Wednesday 26 September 2012

அன்பு

சேகர்:உங்கம்மாக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.மளிகை சாமான் லிஸ்ட் ல அளவு ஜாக்கெட் துணி பத்தி எழுதி வச்சுருக்கா.கடைக்காரன் என்னைப்பார்த்து சிரிக்குறான்.

அருண்:அட,அம்மாக்கு வயசாகுதுல..அதான் மறந்து போய் எழுதி இருப்பாங்க.

சேகர்:ஏன் எனக்கும் தான் வயசாகுது.நான் எதையாச்சும் மறந்தேனா?

(shift to home)

அமுதா:அவுரு எதைத்தான் மறக்கலை.தலைக்கு தேய்க்கிற எண்ணெய்ல இருந்து காலுக்கு போடுற செப்பல் வரைக்கும் ஒவ்வொண்ணுத்தையும் எங்கயாச்சும் மறந்து வச்சிட்டு,பின்னாடி.."அமுதா,இங்க வச்ச சீப்ப பார்த்தியா,சோப்ப பார்த்தியான்னு" கேட்குறது..இதுல என்ன சொல்றாரு.

அஞ்சலி:பின்ன மளிகை சாமான் லிஸ்ட்ல ஜாக்கெட் துணி பத்தி எழுதுனா என்ன சொல்றதாம்.

அமுதா:தெரிஞ்சா எழுதுனோம்.ஏகப்பட்ட வேலை..ஏதோ குழப்பத்துல அப்படி எழுதிட்டேன்.இதுக்கு போய் கத்துறாரு..

அஞ்சலி:ஐயோ,அம்மா..அப்பா திடீர்ன்னு வந்திட கிந்திட போறாரு.அப்புறம் நீ பேசுறதை கேட்டுட்டாருன்னு வை...

அமுதா:கேட்டாருன்னா என்ன...என்னை திட்டிடுவாரோ..

(back to road)

சேகர்:திட்டாம,தூக்கி வச்சி கொஞ்ச சொல்றியா.அன்னைக்கு அப்படிதான் டி.நகர் போயிட்டு துணிமணி,நகை எல்லாம் வாங்கிட்டு பஸ் ல வரும்போது பையை தொலைச்சிட்டா.நல்லவேளை போனது துணிப்பையா போச்சு.நகை பையா இருந்துருந்தா..

அருண்:அதான் போலையே..

சேகர்:அடிச்சேன்னா...போலையாமே..போய் இருந்தா என்ன பண்ணுவ.தங்கம் விக்குற விலைக்கு,நம்மள மாதிரி ஆளுகளுக்கு,ஒரு கிராம் கூட ஒரு கிலோ தான்.அப்படி இருக்கையில பத்து சவரன் நகை.ரொம்ப சாதாரணமா சொல்ற.

அருண்:அப்படி இல்லப்பா...அம்மாக்கும் அன்னைக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.வேணும்னா பண்ணாங்க.ஏதோ நினப்புல மறந்திடுறாங்க.

சேகர்:என்னடா நினைப்பு..ஒரு பொண்ணுக்கு அவ புருஷன்,புள்ளைகுட்டி,குடும்பம் பத்தின நினைப்புதான் எப்பவும் இருக்கும்.நாமதான் அவ கூடவே இருக்கோம்ல.அப்புறம் நம்மளை விடவும் வேற என்ன நினைப்பு வேண்டிகிடக்கு?

(back to home)

அமுதா:வேற நினைப்பே இருக்க கூடாதா.போன வாரம் என் தம்பி வந்தான்ல.முகம் குடுத்து நாலு வார்த்தை முழுசா பேசுனாரா.ஏதோ வேண்டா வெறுப்பால பேசுனாரு.பாவம் அவன் முகமே வாடிபோச்சு.அதை நினைச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு.கொஞ்சம் இறங்கி போனாதான் என்னவாம்?

(back to road)

சேகர்:எதுக்கு இறங்கி போகணும்.நாம தப்பு பண்ணி இருந்தா,ஏதோ ஈகோ பார்க்காம இறங்கி போய் மன்னிப்பு கேட்கலாம்.தப்பு பண்ணது பூரா உங்கம்மாதான்.அப்புறம் நான் இறங்கி போகணும்னா எப்படி.அவளுக்கு அப்படி என்னடா கோபம்.

அருண்:அம்மாவோட கோபமே நீங்க மாமா கிட்ட கோபப்பட்டது தான்.

சேகர்:அதுக்கு நான் காரணம் இல்லை.அவன் பொண்ணு மீனுவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஒரு நாள் லேட்டா போயிட்டேன்.ஆனாலும் உங்களை முன்னாடி அனுப்பி வச்சுட்டேன்ல.அதப்பார்க்கலை,நான் லேட்டா வந்துட்டேன் என்பதை மட்டும் புடிச்சிக்கிட்டு அந்த குதி குதிச்சான்.அதான் கோபம்.அதுக்குன்னு வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னேன்னா இல்லை வந்தபோது பேசாம போனேன்னா.எல்லாம் யாருக்காக.அவளுக்காக தான.இதை புரிஞ்சிக்காம என்மேல தப்புன்னா..

(back to home)

அமுதா:அவர் மேலதான் தப்பு.ஏதோ தெரியாம கோபத்துல கத்திட்டான்.ஏன் இவுருகூட தான் தினமும் கத்துறாரு.அதுக்குன்னு நாம கோபப்பட்டு பேசாம கிடக்கோமா.நல்லாதானே பேசுறோம்.இவுருக்கு மட்டும் என்னவாம்.

அஞ்சலி:என்னம்மா,அப்பா மாமா கிட்ட சரியாய் பேசலைன்னாலும் மீனுகிட்ட நல்லாதானே பேசுனாரு.அவளை ஆசிர்வாதம் பண்ணி புது டிரஸ் எல்லாம் குடுத்தாருல.

அமுதா:அதை நான் ஒன்னும் சொல்லலையே.அந்த விஷயத்துல உங்கப்பாவ குறை சொல்ல முடியாது.என்ன கோபம் வந்தாதான் கிறுக்கு பிடிச்சிடும் அந்த மனுஷனுக்கு..

அஞ்சலி:அம்மா,அம்மா...உஸ்ஸ்ஸ்...அப்பா வராரு.

சேகர்:அஞ்சலி,இந்தா மளிகை சாமான்.எல்லாம் சரியாய் இருக்கான்னு ஒருவாட்டி பார்த்துக்க சொல்லு.அப்புறம் அது இல்லை,இது இல்லைன்னு எப்பவும் போல எதையாச்சும் மறந்திட்டு கத்தபோறாங்க.

அமுதா:அருண்னு,நாங்கலாம் எப்பவாச்சும் தான் மறப்போம்.எப்பவும் மறக்கிற பழக்கம் அவுருக்குதான்னு சொல்லு.கொண்டாடி லிஸ்ட்ட.

அஞ்சலி:நீங்க ரெண்டு பேருமே சரியான ஞாபக மறதிதான்.

சேகர்.அமுதா:என்ன சொல்ற?

அருண்:ஆமாம்.அவ சொல்றது சரிதான்.அதை மறந்திட்ட,இதை மறந்திட்டேன்னு ஒருத்தரை ஒருத்தர் திட்டிகிறீங்கள்ள.இன்னைக்கு உங்க கல்யாண நாள் என்பதை நீங்க ரெண்டு பேருமே மறந்துடீங்கலே.இப்போ என்ன சொல்றதாம் உங்களை.

சேகர்:அட ஆமா...

அஞ்சலி:ஹிஹி.இந்தாங்க உங்களுக்காக வாங்குன கேக்.எங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு,இந்த கேக்கை வெட்டுங்க ரெண்டு பேரும் சேர்ந்து.

அமுதா:ஆமா,அது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ.போடா...

அருண்:அம்மா....

(அம்மாவின் கையை பிடித்து செல்ல கோபத்தோடு பார்க்க)

சேகர்:சரி,சரி..அதான் பசங்க ஆசைபடுறாங்கள்ள.வா இங்க.

(இருவரும் சேர்ந்து பிள்ளைகளை ஆசிர்வதித்து,கேக்கை வெட்டி பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்ட பின்னர்)

அருண்:இப்போ நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிகொங்க.

அமுதா:அதெல்லாம் முடியாது.

சேகர்:அட,பசங்க ஆசைபடுதுல.சும்மா அலட்டிக்காத..இந்த ஆ.ஆ......அவ்வளவுதான்.இப்போ எனக்கு ஊட்டு...முறைக்காத...பசங்க ஆசைபடுதுல.

அமுதா:ஆமா,ஆசை படுறது நீங்க.சும்மா பசங்க ஆசைபடுதுல..பசங்க ஆசைபடுதுலன்னு அவங்களை காரணம்    சொல்லுவீங்க...ரொம்பதான்...இந்தாங்க..ஆ.ஆ...ஹஹஹஹா...

அருண்:இப்படியா கல்யாண நாளை கூட மறக்கிற அளவுக்கு சண்டை போடுவாங்க.

அமுதா:டேய்,சும்மா இருடா.என்னதான் அதை மறந்துட்டோம்,இதை மறந்துட்டோம்னு சண்டை போட்டாலும்,என்னை அவுரும்,அவரை நானும் எப்பவும் மறக்க மாட்டோம்.அதான் முக்கியம்.

சேகர்:சரியாய் சொன்ன அமுதா....

அஞ்சலி:ஆஹா,ஒன்னு கூடிட்டாங்கையா..ஒன்னு கூடிட்டாங்கையா.....இப்படியே பேசிகிட்டு நடுவுல எங்களை மறந்துடாதீங்க.

சேகர்,அமுதா,அருண்,அஞ்சலி:ஹஹஹஹஹஹஹஹஹஹாஆ

மலையளவு பிரச்சனையும் கடுகளவு சுருங்கி போகும் அன்பு வெளிப்படும்போது.
அன்புக்குண்டோ அடைக்கும் தாழ்,அந்த அன்பு பெருகும் நாம் இணைந்தால்.வணக்கம்.


Monday 24 September 2012

பிஞ்ச செருப்பு

ரூல்ஸ் ரோசப்பா:யுவர் ஆனர்,இதோ இங்கு நிற்கும் குஜ்லி குமாரி கடந்த சனிக்கிழமை கோவிலுக்கு போய் இருக்காரு.அப்போது வெளியே விட்டு சென்ற செருப்பு,திரும்பி வந்து பார்க்கும்போது இல்லை.அதை திருடியது இதோ இந்த குற்றவாளி கூண்டில் நிற்கும் சில்க் சிந்தாமணி தான் என்று உறுதியாக கூறுகிறேன்.

ரவுசு ராசப்பா:நோ.யுவர் ஆனர்,எனது கட்சிகாரர் சில்க் சிந்தாமணி மீது அபாண்டமா பழி போடுறாங்க.அவர் நிரபராதி.அதற்க்கு ஆதாரம் அதே கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சாண்டி மற்றும் செருப்புக்கு டோக்கன் போடும் மாக்கான்.

நீதிபதி:சில்க் சிந்தாமணி செருப்பு திருடலைன்னு உங்களுக்கு தெரியுமா?

மாக்கான்:ஐயா,அப்போ நான் தம் அடிச்சிட்டு இருந்தேன்.எனக்கு தெரிஞ்சு அவங்க திருடலையா.

பிச்சை:ஆமாயா,அவங்க திருடலையா.ஏன் எனக்கு பிச்சை கூட போடலையா.

ரூல்ஸ்:யுவர் ஆனர்,இவர்களை நான் விசாரணை பண்ண அனுமதி தாருங்கள்.

நீதிபதி:எஸ்,ப்ரொசீட்.

ரூல்ஸ்:முதலில் பிச்சாண்டி.

பிச்சாண்டி,பிச்சாண்டி.பிச்சாண்டி....

பிச்சை:ஐயா சாமி,தர்மம் பண்ணுங்கையா..

ரூல்ஸ்:நான் சொல்வதெல்லாம் உண்மை,உண்மைய தவிர வேறோன்றுமில்லைன்னு சொல்லணும்

ரவுசு:அதை ஏன் அவுரு சொல்லனுமுன்னு கட்டாய படுத்துறீங்க?

ரூல்ஸ்:அதை சொன்னாதான் அவுருக்கு காசு போடுவேன்.

பிச்சை:என்னது காசா...நீங்க சொல்றதெல்லாம் உண்மை..உண்மைய தவிர வேறொன்றுமில்லை.இப்போவாச்சும் தர்மம் பண்ணுங்கையா..

ரூல்ஸ்:பார்த்தீங்களா யுவர் ஆனர்.பிச்சை போடுறேன்னு சொன்னா,நான் சொல்றதை கூட அப்படியே சொல்ல தயாரா இருக்கிறார் இந்த பிச்சாண்டி.இவரை போன்றோர் சொல்வதை சாட்சியாக ஏற்கக்கூடாது.நீங்க போகலாம்.

பிச்சை:சாமி அப்போ காசு?

ரவுசு:கேஸ் போச்சு.அப்புறம் என்னடா காசு.

பிச்சை:சாமி,அப்போ நீங்களாச்சும் தர்மம் பண்ணுங்க.
ரூல்ஸ்:சாரி,சேன்ஜ் இல்லை.

பிச்சை:பரவாலை சாமி.ஒரு ரூபா கூட அசெப்ட் பண்ணுவோம்.ஆல்சோ,அம்பது காசு.

ரூல்ஸ்:அதெல்லாம் இல்லை.

பிச்சை:அதுவும் இல்லையா.அப்புறம் எதுக்கு இங்க இருக்கிற.என்கூட வா.நீதி நீதின்னு அலையுறதுக்கு பதிலா என்கூட வீதி வீதியா அலைஞ்சா வயித்துக்கு சோறாவது மிஞ்சும்.என்ன சொல்ற சாமி?

ரூல்ஸ்:கெட் அவுட் ஆப் மை சைட்.

பிச்சை:நீங்க சைட் அடிக்கிறதுக்கு நான் கெட் அவுட்டா.என்ன நீதியோ போ....ஐயா சாமி,,யாராச்சும் தர்மம் பண்ணுங்கையா..

மாக்கான்,மாக்கான்,மாக்கான்...

மாக்கான்:வணக்கம் சார்.

ரூல்ஸ்:வணக்கம் மிஸ்டர் மாக்கான்.நீங்க டோக்கன் போடுறதை தவிர்த்து வேற என்னென்ன செய்வீங்க?

மாக்கான்:கூட்டம் வரலைன்னா கடையாண்ட போய் ஒரு தம் போடுவேன்.

ரூல்ஸ்:அப்புறம்?

மாக்கான்: அடிச்ச தம்முக்கு காசு கேட்டா சண்டை போடுவேன்.

ரூல்ஸ்:தென்?

மாக்கான்:சண்டை போட்டதுல வலியா இருந்துச்சுனா நைட் ஒரு கட்டிங் போடுவேன்.

ரூல்ஸ்:தென்?

மாக்கான்:இப்படியே கேள்வி கேட்டா உங்களை போடுவேன்.

ரூல்ஸ்:அஹ,குட்.யுவர் ஆனர்,இதுல இருந்தே இவரோட வெளிப்படையான வெள்ளை உள்ளம் தெரிது பாருங்க.நீங்க போகலாம்.

மாக்கான்:அது..வரட்டா..

ரூல்ஸ்:யுவர் ஆனர்,இவர்கள் இருவரையும் விசாரித்ததில்..இருவருமே தவறு என்பது உறுதியாகி உள்ளது.

ரவுசு:அதெப்படி சொல்றீங்க?

ரூல்ஸ்:பிச்சைகாரன் பத்தி அல்ரெடி சொல்லிட்டேன்.டோக்கன் போடுறவர் கூட்டம் இல்லைன்னா தம் அடிக்க போய்டுவேன்னு சொன்னாரு.சம்பவம் நடந்த அப்போ தம் அடிக்க போனாருன்னு சொன்னாரு.சோ,அவரும் அப்போ அங்க இல்லை,கூட்டமும் இல்லை.அப்போதான் திருட்டு நடந்துருக்கு.சோ,ரெண்டு பேரும் சொன்னது ஏற்றுகொள்ள முடியாத,நம்ப முடியாத பொய்.ஆகையால்,சில்க் சிந்தாமணிதான் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகிறது.

நீதிபதி:சில்க் சிந்தாமணி அவர்களே...

சில்க்:மாமா....

நீதிபதி:அஹ....யேம்மா...

ரூல்ஸ்,ரவுசு:சார்.....

நீதிபதி:அஹ,அது,,தபு..ஏம்மா..இப்படிலாம் கூப்பிட கூடாது.மாமாக்கு ச்சா எனக்கு சங்கடமா இருக்குல.இந்த குற்றசாட்டை பத்தி என்ன சொல்றீங்க?

சில்க்:அதை நான் பண்ணலைங்க.என்ற மாமன் மேல சத்தியம்.ஏன்,உங்க மேலேயும் சத்தியம்.

நீதிபதி:என்னது என் மேலயுமா..ஈஸ்வரா...

ரவுசு:ஆம் நீதிபதி அவர்களே..அவர்கள் குற்றம் அற்றவர்.செருப்பு தொலைந்த போன சமயம் அவர் ஒரு கடையில் கடலை முட்டாய் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.அதற்க்கான ஆதாரம் இதோ அவர் சாப்பிட்ட கடலை முட்டாய் கவர்.இதில் அவரது கை ரேகை பதிந்திருக்கு.

ரூல்ஸ்:கண்ணால் காண்பதும் பொய்,மோர்ந்து பார்ப்பதும் பொய்,சாப்பிட்டு பார்ப்பதே மெய்.கவுரு கடலை முட்டாய்ன்னு சொன்னாலும் அவுரு சாப்பிட்டது பர்பி.கடலை முட்டாய் உருண்டையாக இருக்கும்.பர்பி தட்டையாக இருக்கும்.இதில் இருந்து என்ன தெரிகிறது?

ரவுசு:நீ கண்டமேனிக்கு கடலை முட்டாய் தின்னுறேன்னு தெரிது.

ரூல்ஸ்:ஒய்,அது இல்லை.இவர் சொன்னது பொய்.அந்த கடையில் இவரு தின்றது பர்பி தான்.அந்த செருப்பை திருடியது இவர்தான்.

சில்க்:ஐயோ,நான் சாப்பிட்டது வேணும்னா பர்பின்னு தெரியாம இருக்கலாம்.ஆனா,அந்த செருப்பை நான் திருடலைங்க.

நீதிபதி:அப்போ அந்த செருப்பை திருடியது யார்?

பூவாத்தா:அதை நான் சொல்றேன்.

நீதிபதி:நீங்க யாரு?

பூவாத்தா:அஹ,அந்த செருப்போட ஓனர்.பூ விக்குற பூவாத்தா.அது என் செருப்புங்க.

நீதிபதி:அப்போ இவங்க செருப்பு?

ஜெர்க்:அதை நான் சொல்றேன்.

நீதிபதி:நீங்க யாரு?

ஜெர்க்:நான் குஜ்லியோட ஓனர்.ஜெர்க் ஜெகன்னாதன்.

குஜ்லி:ஏன்னா...

ஜெர்க்:என்ன நோன்னா...ஜட்ஜ் சார்,அன்னைக்கு இவ செருப்பே போட்டுட்டு போல.பிஞ்சி போச்சுன்னு வீட்டுலையே விட்டுட்டா..

நீதிபதி:போடாத செருப்புக்கா கேஸ் போட்டேள்.ஆமா,செருப்பு எப்படி பிஞ்சுது?

ஜெர்க்:அதெல்லாம் எதுக்கு நோன்டுறேல்.அதெல்லாம் பர்சனல்.அதான் குழப்பம் போய்டுதேன்னோ.அதோட விடுங்கோ.தீர்ப்ப சொல்லி கேஸ்ஸ முடிங்கோ ஒய்.

நீதிபதி:தொலையாத செருப்பை தொலைஞ்சதா சொல்லி கேஸ் போட்டு கோர்ட் நேரத்தை வீணடிச்ச குஜ்லிக்கும்,அதுக்கு வாதாடுறேன்னு பேருல வறுத்தெடுத்த வக்கீல் ரூல்ஸ் ரோசப்பாவுக்கும் According to Slipper Robbery Act, sec.111 படி வறுக்கும் வெயிலில் செருப்பில்லாம நூறு முறை கோவிலை சுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறேன்.

குஜ்லி:ஏன்னா,இந்த கொடுமைய கேட்டேளா...

ஜெர்க்:என் பேச்சை நீ கேட்டுருந்தா இப்போ இந்த தீர்ப்பை கேட்க வேண்டி இருந்துருக்காது.ஆணி மேல செருப்பு பட்டாலும்,செருப்பு குள்ள ஆணி போனாலும் சேதம் என்னவோ செருப்புக்கு தான்.இனிமேலாச்சும் புரிஞ்சி நடை செருப்பில்லாம.


Tuesday 18 September 2012

லைட்டானிக்

கப்பலின் மேல் தளத்திற்கு சென்று கப்பலின் முன் பக்க முனையில் உள்ள கம்பியினால் மேரியும்,மாரியும் கையை விரித்த படி நின்று கொண்டு...

மேரி:மாரி...இந்த கப்பல்ல நிறைய இடங்கள் இருந்தும் நாம ஏன் இங்க வந்துருக்கோம் தெரியுமா?

மாரி:தெரியுமே.கீழே கரண்ட் கட்.அதான் காத்து வாங்கலாமுன்னு வந்துருக்கோம்.

மேரி:அது இல்ல.இந்த கப்பலை சுத்தி இருக்கிற கடல பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது?

மாரி:நீ எனக்கு தண்ணி காட்டுறேன்னு தோணுது.

மேரி:மாரி...சுத்தி எங்கும் கடல்,சில்லுன்னு காத்து,மாலை நேரம்,சூரியன் மறையும் அழகுல கடலே தங்கம் போல ஜொலிக்கிற இந்த அழகுல நீயும் நானும் இப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சு கை கோர்த்து நிக்கும் போது என்னமோ பண்ணுதுல.

மாரி:ஆமா பா.அடி வயிறு என்னமோ பண்ணுது.கீழ இறங்கிடலாமா?

மேரி:ச்சா ஏன் பயப்படுறீங்க.யாராச்சும் நம்மளை பார்த்துட்டா என்னாகும் என்ற பயமா.யாரு என்ன பண்ணாலும் சரி.ஏன்,இந்த கப்பலே கவுந்தாலும் சரி..

மாரி:என்னது...

மேரி:நம்ம காதலை அழிக்க முடியாது.

மாரி:அஹ,கப்பல் கவுந்த பின்னாடி நாமலே அழிஞ்சி போய்டுவோம்.அப்புறம் நம்ம காதல் அழிஞ்சா என்ன அழியாட்டி என்ன.

மேரி:தேவையில்லாம பயப்படாதீங்க.கொஞ்சம் அங்க பாருங்க,கடல் மேல பறக்கிற பறவைகள்..நம்மளையும் கூட பறக்க சொல்லி அழைக்கிற மாதிரி இல்லை..
கடல்ல இருந்து துள்ளி குதிக்கிற டால்பின்கள் நம்மளையும் துள்ளி குதிக்க சொல்ற மாதிரி இல்லை..
நம்மளை தொட்டு செல்கிற காத்து நம்ம மனசையும் லேசாக்கின மாதிரி இல்லை..

மாரி:அப்படியே கொஞ்சம் மேல பாரு..யமஹா பைக் ல வரமாதிரி எருமை மேல எமனும்,அவனுக்கு பின்னாடி வாடா பேராண்டின்னு என் தாத்தாவும் கூப்பிடுற மாதிரி இல்லை....

மேரி:ஏன்பா இப்படி பயந்து சாகுற.அப்படியே சாவு வந்தாலும் நாம ஒண்ணா போவோம்.

மாரி:ஒண்ணா போவோமா...என்னமோ ஹனிமூனுக்கு அயர்லாந்த் போறா மாதிரி சொல்ற.ரொம்பத்தான் ஆர்வம்.

மேரி:உன்கூட இப்படி தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எத்தன நாள் ஆசை தெரியுமா.நீ என்னடான்னா..

மாரி:நான் தப்பு சொல்லலை செல்லம்.ஏதோ டைனிங் ஹால்,டிஸ்கோ ஹால் னு சுத்துனா ஓகே.ஏன்,ஸ்விம்மிங் புல்லுல பில்லா பட பிகினி நயன்தாரா மாதிரி கும்முன்னு இல்லன்னாலும் யாரடி நீ மோகினி நயன்தாரா மாதிரி ஜம்முன்னு இருந்தா கூட உன்னை பார்த்துகிட்டே பொழுதை போக்கிடலாம்.அதெல்லாம் வுட்டுட்டு இப்படி ஜகம் மோகினி கணக்கா கத்தி முனைல நிக்குற மாதிரி கம்பி முனைல நிக்க வச்சிட்டியே.அதான் பேதில ச்சா பீதில பீலிங்.

மேரி:கூல்.ஆமா,நீங்க முதல் முறை என்னை பார்க்கும்போது உங்க மனசுல என்ன தோணிச்சு?

மாரி:நீ சுமாரான பிகருன்னு தோனுச்சு.

மேரி:யு.....சரி அத விடுங்க.இப்போ காதலிச்ச பிறகு என்ன தோணுது?

மாரி:உன்னபத்தி நான் நினைச்சது தப்புன்னு தோனுச்சி.

மேரி:என்ன சொல்றீங்க?

மாரி:ஆமா மேரி,உன்னை சுமாரான பிகருன்னு தப்பா நினைச்சுட்டேன்.இப்போதான் தெரிது,நீ படு சுமாரான பிகருன்னு.

மேரி:யு..ச்சி..போடா..அப்புறம் ஏன்டா என்னை லவ் பண்ண.வேற பொன்னை லவ் பண்ண வேண்டித்தானே?

மாரி:நானா மாட்டேங்குறேன்.எவளும் பண்ணலை.நீதான் பண்ணுற.அதான் என் மனசை உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன்.

மேரி:ஹிஹி...மாரி..நீங்களும் நானும் சாகுற வரைக்கும் இதே மாதிரி இருக்கணும்.

மாரி:இதே மாதிரியா...கிழிஞ்சிது...கொஞ்ச நேரம் நிக்குறதுக்கே டப்பா டான்ஸ் அடுத்து.இதுல சாகுற வரைக்கும் னா டண்ட நக்கா தான்.

மேரி:ஏன் இப்படி இருக்கீங்க.இப்படி இருந்தா எப்படி என்னை காலம் முழுக்க காப்பாத்துவீங்க.

மாரி:என்னது நான் காப்பாத்துறதா.எந்த நம்பிக்கைல நீ இப்படிலாம் பேசி பழகுற.என்னை காப்பாத்திக்கவே வக்கில்லாம இருக்கேன்.இதுல எப்படி உன்னை காப்பாத்த?

மேரி:என்ன பேசுறீங்க.எனக்கு ஒண்ணுன்னா நீங்க உசுர குடுத்து காப்பாத்த மாட்டீங்களா?

மாரி:என் உசுர குடுத்த பிறகு நான் எங்கத்த காப்பாத்துறது.வேணும்னா என் பக்கத்துல எவனாச்சும் இருந்தா,அவன் உசுர குடுத்தாச்சும் உன்னை காப்பாத்துறேன்.

மேரி:ச்சா..டூ பேட்.உங்களை நம்பி என் மனசுல ஒரு காதல் கோட்டையே கட்டிக்கிட்டு இருக்கேன்.

மாரி:நானும் உன்னை நம்பி என் ஊருல ஒரு வீட்டை கட்டிக்கிட்டு இருக்கேன் கடன வாங்கி.

மேரி:உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.

மாரி:என்னது விளையாட்டா.நான் என்ன கடலை முட்டாய் வாங்குனேன்னா சொன்னேன்.கடன் வாங்குனேன்னு தானே சொன்னேன்.இதுல என்ன விளையாட்டு.

மேரி:நம்ம காதலுக்கு எத்தன எதிர்ப்பு,பிரச்சனை வந்தாலும் பயப்படாம எதிர்த்து நின்னு மோதணும் மாரி.

மாரி:கண்டிப்பா..பிரச்சனை வந்தா மோதலாம்.ஆனா பாறை வந்தா?

மேரி:எந்த பாறை டியர்?

மாரி:தோ வருதே இந்த பாறை தான்.

மேரி:ஒ,மை காட்.ஐயோ.....

(கப்பல் கவிழ..அனைவரும் கடலில் முழுங்க)

மேரி:மாரி,என்னை கை விட்றாதீங்க..

மாரி:நீ என் கைய விடாம இருந்தா சரி.

மேரி:என்ன சொல்றீங்க?

மாரி:எனக்கு நீச்சல் தெரியாதுப்பா...

மேரி:டோன்ட் வொர்ரி.அதான் நான் இருக்கேன்லே.

மாரி:எதுக்கு அம்பது வருஷம் கழிச்சு பிளாஷ்பேக் சொல்றதுக்கா..

மேரி:அடடா..எனக்கு கூடத்தான் நீச்சல் தெரியாது.நான் பயப்படுறேனா?

மாரி:என்னது உனக்கும் தெரியாதா...சூப்பர்..கதை முடிஞ்சுது.

மேரி:கூல்.இப்போ என்ன பண்றதுன்னு யோசிங்க.

மாரி:வேற என்ன பண்றது...ஒண்ணா அயர்லாந்துக்கு ஹனிமூன் போகவேண்டிதான்.

மேரி:பரவாலை.சாவை கூட சந்தோசமா ஏத்துப்போம்.

மாரி:சாவு என்ன சால்வையா சந்தோசமா ஏத்துக்க.சரி,ஜல்சா பண்ணாமலே ஜலசமாதி ஆகணுமுன்னு இருந்தா என்ன பண்ண முடியும்.மேரி...

மேரி:மாரி....

கப்பலோடு கதையும் பினிஷ்.

Monday 17 September 2012

.பி ஹாப்பி..நோ பிபீ (BE HAPPY..NO BP)


ஹே பி...பி..பி ஹாப்பி,ஹே நோ..நோ..நோ பிபீ...லெட்ஸ் ராக்

தில்லா வளரும் தலைமுறை..தலைமுறை
அதுக்கு ஏன்டா விதிமுறை..விதிமுறை..
வாழ்ந்து பாரு ஒருமுறை..ஒருமுறை..
பி ஹாப்பி...ஹே

எதுவும் இங்கு நமக்கில்லை..நமக்கில்லை
கவலை எதுவும் பெரிதில்லை..பெரிதில்லை...
என்று வாழ்ந்தால் வொர்ரியில்லை..வொர்ரியில்லை...
நோ பிபீ...ஹே

குழந்தையோட மனசு
அதுதான் கடவுளோட பேஸ்
அது சிரிப்பில..செய்யும் குறும்புல
மனசு  அடையும் பீஸ்

யூத்தோட பவர்
அதுதான் பத்தி எரியும் பயர்
அதை புரிஞ்சிட்டா..நல்லதுக்கு செயல்பட்டா
நம்ம ரூட் என்றும் கிளியர்

வயசு பெரியவங்க சொல்லும் சொல்லு
கொஞ்சம் பொறுமையா நீயும் கேளு
தப்ப ஒத்துகிட்டா...நல்லத கத்துகிட்டா..
உன் லைப் முழுதும் தூள்

நீ ரிச்சோ..புவரோ..சாவு சூர் டா
லைப் ப ரசிச்சு வாழ்ந்தா..வாழ்வு ஜோர் டா

அட்வைசுன்னு அறுக்காதீங்க
அடல்ட் வயசுல ஏறாதுங்க
பாண்டா நீயும் சொல்லிபாரு
பிரெண்டா நீயும் ஆவ பாரு  

ஹே..பி ஹாப்பி..லைப் ல...நோ பிபீ
மாமு..பி ஹாப்பி..லைப் ல...நோ பிபீ...


Friday 14 September 2012

மின்சாரம்


தெருவெங்கும் மின்சாரம் இல்லா
ஒரு மாலை பொழுதின் தொடக்கத்திலே
சூரியன் மறையும் அழகின் மயக்கத்திலே
சில்லென்று காற்றும்...
அக்காற்றிலே சிறகு விரிக்கும் பறவைகளும்
வான்மேகத்தில் வான வேடிக்கை காட்டும் தருணம்
பூலோகமே சொர்க்கமாய் தெரியும் வேளையில் 

எதிர்புற வீட்டின் ஜன்னல் என்னும் கண்கள் திறக்க
அதில் கூந்தலை சிறகுகளாய் காற்றில் பறக்க விட்டுகொண்டே
மின்னல் போன்ற கண்கள் கொண்ட ஒரு தேவதை என்னை உற்று தாக்க
என் மனம் காற்றாய் மாறி அவள் திசை நோக்கி செல்ல
அவளோ ஒல்லிய முகத்தினுள்ளே ஒரு மெல்லிய புன்னகையை வீச 
சிப்பிக்குள் இருக்கும் முத்தை விட அவள் சிரிப்புக்குள் இருக்கும் பிரகாசம் 
ஒரு கணம் என் கண்களை மறைக்க...அக்கணம் அவள் மறைந்து போனால்
என் கண்களில் மட்டும்...

என் கண்ணோடு,மனதும் கை கோர்த்து 
அவள் இருக்கும் திசை நோக்கி அலைபாய  
என் கால்கள் வேகமெடுத்து விரைந்து செல்ல
அவளை பார்க்கும் அத்தருணத்தை எதிர்நோக்கும் வேளையில்
மீண்டும் அந்த தேவதை..
என் இதய வாசலை திறந்த தேவதை 
என் வீட்டு வாசலில் வந்து நிற்க
என் மனமோ பந்தை போல எம்பி குதிக்க 
மனதில் துடிப்போடும்,முகத்தில் சிரிப்போடும் 
அவளிடம் சென்று நிற்கிறேன் 

அதே சிரிப்பு..அதே பார்வை
தூரம் குறைந்தன,நேரம் கரைந்தன
அருகில் வந்தால்..அன்பாய் நின்றால்
புது மின்சாரம் பாய்ந்தது போன்ற தருணத்தில் 

"கரென்ட் வந்துடுச்சு அண்ணா"

                   பவர் கட்

தண்டர் தயா

ஜக்கு:தலைவாஆ.....தண்டர் தயா சார்....வணக்கம் சார்.

தயா:அஹ,வணக்கம் வணக்கம்..யாரு நீங்க?

ஜக்கு:நான்தான் தலைவா ஜாம்பஜார் ஜக்கு.உங்களோட தீவிர ரசிகன்.உங்க படம் எல்லாத்தையும் முத நாள் முத ஷோ பார்த்திடுவேன் சார்.

தயா:அப்படியா.ரொம்ப சந்தோசம்.நான் ரீசன்டா நடிச்ச குப்பையிலே கோபுரம் படத்துல பிச்சைகாரனா என் நடிப்பு எப்படி இருந்துச்சு?

ஜக்கு:அதுலாம் நடிப்பா?

தயா:என்ன சொல்றீங்க?

ஜக்கு:இல்லை தலைவா.அப்படியே பிச்சைகாரனாவே வாழ்ந்து இருக்கீங்க.அதுவும் கடைசி சீன்ல உங்க ஆளு சாப்ட எச்சிலைய எடுக்க நீங்களும் வில்லனும் போடுற டாக் பைட் இருக்கே அசத்தல் சார்.

தயா:யாஹ்.அதுக்காக ஸ்பெஷலா வெளிநாட்டுல இருந்து ஒரு டாக் பைட் தெரிஞ்ச பிச்சைகாரரை கூட்டிட்டு வந்து தெரு தெருவா நாய் மாதிரி சண்டை போட்டு பயிற்சி எடுத்தோம்.சம்டைம்ஸ்,நாய் கூடவும் சண்டை போட்டோம்.

ஜக்கு:சூப்பர் சார்.இதைதான் நாய் மாதிரி உழைப்பவகன்னு சொல்றது.சார்,உங்களோட இன்னொரு படமான "ரோடு மேல ஓடு" படத்துக்காக ரோடு ரோடா ஓடுனத பார்த்து நான் கலங்கிட்டேன் சார்.
அன்னைக்கு எனக்கு சோறு கூட இறங்கல சார் வயித்துல.

தயா:அய்யய்யோ,அப்புறம்?

ஜக்கு:அப்புறம் என்ன சார்.ஒரு ஹாப் அடிச்சிட்டு ஆப் ஆகிட்டேன் சார்.சார்,நீங்க மடிச்ச "மானம் கெட்ட மாமன்" படத்துல கிளைமேக்சுக்கு முன்னாடி வர கற்பழிப்பு சீன்ல உங்களோட ஆர்வம்,அயராத உழைப்ப பார்த்து நான் மெய் சிலிர்த்திட்டேன் சார்.எப்படி சார் அப்படிலாம்?

தயா:ஐயோ நீங்க வேற.எல்லாம் என் தாத்தா கிட்ட இருந்துதான்.அவர்தான் எப்பவும் சொல்வாரு,எதுல ஈடுபட்டாலும் முழு மூச்சோட,ஈடுபாட்டோட இருக்கனுமுன்னு.அதான்.

ஜக்கு:சூப்பர் தலைவா.அந்த படத்துல நீங்க பேசுற ஒரு பஞ்ச் டயலாக் இருக்கே..அடடடடாஆ....அருமை.."தோல்விய கண்டு தோப்பு கர்ணம் போடமாட்டேன்.வெற்றிய கண்டு வெத்தலை பாக்கு போடமாட்டேன்"..பிண்ணிடீங்க சார்.உங்களுக்கு ஏன் சார் அவார்ட் தரமாற்றாங்க?

தயா:அவார்ட தேடி நாம போக கூடாது.அவார்ட் தான் நம்மளை தேடி வரணும்.

ஜக்கு:அதான் வரமாட்டேங்குதே.நீங்க போகலாம்ல."லல்லி என் வில்லி" படத்துல உங்க நடிப்பு பிரமாதம் சார்.அதுக்கு அவார்ட் தரலாம்.உங்களோட ஒவ்வொரு வசனமும் நெஞ்சை உருக்கிச்சு.

தயா:அந்த படத்துல நான் ஊமையாச்சே.ஒருவேளை என்னோட முக பாவனைகள் உங்களை அப்படி ஈர்த்துருக்கு.நான் நல்லா நடிச்சிருகேன்னு எல்லாரும் பார்ரட்டுனாங்க.இத்தனைக்கும்,அந்த படத்துல எனக்கு மேக் அப் இல்லை.

ஜக்கு:அதனால தான் தலைவா நல்லா நடிச்சிருக்கீங்க.உங்களோட அடுத்த ரெண்டு படத்துல,ஒரு படம் உங்களோட நிஜ குணத்தை பிரதிபலிப்பதா பேட்டி வந்துச்சே தலைவா.

தயா:ஆமா.அடுத்து நான் "மானஸ்தன்" என்ற படத்துல எந்த உணர்வுமே இல்லாத ஒருத்தன் ரோல் பண்ணுறேன்.அதாவது,எப்படி சொல்றதுனா அஹ,சுடு சுரணை இல்லாதவன்னு மாதிரி.

ஜக்கு:ஒ,அப்போ நீங்க சொன்னது சரிதான் தலைவா.அதுக்கு அடுத்து என்ன படம் பண்றீங்க?

தயா:அடுத்து "குச்சி முட்டாயும்,குருவி ரொட்டியும்" படம் பண்றேன்.அதுல ரெண்டு கதாநாயகிகள்.

ஜக்கு:ரெண்டு பேரா தலைவா.சூப்பர் தலைவா.கதை என்ன தலைவா?

தயா:அதாவது ஊரு சந்தைல நானும் என் ரெண்டு மாமன் பொண்ணுகளும் போகும்போது ஒருத்தி குச்சி மிட்டாயும்,இன்னொருத்தி குருவி ரொட்டியும் கேக்குறாங்க.அத வாங்கிட்டு வரதுக்குள்ள அவங்க ரெண்டு பேரையும் காணோம்.அவங்களை கண்டுபிடிகிறது தான் பார்ஸ்ட் ஹாப்(first half).

ஜக்கு:அப்போ சகென்ட் ஹாப்(second half)?

தயா:அது என்னன்னா,அந்த பொண்ணுகளை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து பார்த்தா இப்போ குச்சி மிட்டாயும்,குருவி ரொட்டியும் காணோம்.சோ,அதை கண்டுபிடிப்பது சகென்ட் ஹாப்.

ஜக்கு:அருமை தலைவா.ஆகமொத்தம் அது காணமல் போனவர்களை பற்றிய படப்பிடிப்பு.சூப்பர் தலைவா.

தயா:ஹிஹிஹி..இது என்ன பிரமாதம்.படத்துல வர சாங்க்ஸ் எல்லாம் பட்டைய கிளப்பும்.அதுலயும் அவங்களை தேடும்போது நடுவுல வர ட்ரீம் சாங்க்ஸ் "குல்பி பேபி" அண்ட் "பன்னீர் பாப்பா" ரெண்டும் டாப் டக்கரா இருக்கும்.

ஜக்கு:அடாது தேடும்போது கூட விடாது ஆடுறீங்க பாருங்க கிரேட் தலைவா.நீங்க எங்கேயோ போய்டீங்க.

குப்பு:அவர் போறது இருக்கட்டும்.நீ எங்கடா போன?

தயா:ஹலோ யாரு நீங்க.என்ன என் ரசிகரை மரியாதை இல்லாம பேசுறீங்க.

குப்பு:சார்,இவன் ஒரு பைத்தியக்காரன் சார்.யாருக்கும் தெரியாம ஹாஸ்பிடல்ல இருந்து எஸ்கேப் ஆகிட்டான் சார்.இப்போ மாட்டிகிட்டான்...இவனை இழுத்திட்டு போங்கையா.

தயா:பைத்தியக்காரனா?

ஜக்கு:தலைவா...என் உடல் மண்ணிற்கு...உயிர் உங்களுக்கு....குல்பி பேபி...ஒ,பன்னீர் பாப்பா.

தயா:ஒரு பைத்தியக்காரன் கூட என் படத்தை ரசிக்கிறான்.பெருமையா இருக்கு.

குப்பு:அட உங்க படத்த ரசிச்சதால தான் அவன் பைத்தியக்காரனே ஆனான் சார்.


                                         ஓவர் சீன் பிலிமுக்கு ஆகாது.
                                       OVER SCENE HILARIOUS TO FILM

Wednesday 12 September 2012

வங்கி சொங்கி

பாஸ்:எல்லாரும் கவனமா கேளுங்க.இந்த பேங்க் ல தான் இன்னைக்கு நாம கொள்ளை அடிக்க போறோம்.

ஜான்:என்ன பாஸ்,பேங்க் மூடிருக்கு.எப்படி கொள்ளை அடிக்கிறது.வேணும்னா இப்போ  போயிட்டு நாளைக்கு காலைல பேங்க் திறக்கும்போது வருவோமா பாஸ்?

பாஸ்:சூப்பர் டா.காலைல வந்தோம்னா ஈஸியா உள்ள போய்டலாம் ல.

ஜான்:சரியாய் சொன்னீங்க பாஸ்.ஆமா உள்ள போய் எப்படி கொள்ளை அடிக்கிறது.

பாஸ்:அது ஒண்ணுமில்லடா.அங்க கொள்ளை அடிக்கிறதுக்கு challan வச்சுரிப்பாங்க.அதை பில் பண்ணி கொடுத்து இஷ்டத்துக்கு கொள்ளை அடிக்கலாம்.எப்படி.

பக்கிரி:சூப்பர் பாஸ்.

பாஸ்:செருப்பால அடி.ஏன்டா,பேங்க் நடத்துறவன் என்ன கேனப்பயலாடா.கொள்ளை அடிக்க வரவங்களை கை குடுத்து,கைல சாவியும் குடுத்து அனுப்பி வைக்க.முட்டா பயலுகளா.

ஜான்:ஏன் பாஸ் திட்டுறீங்க.எங்களுக்கென்ன தெரியும் கொள்ளை அடிப்பது பத்தி.இப்போதானே சேர்ந்துருக்கோம்.

பாஸ்:நான் மட்டும் என்ன கொள்ளை அடிக்கிறதுல கோர்ஸ் படிச்சிட்டா வந்துருக்கேன்.ஏன்டா இப்படி உசுர வாங்குறீங்க.மூடிகிட்டு வாங்க கொள்ளை அடிக்கலாம்.

பக்கிரி:மூடிகிட்டு தான் கொள்ளை அடிக்க போறோம்.ஆனா எப்படி,அத சொல்லுங்க பாஸ்.

பாஸ்:பேங்க் ல கொள்ளை அடிக்க வந்தா என்னமோ பேங்க் எக்ஸாம் எழுத வந்தா மாதிரி இத்தன கேள்வி கேட்டு கொல்றீங்களேடா.இதான் இந்த பேங்கோட மேப்.இதுல பின் பக்கம் ஒரு டிரைனேஜ் இருக்கு.அது வழியாதான் போறோம்.அதே வழியாதான் வாறோம்.

பக்கிரி:என்னது டிரைனேஜா..அங்க ஒரே இருட்டா,கலீஜா இருக்குமே பாஸ்.கொசு வேற கடிக்கும் பாஸ்.

பாஸ்:வேணும்னா டிரைனேஜ் ல டைல்ஸ் போட்டு ஏ.சி போட்டு,அப்படியே கொசுவத்தி ஏத்திவைக்கவா.கொள்ளை அடிக்க போறோமா,குடித்தனம் பண்ண போறோமா.இருட்டா இருக்கும்,கொசு கடிக்குமுன்னுகிட்டு.இம்சை பண்ணாமா வாங்கடா.

(பேங்க்கின் உள்புறம் நுழைந்த பின்னர்)

பாஸ்:சப்பாடா,ஒரு வழியா வந்தாச்சு.

ஜான்:பாஸ்,நீங்க கிரேட் பாஸ்.பக்காவா ரூட் போட்டு இருக்கீங்க.எப்படி பாஸ் இப்படிலாம்.

பாஸ்:இதுக்கு முன்னாடி டிரைனேஜ் ல கொஞ்ச நாளா வேலை பார்த்தேன்.அதான்.

பக்கிரி,ஜான்:ஐயையே...டிரைனேஜ்லையா....

பாஸ்:ஆமா,இதுக்கு முன்னாடி இவுரு ரயில்வேசுலையும்,இவுரு ஏர் இந்தியாவுலயும் இருந்தாங்க பாரு.நீ வேலூர்,அவன் பாளையங்கோட்டை,நான் சென்ட்ரல்.இதுல என்னடா ஐயையே.மூடிகிட்டு போய் லாக்கர் எங்கன்னு தேடுங்கடா.

பக்கிரி:லாக்கர் னா என்ன பாஸ்?

பாஸ்:(லாக்கர் னா என்ன சொல்றது)அஹ.கல்லா பெட்டி.

பக்கிரி:ஒ,அதுவா.தோ வாசல் கிட்டதான் இருக்கு.

பாஸ்:வாசல் கிட்டவா.அதெப்படிடா தெரியும் உனக்கு?

பக்கிரி:அட,கல்லா பெட்டியெல்லாம் வாசல் கிட்டதான் பாஸ் இருக்கும்.வாங்க போய் பார்ப்போம்.

பாஸ்:அடேய் அது வேற பெட்டி.இது வேற பெட்டிடா.

ஜான்:அட,எந்த பெட்டினாலும் உள்ள காசுதான் பாஸ் இருக்கும்.அப்புறம் என்ன.

பாஸ்:ஆஆ....உங்களுக்கு அர்த்தம் சொல்லுறதுக்குள்ள அடுத்த நாளே வந்திடும் போலருக்கே.எலேய்,நல்லா கேளு.நீ என்ன பண்ற லாக்கர் எங்க இருக்குன்னு பாக்குற.நீ என்ன பண்றேன்னா,அந்த லாக்கர் சாவிய தேடுற.நான் இந்த பேங்க்குக்கு பாம் வச்சிட்டு வரேன்.

ஜான்:பாம்மா.....

பாஸ்:டேய்....ஏன்டா கத்துற.வெளிய வாட்ச்மேன் இருக்கான்டா.மெல்லமா பேசுடா பக்கி.

ஜான்:சரி பாஸ்.ஆமா ஏன் பாஸ் பாம் வைக்குறீங்க.

பாஸ்:இந்த பேங்க்ல தாண்டா நான் முன்னாடி ப்யூன் னா வேலை பார்த்தேன்.அப்போ இங்க வேலை பார்த்த ஒரு பொன்னுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.ஆனா,அந்த பொண்னை இந்த பேங்க் மேனேஜருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அதான் அவன் லவ்வுக்கு நான் இடைஞ்சலா இருக்கேன்னு என்னை ஏதேதோ சொல்லி வேலையவுட்டு தூக்கிட்டான்.அதுக்கு பழி தீர்க்கதாண்டா இந்த கொள்ளை.

பக்கிரி:ச்சா..உங்களை கஷ்டபடுத்துன அவன சும்மா உடக்கூடாது பாஸ்.உங்க லட்சியத்த நாங்க நிறைவேத்துறோம்.

பாஸ்:நண்பேண்டா.....ஆமா,டேய் ஜான் நீ என்னடா யோசிக்கிற?

ஜான்:இப்போ அந்த பொண்ணு என்ன பண்ணுதுன்னு யோசிக்கிறேன் பாஸ்.

பாஸ்:அஹ,அவ புருஷன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கா.

ஜான்:அப்புடியா,யாரு பாஸ் அவ புருஷன்?

பாஸ்:அந்த மேனேஜர் தாண்டா அது.பக்கி பையலே,ஏன்டா பழச கிண்டுற.வந்த வேலைய பாருடா.போடா.

(சில மணிநேரம் கழித்து)

பக்கிரி:பாஸ்,எங்கே தேடியும் சாவிய காணும்.

பாஸ்:காணோமா..இப்போ என்னடா பண்ண?

ஜான்:ஏன் பாஸ் கவலைபடுறீங்க.அதான் வெளிய வாட்ச்மேன் இருக்கான்ல.அவனை கூப்டு கேட்போம் சாவி எங்கன்னு.

பாஸ்:ஏன்,பேங்க் மேனேஜர் கிட்டையே போன் போட்டு கேட்போமே.

ஜான்:ஒ எஸ்.

பாஸ்:போடாங்க.எனக்குன்னு வந்து வாய்க்குறாங்க பாரு.அந்த சாவியோட போலி என்கிட்ட தான் இருக்கு வாங்க.

பக்கிரி:கிரேட் பாஸ்.எப்புடி பாஸ் அதோட போலி உங்களுக்கு கிடச்சுது?

ஜான்:எனக்கு தெரியுமே.

பக்கிரி:எப்புடிடா?

ஜான்:மேனேஜர் பொண்டாட்டி இங்க தான வேலை பாக்குறாங்க.அவங்க மூலமாதான்.என்ன பாஸ் சரியா?

பாஸ்:இன்னும் அவ நினப்புலயே இருக்கியாட நீயு.மவனே உன்னை....

(கொள்ளை அடித்த பின்னர்)

பக்கிரி:கச்சிதமா காரியத்த முடிச்சிட்டோம் பாஸ்.ஆனா லாக்கரோட பணத்தை எடுக்கணுமா பாஸ்.பணத்த மட்டும் எடுத்து இருக்கலாமே.

பாஸ்:பணத்தை மட்டும் எடுக்கிறதவிட,பணத்தோட லாக்கரையும் சேர்த்து எடுத்தாதான் அவமானம் ஜாஸ்தியா இருக்கும் அவனுக்கு.சரி,நான் முன்னாடி போய் டிரைனேஜ் கதவ திறந்து வண்டியோட காத்துக்கிட்டு இருக்கேன்.நீங்க லாக்கர பத்திரமா எடுத்திட்டு வாங்க.சரியா.

பக்கிரி,ஜான்:ரைட் பாஸ்.

(பேங்க்கில் இருந்து வெளியேறி காரில் போய்கொண்டு இருக்க)

பாஸ்:நான் நினைச்சப்படி பேங்க் ல கொள்ளை அடிச்சதுல ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா.ஆமா,லாக்கர் பத்திரமா இருக்குல.

ஜான்,பக்கிரி:எஸ் பாஸ்.

பாஸ்:குட்.லாக்கர் சாவி?

ஜான்:அஹ,அய்யய்யோ..அதை பேங்க் ல விட்டுடோம் பாஸ்.

பாஸ்:போடாங்க,அதவிட்டுட்டு என்னடா பண்றீங்க.ஒரு பொருளை எடுத்திட்டு போனா அதை மீண்டும் ஒழுங்கா எடுத்திட்டு வரணுமுன்னு அறிவு கூடவா இல்லை உங்களுக்கு.

பக்கிரி:பாஸ்,தப்பா பேசாதீங்க.அப்படி மறக்கிறவனா இருந்தா நீங்க வச்சிட்டு வந்த பாம்மே மறக்காமா எடுத்திட்டு வந்துருப்பேன்னா.

பாஸ்,ஜான்:என்னது பாம்மா..எங்கடா?

பக்கிரி:தோ...

(டமால்)

பாஸ்,ஜான்,பக்கிரி:ஐயோஓஓஓஓஓஓஓஓஓ.....

Friday 7 September 2012

வீட்டைத்தாண்டி வருவாயா

லூசிய அழைத்து வர கேரளா சென்ற சித்திக்,இறுதியில் அவளை கண்டுபிடித்து தங்கள் காதலை பத்தி உரையாடும் காட்சி.

சித்திக்:லூசி...ஒரு வழிய உன்னை கண்டுபிடிச்சிட்டேன்...உன்னை தேடி எங்கெல்லாம் அலைஞ்சேன் தெரியுமா?

லூசி:எங்கெல்லாம்?

சித்திக்:அஹ..அது வந்து..எங்கெல்லாமோ அலைஞ்சேன்.அது எதுக்கு இப்போ.

லூசி:அப்போ வேற எதுக்கு வந்த சித்திக்?

சித்திக்:அஹ,இங்க பெட்ரோல் விலை லிட்டருக்கு பத்து ரூபான்னு சொன்னாங்க.அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்.

லூசி:டோன்ட் கிட்டிங் சித்திக்.

சித்திக்:ஊ மீ.நோ.இட்ஸ் யு ஊ கிட்டிங்.நான் ஏன் வந்தேன்னு தெரியாது.நம்ம காதல பத்தி.நம்ம வாழ்க்கைய பத்தி பேசத்தான்.

லூசி:அதபத்தி பேச எனக்கு உரிமை இல்லை.ஏன்னா என் வாழ்க்கை எனக்கு சொந்தம் இல்லை.

சித்திக்:ஏன் மார்வாடி கடைல அடகு வச்சுட்டியா?

லூசி:சித்திக்...சி,என் டாட் எனக்கு வேற இடத்துல அலையன்ஸ் பார்த்துருக்காரு

சித்திக்:அவுரு பார்த்தாரா.அப்போ அது அலையன்ஸ் இல்லை.ஏலியன்ஸ்.

லூசி:என்ன பேசுற நீ.லுக் சித்திக்,லவ் வேற.லைப் வேற.நீயும் நானும் கல்யாணம் பண்ணா நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்காது.

சித்திக்:நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இருக்காது.

லூசி:முட்டாள்தனமா பேசாத 

சித்திக்:(உன்ன லவ் பண்ணிட்டு புத்திசாலிதனமா பேச முடியுமா)லூசி,நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கூட நாம நினைச்ச வாழ்க்கைய வாழ முடிலைன்னா அந்த வாழ்க்கைய வாழுறதே வேஸ்ட்.

லூசி:புரிஞ்சிக்கோ சித்திக்,நாம சந்தோஷமா வாழ முடியாது நம்ம ரெண்டு குடும்பத்தை விட்டுட்டு.நான் எங்கப்பா சொல்ற பையன கட்டிக்கிறேன்.நீ உனக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோ.

சித்திக்:(எனக்கு ஏத்த நல்ல பொண்ணா.நீ கிடைச்சுதே உலக அதிசயம்.இதுல எங்கடி இன்னொண்ண தேட)அதனால் தான் உன்னை கட்டிக்கலாமுன்னு வந்தேன் லூசி.எனக்கு ஏத்த பொண்ணு நீதான்.

லூசி:கண்டிப்பா இல்லை.

சித்திக்:பாரு லூசி.காதலுங்குறது சும்மா இல்லை.முதல் பார்வையிலையே மண்டைய போட்டு உருட்டணும்.மாவ போட்டு ஆட்டனும்.உலகத்துல எத்தனையோ மொக்கை பிகருங்க இருக்கும்போது நான் ஏன் உன்னை மட்டும் பார்க்கணும்,காதலிக்கணும் சொல்லு.

லூசி:ஏன்?

சித்திக்:ஏன்னா (எனக்கு கிடைச்ச இளிச்சவாயி நீ மட்டும்தான்) அதான் காதல்.

லூசி:காதல் காதலுன்னு சொல்றியே.எனக்காக நீ என்ன செஞ்ச?

சித்திக்:(உன்னையும் ஒரு மனுஷியா மதிச்சு காதலித்தேன்னே அதவிட வேற என்ன செய்யணும்)என்ன செய்யணும்?

லூசி:உன்னால எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்க முடியுமா.என்னை விடு.முதல உன்னால உன் சொந்த கால்ல நிக்க முடியுமா?

சித்திக்:இப்போ என்ன என் சொந்த கால்ல நிக்காம என் சொந்தக்காரன் கால்லையா நிக்குறேன்.என்னப்பா நீ.நான் பந்த கால் நடுறத பத்தி பேசவந்தா,நீ சொந்த கால்,நொந்த கால்லுன்னு கடுப்பேத்துற.

லூசி:உனக்கு எல்லாமே விளையாட்டு தான்.சித்திக்..நீயும் நானும் எப்பவும் சந்தோஷமா வாழ முடியாது.

சித்திக்:எந்த தம்பதிகள் தான் எப்பவுமே சந்தோசமா வாழுறாங்க சொல்லு.அப்பப்போ சண்டை,சச்சரவுகள் வரத்தான் செய்யும்.அதுவும் உறவை பலப்படுதுமே தவிர பலவினப்படுத்தாது.
நாமும் நல்லாத்தான் வாழ்வோம் லூசி.

லூசி:இந்த கல்யாணத்துக்கு எங்கப்பா சம்மதிக்க மாட்டாரு.

சித்திக்:எங்கப்பா மட்டும் வாழ்த்தி வழியனுப்புனாரா.வாட்டி வதைச்சாரு.இருந்தாலும் நான் வரல.ஆமா உங்கப்பன்  எதுக்கு தான் சம்மதிச்சான்.எப்பவும் இடைஞ்சல் தான்.

லூசி:மரியாதை சித்திக்.எங்கப்பா பெரிய மனுஷர்.

சித்திக்:பார்த்தாலே தெரியுமே.ஆறு அடி,ரெண்டு அங்குலம்.ரொம்ப பெரிய மனுஷர்.கீர்த்தி சிரிசுனாலும் மூர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க.உங்கப்பாக்கு கீர்த்தி பெருசு,பட் மூர்த்தி சிறிசு.முதல இருக்காங்கிறதே டவுட் தான்.

லூசி:எங்கப்பா பத்தி தப்பா பேசுனா நம்ம காதல் அவ்வளவுதான் சித்திக்.

சித்திக்:நீ நேசிச்ச உங்கப்பாவ திட்டினதுக்கே இப்படி கோபம் வருதே.அப்போ,நான் நேசிச்ச உன்னை மறக்க சொல்லும்போது எனக்கு எப்படி இருக்கும்.

லூசி:எப்படி இருக்கும்?

சித்திக்:அஹ,குளு குளுன்னு இருக்கும்.யாரா இவ.லுக் லூசி,உனக்காக நான் எத்தன வருஷம் வேணும்னாலும் காத்துருக்க தயார்.

லூசி:ஐ அம் சாரி சித்திக்.நீ காத்துருக்கலாம் சித்திக்.பட் என்னால முடியாது.ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.ஏன்னா,எங்கப்பாவ மீறி என்னால ஏதும் செய்யமுடியாது.சோ....

சித்திக்:சோ?

லூசி:சோ...நமக்குள்ள இனி எதுவுமில்லை.எல்லாத்தையும் முடிச்சிப்போம்.பை.

சித்திக்:லூசி..லூசி...
 (சித்திக் வருத்தத்தோட திரும்பி வர,எதிர்ல கணேஷ் வந்து)

கணேஷ்:சித்திக்..என்னடா டல் ஆகிட்ட...கவலைபடாதே.இங்க என்னா சொல்லுது..லூசி லூசின்னு சொல்லுதா?

சித்திக்:அவளை தேடி நாய் மாதிரி அலைஞ்சுதுல லஸ்ஸி லஸ்ஸின்னு சொல்லுது.

கணேஷ்:என்னடா இப்படி சொல்ற.அப்போ இதோட எல்லாம் முடிஞ்சுதா...இனி என்னடா பண்ணபோற?

சித்திக்:ஒரு கதவு மூடுனா இன்னொரு கதவு திறக்குமுன்னு சொல்வாங்க.அதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு லூசியோட தோழி ரோசியோட நம்பர் வாங்கி வச்சேன்.இனி ரோசி தான் எனக்கு ராசி.

கணேஷ்:அப்போ லூசி?

சித்திக்:ஆரோமலே...............