட்டான கலரு
அவ சிரிப்பிலதான் லைட்ஹவுஸ் பாரு 
நான்கூட வாலி தாண்டா மாமு 
அப்படி ஜாலியாக காட்டுவேண்டா பிலிம் 
அவளும் என் ஆத்தா தாண்டா மாமு 
நா ஜாம் ஆனா அவ கண்ணுல பாரு டேம் 

அவ போடுற கோடு தான்
நான் போற ரோடு தான் 
அவ ஹேண்ட் பிடிக்க வேணும் 
அதுக்கு அவ பிரெண்டா ஆவேன் நானும் 

ஜாலியா அவ என்மேல சாய்ஞ்சா 
பேபியாகுது வயசு 
மூஞ்சுல அவ ஹேர் பட்டா
air ஆகுது மனசு 

க்ளோஸ் சா நாங்க இருந்தாலும்
லேசா கீது மனசு 
அவ லவ்ஸ் எனக்கு தெரிஞ்சாலும் 
டபாய்குது அவ ஐஸ் 

பொத்தி பொத்தி வளர்ப்பாடா 
அவ என் லவ்வரா வந்த ஆத்தா 
நான் பார்த்து பார்த்து வளர்ப்பேண்டா 
அவ என் லவ் தந்த பேட்டா