Monday, 8 October 2012

நீங்களும் ஆகலாம் ஒரு கேடி






ஹாய் பிரெண்ட்ஸ்,எல்லாருக்கும் வணக்கம்

பஸ்ஸில் பெண்ணின் மேல் கண் வைப்போரின் பர்ஸ் மேல் கை வைன்னு பிரபல கேடி கபாலி அவர்கள் சொல்லிருக்காரு.
இவர் 1959ல சென்ட்ரல் ஜெயில்ல பிறந்து,வேலூர் ஜெயில்ல வளர்ந்தவர்.1979-2009 வரைக்கும் பல கேடி வேலை பார்த்து கில்லாடியா இருந்தவர்.
அவுரு அனுபவத்துல சொன்ன வார்த்தையே அது.அதாவது  பஸ்ல சைட் அடிக்கிறவன் கிட்ட பிக் பாக்கெட் அடிச்சாதான்   மாட்டாமா இருப்போம்.ஏன்னா அவன்தான் பீல் ல ஜொள்ளு விட்டு பாக்கெட்ல கை விடுறத கண்டுக்காம கிடப்பான்னு சொல்லிருக்காரு.
சோ,பொது மக்களே பஸ்ஸில் முதல உங்க சேப்டிய பாருங்க,அப்புறம் பியுட்டிய பார்க்கலாம்னு சொல்லிட்டு இந்த கேம் ஷோவ ஸ்டார்ட் பண்ணுவோம்.

ஏமாற்றம் ஒன்றே ஏமாறாதது.உங்கள் காசை அமுக்க போகும் கேடிகளோடும்,கேள்விகளோடும் உங்கள் மொக்க தயா.லெட்ஸ் பிளே நீங்களும் ஆகலாம் ஒரு கேடி.

இன்று நம்மளோடு ஆட போறவர் பாக்கெட் பாண்டி.இவரு கடந்த 10 வருஷமா பிக் பாக்கெட் அடிப்பவரு.ஆனா போலீஸ் இவர கேடி என்ற மதிப்பு தராம வான்டட் லிஸ்ட்ல இருந்து இக்னார் பண்ணிடாங்க.சோ,கேடி ஆகியே தீரனும் என்ற லட்சியத்தோட வந்துருக்காரு.லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேன்ட் வித் அவுட் ரிங்(lets give him a big hand without a ring).

தயா:வணக்கம் திரு.பாக்கெட் பாண்டி

பாண்டி:வணக்கம்  அண்ணாத்த   

தயா:போட்டிக்கு போறதுக்கு முன்னாடி உங்கள பத்தி சொல்லுங்க

பாண்டி:அதான் நீயே சொல்லிட்டியே.அப்பால நான் என்னத்த சொல்ல.நேரா ஆட்டத்துக்கு போய்டலாம்.

தயா:வாவ்,செம ஆர்வத்துல இருக்கீங்க.கூல்.ஓகே..போட்டியோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சொல்லிடுறேன்.உங்களுக்கு மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்.ஒவ்வொரு கேள்வியும் சரியா பதில் சொல்லணும்,இல்லேன்னா நீங்க எலிமினேட் ஆகிடுவீங்க.

பாண்டி:என்னது எலிக்கு மேட்டா?

தயா:எலிக்கு மேட் இல்லை.எலிமினேட்.அதாவது ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்.

பாண்டி:ஒ,ஆட்டத்துல இருந்து அவுட் ஆறதா.அஹ ரைட் அண்ணாத்த.அப்பாலைக்க மேல சொல்லு 

தயா:உங்களுக்கு ஒரு லைப் லைன் இருக்கு.

பாண்டி:தோ பாரா,லைப் லைன்னா.என் வுட்டுல லேன்ட் லைன் கூட இல்ல அண்ணாத்த.இங்க என்னடான்னா லைப் லைன் எல்லாம் கீது..ஆமா இதுக்கு சார்ஜ் இல்லைல.

தயா:ஹாஹா,நோ நாட் அட் ஆல்.

பாண்டி:என்னது நோ டெட்டால் அஹ?

தயா:இட்ஸ் நாட் அட் ஆல்.ஓகே.அப்படினா அதெல்லாம் இல்லைன்னு அர்த்தம்.

பாண்டி:அஹ ரைட் பா

தயா:பர்ஸ்ட் லைப் லைன்,ஆடியன்ஸ் போல்.நெக்ஸ்ட்,போன் ஆன் பிரெண்ட்.உங்களுக்கு கேள்விக்கான பதில் தெரிலேன்னா,விலகுறதா இருந்தா நான் பிக்ஸ் பண்ணுறதுக்கு முன்னாடி சொல்லலாம்.ஓகே

பாண்டி:டன்

தயா:ஓகே கைஸ்,லெட்ஸ் பிளே நீங்களும் ஆகலாம் ஒரு கேடி.

ஜீனியஸ்,திரு.பாக்கெட் பண்டிக்கான முதல் கேள்வி ப்ளீஸ்.

ஆயா சுட்ட வடைல காக்கா சுட்ட வடை எது?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ் 

A)மெது வடை  B)மசால் வடை
C)ஆமை வடை D)தயிர் வடை

நல்லா யோசிச்சு சொல்லுங்க.இதுக்கு முன்னாடி எங்கயாவது காக்கா 
வடை திருடி பார்த்துருக்கீங்களா.

பாண்டி:எங்கக்கா திருடி பார்த்துருக்கேன்.ஆனா காக்கா திருடி பார்த்ததில்லை சார்.

தயா:ஒ உங்கக்கா டூ திருடியா?

பாண்டி:2 இல்லை சார்.ஒன் அக்கா தான்.அதுதான் என் வாத்தியாரு.சோக்கா ப்ளேட் போடும் தெரியுமா.ஒருதபா நீ வந்து பாரு,சோக்கா கிழிக்கும் உன் பாக்கெட்ட.என்னங்குற?

தயா:ஹே..நோ.நோ தேங்க்ஸ்.நாம விளையாட்ட பாப்போம்.பதில் சொல்லுங்க

பாண்டி:ஹ்ம்ம்.B மசால் வடை சார்.

தயா:ஆர் யு சூர்.B தான்னு எப்படி சொல்றீங்க?

பாண்டி:சாப்பாட்டுல மசாலா இருந்தா தான் எல்லாருக்கும் புடிக்கும்.ஏன்,சினிமால மசாலா இருந்தா தான் கூட்டமே கூடுது.அப்போ வடைல மசாலா இருந்தா காக்கா கூடாதா என்ன.அதான் சொல்றேன் மசால் வடை.நீ மிக்ஸ் பண்ணு ச்சா பிக்ஸ் பண்ணு.

தயா:ஓகே.ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் ஆப்ஷன் B) மசால் வடை.

வடை மிஸ் ஆனாலும்,உங்க விடை தப்பாகலை.யு ரைட்.இட்ஸ் B)மசால் வடை.சூப்பர்ப் 

பாண்டி:அஹ குஜாலா கீது அண்ணாத்த.அஹ நெக்ஸ்ட்டு

தயா:உங்களுக்கான அடுத்த கேள்வி.ஜீனியஸ் ப்ளீஸ்.

யாரோட பேச்சு விடிஞ்சா போச்சு?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A)குடிகாரன் B)ஆட்டோக்காரன்   
C)கட்சிக்காரன் D)கடன்காரன்

பாண்டி:இது நம்ம ஏரியா அண்ணாத்த.A)குடிகாரன் தான் கரெக்ட்டு ஹேன்சர்.பிக்ஸ் பண்ணிக்கோ

தயா:அதெப்படி யோசிக்காம சொல்றீங்க?

பாண்டி:அண்ணாத்த,ஆட்டோக்காரன் பேச்சு மீட்டர் மேல காசு வச்சதோட பூடும்.கட்சிக்காரன் பேச்சு கட்சி மீட்டிங்கோட  பூடும்.கடன்காரன் பேச்சு கடன்னோ இல்லை கடன்காரனையோ தீர்த்துட்டா பூடும்.ஆனா குடிகாரன் பேச்சு மப்பு இருக்கிற வரைதான்.நைட் ஏத்துனா மார்னிங் பூடும் அண்ணாத்த மப்பு.அப்போ A தான் ரைட்டு..எப்புடி?

தயா:வாவ்..பென்டாஸ்டிக்..இதுக்கு மேல யாருக்காச்சும் இதுல மப்பு இருக்கா சாரி டவுட் இருக்கா..எஸ் யு ஆர் ரைட்.இட்ஸ்  A)குடிகாரன்.

பாண்டி:ஆளு மப்புல இருந்தாலும்,சொல்லுல தப்பு இருக்காது.அதான் பாக்கெட் பாண்டி.


தயா:சூப்பர் பாண்டி.இதே மாதிரி ஸ்டெடியா ஆடுங்க.உங்களுக்கான அடுத்த கேள்வி,ஜீனியஸ் ப்ளீஸ்.  

ஆன்மீகத்தில் ஈடுபட ஒருத்தர் எதை விட வேண்டும்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A)பணம்  B)மானம் 
C)குட்டி  D)புட்டி 

நல்லா யோசிச்சு சொல்லுங்க 

பாண்டி:போன் ஆன் பிரெண்ட் சார்.என் பிரெண்ட் கண்ணம்மாபேட்டை கந்தசாமிக்கு பேசணும் பா.

தயா:ஓகே ஜீனியஸ்,கண்ணம்மாபேட்டை கந்தசாமிக்கு லைன் கொடுங்க
ஆமா அவுரு என்ன பண்றாரு?

பாண்டி:அவுரு கண்ணம்மாபேட்டைல ஆஷ்ரமம் வச்சுருக்காரு.

தயா:அவுரும் சாமியா?

பாண்டி:அப்படின்னு சொல்லிப்பான்.

(லைன் ரீச்சுடு.கந்தசாமி என்டர்ஸ் இன்டூ கான்வர்சேஷன்)

தயா:வணக்கம் திரு.கண்ணம்மாபேட்டை கந்தசாமி,நான் மொக்கை தயா,நீங்களும் ஆகலாம் ஒரு கேடில இருந்து பேசுறேன்.உங்க பிரெண்ட் பாக்கெட் பாண்டிக்கு உங்க ஹெல்ப் தேவபடுது

கந்தா:என் ஹெல்ப்பா,என்ன CD எதாவது வேணுமா பாண்டி?

பாண்டி:ஐயையோ உன்னோட CDயும் வேண்டாம்,உன்கூட இருக்கிற லேடியும் வேண்டாம்.கேட்கிற கேள்விக்கு பதில மட்டும் சொல்லு போதும்.

கந்தா:சரி சரி..சொல்லு?

பாண்டி:சாமியாரா இருக்கனும்னா எத டீல்ல விடனும்?

A)பணம்  B)மானம் 
C)குட்டி   D)புட்டி 

கந்தா:இதுல என்ன டவுட்..B)மானம் தான்.

பாண்டி:என்னப்பா சொல்ற.பதில் கரிக்டா?

கந்தா:அட,இம்மா வருஷமா இந்த தொழில் பன்னுறேன்னா எப்படி.மானத்தை வுட்டதால தான.B தான் ரைட்.

பாண்டி:அப்போ ஞானம் கீனம்னு ஏதோ சொல்வாங்களே.அது வேண்டாமா?

கந்தா:ஞானத்தை வச்சு நாக்கு கூட வழிக்க முடியாது.மானம் தான் ரைட்டு.

பாண்டி:அஹ ரொம்ப தேங்க்ஸ் நைனா

கந்தா:அப்புறம் ராத்திரி நம்ம ஏரியாவாண்ட வர்றது

பாண்டி:இல்லபா.நைட் 10-12 மினிஸ்டர் வீடு,அப்பால 12.30-1.45 MLA வீடு.அப்புறமா 2-4 நகை கடை.புல் பிஸி.அப்பால ப்ரீயா  இருக்க சொல்ல வறேன்.சரியா.பை

கந்தா:அப்போ சரி...ஆஹ மொக்கை தயா சார்,நீங்க வாரீங்களா?

தயா:ஆஹ..நானா..வேண்டாம் சாமி..நானும் நைட் பிஸி.

பாண்டி:தோ பாரா..நீ எந்த ஏரியா அண்ணாத்த?

தயா:ஐயோ,அதெல்லாம் இல்லைப்பா.நைட் தூங்கிடுவேன்.அத சொன்னேன்.

கந்தா:குழந்தாய்,நல்லா இரு.நான் வருகிறேன்.

தயா:ரொம்ப சந்தோசம் சாமி,போய்ட்டு வாங்க..உஸ்ஸு ஷப்பா...அஹ..வெல்,அப்போ B பிக்ஸ் பண்ணவா?

பாண்டி:அதுல என்ன டவுட்.B தான்.சாமி வாக்கு பொய்யாகுமா.வேணும்னா மீண்டும் போன் அடிச்சு கேளு.

தயா:மீண்டுமா.நோ..நோ..டவுட்.சும்மா கேட்டேன்.ஓகே ஜீனியஸ் ப்ளீஸ் பிக்ஸ் B............யாஹ் இட்ஸ் ரைட்.கங்கிராட்ஸ்...
இன்னும் 2 கேள்விகள் பாண்டி.லைப் லைன் இல்லை.கவனமா ஆடுங்க
ஓகே ஜீனியஸ்,நெக்ஸ்ட் கொஷின் பார் பாக்கெட் பாண்டி ப்ளீஸ்.

யாரை கண்டால் பேயும் இறங்கும்?
ஆப்ஷன்ஸ்

A)உன்னை  B)என்னை 
C)நாயை  D)பெண்ணை 

டைம் இருக்கு.நல்லா கவனமாபடிச்சு யோசிச்சு பதில் சொல்லுங்க

பாண்டி:உன்னை னா உங்களை..உங்களை கண்டா உங்க வீட்டு வாட்ச்மேன் கூட இறங்கமாட்டான்.என்னை கண்டா என் வீட்டு நாய் கூட அடங்காது.அந்த நாயா கண்டா நானும் அடங்கமாட்டேன்..ஹ்ம்ம்ம்........அப்போ பொண்ணு தாங்க.இதுக்கு இன்னொரு காரணமும் கீது.போன வாரம் எங்க ஏரியால ஒரு பையன பேய் புடுச்சிச்சி.என்னனமோ பண்ணாங்க..ஹ்ம்மம்ம்ம்ம்..ஒன்னும் சரிப்படல.அப்போ என் பொஞ்சாதி போய் சவுண்ட் வுட்டா பாருங்க,பேயே அரண்டு போய் வோடிபோச்சி.அதான் சொல்றேன் D தான் ரைட்.

தயா:உறுதியாத்தான் சொல்றீங்களா?

பாண்டி:அட என் பொஞ்சாதி மேல சத்தியமா சொல்றேன் அதாங்க.

தயா:ஓகே ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் D........எக்ஸ்செலன்ட்.யு ஆர் ரைட்.வெல் பிளேயிங் மிஸ்டர்.பாக்கெட் பாண்டி.லாஸ்ட் கொஷின்.சரியா சொன்னா நீங்க கேடி.கம் ஆன் மேன்.
உங்களுக்கான கடைசி மற்றும் கேடி ஆவதற்கான கொஷின்,ஜீனியஸ் ப்ளீஸ்.

கல்லடி பட்டாலும்_____________ படக்கூடாது?

அது என்ன.ஆப்ஷன்ஸ் ப்ளீஸ் ஜீனியஸ்

A)செருப்படி  B)பிரம்படி 
C)கண்ணடி  D)நெத்தியடி 

பாக்கெட் பாண்டி,உங்களை கேடி ஆக்கபோகும் கேள்வி.பதட்ட படாம,நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க.

பாண்டி:ஒரே குழப்பமா இருக்கு சார்

தயா:என்ன குழப்பம்,எதுல குழப்பம்?

பாண்டி:இதுல இருக்கிற எல்லா அடியும் நான் பட்டுருக்கேன்.அதான் குழப்பம்.

தயா:ஒ இன்டரெஸ்டிங்.

பாண்டி:பஜார்ல ஒரு பையன் நிஜார உருவிட்டேனு அவங்க ஆத்தாகாரி என்னை செருப்பால அடிச்சா.அப்பால ஒரு ஸ்கூலு டீச்சர் வுட்டுல திருட சொல்ல மாட்டிகினேனா,அந்த வாத்தி பெரம்பாலையே அடி அடின்னு அடிச்சு நொறுக்கிட்டான்.அப்பப்போ பஸ் ஸ்டான்ட்ல பொண்ணுகள கண்ணடிச்சு கன்னத்துல அடிவாங்கிருக்கேன்.அப்பால திருப்பதில ஒரு மொட்டை மண்டைகிட்ட ஆட்டிய போட சொல்ல மாட்டிக்க,அந்த மொட்டை மண்டையால என் நெத்தில அடிச்சான் பாரு.மூணு புல் அடிச்சா கணக்கா தலை கிர்ர்ரர்ர்ர்ருங்குச்சி ...இப்படி எல்லாமே பழக்கமா.அதான் குழப்பம்

தயா:நெறைய அடி வாங்குனா,பெரிய கேடி ஆகலாம் பாக்கெட் பாண்டி.தைரியமா ஆடுங்க.நீங்க வாங்குன அடி,உங்களை கேடி ஆக்கும்.நல்லா யோசிங்க 

பாண்டி:அஹ்ஹ்ஹ்ஹ...சார் C தான் ஹேன்சர்.அத்த பிக்ஸ் பண்ணுங்க முதல

தயா:நம்பிக்கையா சொல்றீங்களா.பிக்ஸ் பண்ணவா..எதை வச்சி C தான் ரைட்டுன்னு சொல்றீங்க.

பாண்டி:சார் பல பொண்ணுகளை கண்ணடிச்சு செருப்படி,கல்லடி எல்லாம் வந்கிருக்கேன்னு சொன்னேன்ல.அதுலாம் கூட பெருசா வலிக்கல சார்.ஆனா ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி,ஒரு பொண்ணு என்னை பார்த்து கண்ணடிச்சுதுன்னு அவளை ஓகே பண்ணேன் பாருங்க.அதுதான் சார் இன்னைக்கு வரைக்கும் வலிக்குது

தயா:அப்படியா யாரு அவுங்க..இப்போ என்னை பண்றாங்க?

பாண்டி:அவுங்க ஒன்னியும் பண்ணல.நான்தான் அவங்களுக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்

தயா:என்னை சொல்றீங்க?

பாண்டி:அது வேறயாருமில்ல சார்.என் பொஞ்சாதி தான் .தெரியாம மாட்டிகிட்டு தினம் தினம் அவஸ்தை படுறேன்.இந்த பொஞ்சாதிகலே இப்படிதான் சார்.பிக்ஸ் பண்ணுங்க சார்..பிக்ஸ் பண்ணுங்க..

தயா:சாரி மிஸ்டர்.பாக்கெட் பாண்டி.ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் C.......................................................................................வாவ்...நீங்க வாங்குன அடி,பட்ட கஷ்டம் வீண் போகலை.எஸ்,யு ஆர் ரைட் பாண்டி.யு ஆர் தி கேடி..கங்கிராட்ஸ் பாக்கெட் பாண்டி.

பாண்டி:ஆத்தா  நான் பாஸ் ஆகிட்டேன்...என் பொஞ்சாதிகலே எனக்கு கிடைச்சா ஒரே நல்லது இதான்.ஐய்யா ஜாலி

தயா:ஐயோ நீங்க காலி

பாண்டி:என்ன அண்ணாத்த சொல்ற?

தயா:திரும்பி பாரு,உன் பொண்டாட்டி

பாண்டி:அஹ,பங்கஜம்...எப்போமா வந்த?

பங்கஜம்:நீ என்னை பேய்ன்னு சொல்லும்போதே வந்துட்டேன்யா.ஏன்யா நான் உனக்கு பேயா...என்ன கட்டுன நாளுல இருந்து கஷ்டபடுறீகளோ.அதுக்கு முன்னாடி என்ன டாடா மாதிரி டாப்புல இருந்தியோ.

பாண்டி:பங்கஜம்..சும்ம்மா லுலுலாயி..எல்லாம் கேடி ஆகுறதுக்குதான் செல்லம்.மாமா உன்னை அப்படி சொல்வேனா பங்கு.

பங்கஜம்:ஒஹோ,கேடி ஆகுறதுக்கா.மவனே,சொல்றதெல்லாம் சொல்லிட்டு.கடைசில பங்குன்னு பம்புறது.இப்போ உன்னை நொங்குற நொங்குல உனக்கு ஊதப்போறாங்க பாரு சங்கு... 

பாண்டி:அஹ,பங்குஊஊஊஊஊஊஊஊஊஊஊ.....

2 comments:

  1. சூப்பர் பாஸ். உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல,கற்பனைத்திறனும் இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு, பட் ரொம்ப நீளமா இருக்கு.. வாசகர்கள இம்ப்ரெஸ்பண்ணனும்னா, பரிதாபம் பார்க்காம கொஞ்சம் நீளத்த குறைங்க...
    சந்தானம் ரசிகர்களால் நடாத்தபடும் இந்த ரியல் சந்தானம் பேன்ஸ் பிளாக்ல இருக்க இந்த பதிவையும் கொஞ்சம் பாருங்க.. சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு பதிவு..
    ஒரு கோடி உங்களுக்கே - ஆரியாவும் சந்தானமும்

    ReplyDelete