Sunday 22 November 2015

வாழ்க்கை வாழ்வதற்கே

Situation two-A young man with his positive outlook in life.

SONG:

உனக்கென எனக்கென 
தனி உலகம் இல்ல.
இதை உணர்ந்திட்டா 
நமக்குள்ள கலகம் இல்ல.

இருப்பதோ
ஓர் உலகம்.
வாய்ப்பதோ
ஓர் வாழ்க்கை.
மனமிருந்தால் நமக்கு வானம் இல்லை.

கரை தொடாமல் அலை போவதில்லை.
கறை படாமல் யாரும் வாழ்ந்ததில்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சுற்றம் துறந்தால் வாழ்க்கை இல்லை.

இழக்கத்தான் உயிருண்டு,
ஜெயிக்கத்தான் உலகுண்டு,
வாழ்க்கைதான் நமக்குண்டு,
வா வா வா...வாழ்ந்து பாப்போம்.
சேர்ந்தேதான் உலகை ஜெயிப்போம்.

எனக்குள் ஒருத்(தீ)

Situation one- A young man from Chennai sees a girl and instantly loses his heart. More than her beauty, her resilience in her eyes strikes him the most. His heart soars at this unknown feeling that surely must be love.

SONG:

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா.

வலியினில் துடித்திடும் 
விழியினில் தெரிந்திடும்
உன் உறுதிக்கு வியந்தேன் தோழியே..

எதிர்வரும் தடைகளை
எதிர்த்திடும் துணிவினை
உன் செயல்வழி உணர்ந்தேன் தோழியே..

எதையும் தாங்கும் இதயம் உனக்கு..
உன்னை தாங்கும் இதயம் எனக்கு..
உன்மேல் கொண்டேன் காதல் கிறுக்கு..
ஏற்றுகொள்ளடி தோழியே தோழியே.. 

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா..

Tuesday 3 November 2015

வக்கிரத்தின் வலி

வணிக நகர வாலிபன்
கணினியில் தொலைத்த கண்ணை மீண்டெடுத்து
இரவு நேர உலா செல்ல,

கண்ணெதிர உலகத்தை உள்ளடுக்கும் அலைப்பேசியில்
நவநாகரிக பெண் ஒருத்தி அளவளாவ..
வைத்த கண் வாங்காது
உடலின் அமைப்பை உடையின் அளவோடு ரசித்தபடி
"செம பீஸ்" என கூறிக்கொண்டு நடை பயணிக்க,

கண்ணுக்கு விருந்தளித்த மனசு வயித்துக்கும் விருந்தளிக்க தூண்ட
தள்ளுவண்டியில் நடுத்தர வர்கத்தின் நட்சத்திர உணவகத்தில்
சில பல தோசைகளை முழுங்கிய வாறே
அன்னமிட்ட அஞ்சலையின் அங்கத்தை
உணவின் சூட்டோடு சூடாக ரசித்தபடி
மனதுக்குள் "நாட்டு கட்டை" என்று எண்ணியவன்,

புகை போட பொட்டிகடை செல்ல
அருகில் தெரு சுத்தம் செய்யும் பெண்ணின்
சரிசெய்யப்படா ஆடைவழியே தெரியும் இடையை
இமை கொண்டு இச்சித்த படி "சூப்பர் பிகரு" என நகர்ந்தவன் கண்ணில்

கணினி கம்பெனி கன்னி காரில் வந்திறங்க,
ஆங்கிலேயர் கீழ் பணிபுரிபவள்
ஆங்கிலேயனுக்கே பணிபுரிபவலாய் எண்ணி "ஐயிட்டம்" என முனுகிகொண்டே நடக்க.
 அலைப்பேசியில் மணி அடிக்க,
"ஏரியா பசங்க கிண்டல் பண்ணிச்சின்னு தங்கச்சி தற்கொலை பண்ணிகிட்டா"ன்னு அம்மா குரல் ஒலிக்க,

ஒரு கணம் அவன் மனதில் பெண் குறித்த தன் வக்கிரத்தால் வலி உண்டாவதை உணர்ந்தான்.