Monday, 22 October 2012

பேங்க் ஆப் புருடா

சக்தி:அந்த ஐ.ஜீக்கு மனசுல பெரிய இவுருன்னு நினைப்பு...

ஜான்:எவுருன்னு..

சக்தி:அதான்யா பெரிய..அது..என்னமோ சொல்வாங்களே..அது..

ஜான்:சரி விடு..அதான் வரலையே.

சக்தி:அது வரலைன்னாலும் பரவாலை..இவன் வரமாற்றானே.எதுனாலும் நம்மளைதான் முன்னாடி அனுப்புறான்.

ஜான்:என்னடா இப்படி பேசுற.அவுருபெரிய ஆளுடா.

சக்தி:என்னடா பெரியாளு.பேர பாரு.ஐ.ஜி சகாயம்.இவுரு ஐ.ஜி சகாயம் இல்லை.எல்.ஜி பெருங்காயம்...பெருங்காயம் கூட இல்லை.வெங்காயம்.நறுக்கு நறுக்குன்னு வெட்டனும் நல்லா.

ஜான்:அப்போகூட நம்ம கண்ணுதாண்டா எரியும்.

சக்தி:அதுவும் சரிதான்...அங்க ஊரே பேங்க் முன்னாடி நின்னு என்னாச்சோ ஏதாச்சோன்னு பரபரப்பா கிடக்கு.இவுரு என்னடானா நேருல வராம ச்சேர் போட்டு உக்காந்துட்டு ஸ்டேட்மென்ட் குடுக்குறாரு பிரஸ்சுக்கு.அந்த பிரஸ் நமக்கு குடுக்கிற ஸ்ட்ரெஸ் சமாளிக்கிறதே பெரிய வேலை.

ஜான்:புரிது.ஆனா நாம என்ன பண்ண.இவுரு சொல்ற வேலைய பார்த்துதான் ஆகணும்.அதான் நம்ம நிலைமை.

சக்தி:வாழ்க்கை ஒரு டவுசர் டா.அதை போட்டவன் தோய்ப்பான்...தோய்ச்சவன்  கிழிப்பான்...இவன் இன்னும் தோய்க்கல...சீக்கிரமே தோய்ப்பான்.தோய்ச்சு கிழிப்பான்.கிழிக்க வைப்பேன்.

ஜான்:அவுரு கிழிக்கிறது இருக்கட்டும்.நாம போய் நம்ம வேலைய பார்ப்போம்.இல்லைன்னா நம்ம டவுசர் கிழியும் டா.

சக்தி:பாயிண்ட்.அவுருக்காக இல்லைனாலும்,நம்ம டவுசருகக்காகவாச்சும் எதையாச்சும் கயிட்டுவோம்.இல்லாங்காட்டி நம்ம டவுசர கயிட்டிடுவானுக.

(இடம் - பேங்க் ஆப் புருடா)

ஜான்:(மைக் பிடித்தபடி)பேங்க் சுத்தி போலீஸ் இருக்காங்க.இனி உங்களால தப்பிக்க முடியாது.மரியாதையா சரணடைஞ்சிடுங்க.

மைக்கேல்:சாரி இன்ஸ்பெக்டர்,நாங்க முன்வச்ச கால பின் வைக்க மாட்டோம்.

சக்தி:பின் வைக்க வேண்டாம்.அப்படியே ஒரு பத்து,பதினஞ்சு அடி முன்னாடி வச்சு கேட் வரைக்கும் வந்தா போதும்.

மைக்கேல்:அப்படி வந்தா எங்களை விற்றுவீங்களா?

சக்தி:நிச்சயமா.பேங்க் பின்பக்கமா சுத்திட்டு வந்தாலும் விற்றுவோம்.ஆனா காசை வாங்கிட்டு தான் விடுவோம்.

ஜான்:சக்தி,என்ன பேசுற.ச்சா,காசு வாங்கிட்டு விட நான் ஒன்னும் தப்பான போலீஸ்காரன் இல்லை சக்தி.

சக்தி:முட்டாள்.காசோட அவங்களை விட நான் ஒன்னும் மடத்தனமான போலீஸ் இல்லை.

மைக்கேல்:என்ன போலீஸ் புத்திய காண்பிக்கிருயா சக்தி?

சக்தி:என்கிட்ட இருந்தா காண்பிப்பேன்.ஆனா இல்லை.அதான் போலீஸ் புத்திய காண்பிச்சேன்.எப்படி இருக்கு?

மைக்கேல்:உன்னவிட கேவலமா இருக்கு..

சக்தி:ஆனா உன்னவிட பெட்டரா தான் இருக்கும்.

மைக்கேல்:சக்தி,நீ யாருகிட்ட மோதுறேன்னு தெரியும்ல.மைக்கேல் கிட்ட.

சக்தி:எவன்னா இருந்தாலும் சுடுவேண்டா.

மைக்கேல்:நான் டிசோசாவோட ஆளு.

சக்தி:டிசோசாவோ இருந்தா என்ன.தீஞ்சி போன தோசையா இருந்தா என்ன.அவனையும் சுடுவேண்டா.

ஜான்:சக்தி..பேங்க் பக்கத்துல இருக்கிற ஒரு லாட்ஜ் இருக்கு.

சக்தி:அதுக்கு என்ன..அந்த லாட்ஜ்ல ரூம் போட்டு ரெண்டு லாட்ஜ் உடுலாங்குரியா.

ஜான்:அட நல்ல ஐடியா.ஆனா இப்போ அதை சொல்ல வரலை.அந்த லாட்ஜ்ல வழியா பேங்க் உள்ள போய் அவங்கள அட்டாக் பண்ணலாம்குறேன்.

சக்தி:இத ஏன்டா முன்னாடியே சொல்லலை.சரி,லாட்ஜ்ல போய் ஒரு ரூம் புக் பண்ணிட்டு அப்படியே பேங்க் உள்ள போவோம்.கம் ஆன்.

(பேங்க் உள்ள போய் மெதுவாய் மைக்கேல் இருக்கும் அறைக்கு சென்றவுடன்)

ஜான்,சக்தி:ஹான்ட்ஸ் அப்.

மைக்கேல்:வெல்கம் சக்தி அண்ட் ஜான்.எப்படியும் நீங்க இங்க வருவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்.

சக்தி:முன்னாடியே தெரியுமா...அப்புறம் ஏன்டா நாங்க உக்கார ஒரு ச்சேர் கூட போடாம வச்சுருக்க இந்த ரூம்ல.

மைக்கேல்:என் முன்னாடி யார் உக்காந்தாலும் எனக்கு பிடிக்காது.

சக்தி:அப்போ உனக்கு பின்னாடி போட்டு வைக்க வேண்டிதானடா.

மைக்கேல்:சு,வீண்பேச்சு வேண்டாம்.நமக்குள்ள ஒரு டீல் வச்சுப்போம்.என்னை நீங்க தப்பிக்க விட்டா உங்களுக்கு இதுல இருந்து ஒரு ஷேர் தரேன்.

சக்தி:நாங்க உக்காரதுக்கே ச்சேர் தராத நீயா ஷேர் தர போற.

மைக்கேல்:இப்படியே எத்தன காலம் தான் உயர் அதிகாரிகள் பேச்சுக்கு அடங்கி உடங்கி உக்காந்திட்டு இருப்பீங்க.எப்போதான் நிமிர்ந்து நிக்க போறீங்க?

ஜான்:அதான் இப்போ நின்னுகிட்டு இருக்கோம்ல.

மைக்கேல்:அஹ,விளையாட்டு பேச்சு வேண்டாம்.பீ சீரியஸ்.நான் கொடுக்கிற ஷேர் வாங்கிட்டு எங்காச்சும் வெளியூர் போய் வசதியா வாழலாம்.நல்லா யோசிங்க.உங்க முடிவு தான் என் முடிவு.என்ன சொல்றீங்க?

(சிறிது நேரம் யோசித்த பிறகு)

சக்தி:ஹ்ம்ம்..யோசிச்சிட்டேன்.சாரி,எங்களால முடியாது.

மைக்கேல்:நல்லா யோசிச்சுதான் சொல்றியா?

சக்தி:நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா,அப்புறம் என் பேச்சை இந்த ஜான்னே கேட்கமாட்டான்.அப்புறம் நான் எங்க கேட்குறது.

மைக்கேல்:அப்போ இதான் உங்க பதிலா?

ஜான்:பதில் இல்லை.இதான் எங்க முடிவு.

மைக்கேல்:ஆல்ரைட்.ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க முடிவு தான் என் முடிவு.சோ....பாய்ஸ்...

(ஆட்கள் துப்பாக்கியோடு நாளா பக்கமும் உள்ளே நுழைய)

மைக்கேல்:சாரி சக்தி.ஒத்துகிட்டு இருந்தா நல்லபடியா வாழ்ந்து இருக்கலாம்.பட் நவ்,இட்ஸ் டூ லேட்.

சக்தி:ஒத்துகிட்டு இருந்தாலும் நாங்க டூ(ரெண்டு) லேட் தான்.

ஜான்:என்ன சொல்ற சக்தி?

சக்தி:அவன் நம்ம முடிவு தான் அவன் முடிவுன்னு சொன்னன்ல.அதுல "நம்ம முடிவு"ன்னு சொன்னது நம்மோட சாவுதாண்டா.

மைக்கேல்:சரியா சொன்ன சக்தி.கேவலமா இருந்தாலும்,கேர்புல்லா தான் இருக்கு உன் போலீஸ் புத்தி.

சக்தி:கேவலமான புத்தினாலும் உன்னைவிட பெட்டர்ன்னு சொன்னேன்ல.

மைக்கேல்:பெட்டரா இருந்தும் நோ யூஸ்.இப்போ நீங்க சாகபோறீங்கலே.பாய்ஸ்,சீக்கிரம் கதைய முடிங்க....ஹே...என்ன பண்றீங்க?

 சக்தி:நீதானே சொன்ன கதைய முடிக்க சொல்லி.அதான்....ஹஹஹஹா,என்ன பாக்குற.இவங்கெல்லாம் எங்காளுங்க.நீ யோசிக்க கொடுத்த டைம்ல உன் ஆளுகளை எங்காலுக பார்சல் பண்ணிடாங்க.அப்பவே சொன்னேன்ல.என் போலீஸ் புத்தி கேவலமா இருந்தாலும்,உந்தை விட பெட்டரா இருக்கும்னு....என்ன பாக்குறீங்க.அர்ரெஸ்ட் ஹிம்.

(எல்லாம் முடிந்து வெளியே வந்த போது)

பிரஸ்:வாழ்த்துகள் சார்.வேகமாவும்,விவேகமாவும் செயல்பட்டு மிக திறமையா கொள்ளையரை புடிச்சிட்டீங்க.

ஐ.ஜி:ஹஹஹா,தேங்க்ஸ்,அது எங்க கடமை.அவர்களை புடிக்க என் தலைமையில் ஒரு தனிப்படி அமைச்சு சரியான வகைல திட்டம் வகுத்ததே இதுக்கான காரணம்.மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.எங்கிருந்தாலும் ஓடி வருவேன்.

சக்தி:(ஓடி வந்துட்டாலும்....எழுந்துருச்சு நிக்குறதுக்கே ஒரு மணி நேரம் ஆகுது.இதுல ஓடி வந்து கைட்டி கிழிக்குறதுக்குள்ள அவனுக அடுத்த பேங்க் கொள்ளை அடிக்க போய்டுவாணுக)

ஜான்:என்னடா இப்படி ஆகிடுச்சு.கஷ்டப்பட்டு பிடிச்சது நாம.இவுரு நோகாம நோபில் பரிசு தட்டிட்டு போறாரு.

சக்தி:இந்த பெருங்காயம் இப்படி பண்ணும்னு தெரிஞ்சுதான் வரும்போதே உனக்கு தெரியாம அந்த லாட்ஜ்ல ரூம் புக் பண்ணிட்டேன்.இவன் நோபில் வாங்குன என்ன,போன் பில் வாங்குன என்ன.வா நாம ஜாலியா ரெண்டு புல் வாங்கி என்ஜோய் பண்ணலாம்.

ஜான்,சக்தி:போட்டது பத்தல.மாப்புள இன்னொரு குவாட்டர் சொல்லுடா.அப்படியே மேட்டருசொல்லுடா...

ஐ.ஜி:அப்படியே எனக்கும் சேர்த்து சொல்லுடா...

ஜான்,சக்தி:சார்....

ஐ.ஜி:இந்த பேங்க் ராப்பரி பத்தி நினச்சு நினச்சே உடம்பும்,மைண்ட்டும் டயர்ட் ஆகிடுச்சு.அதான் எனக்கும் சேர்த்து சொல்ல சொன்னேன்.எல்லாரும் சேர்ந்து என்ஜோய் பண்ணுவோம்.என்ன ஓகே வா?

சக்தி:(திருடன புடிக்க வாயானா எங்களை அனுப்புறது.சரக்கடிக்க போறோம்னா மட்டும் கூட வாரது.இவுரு ஓசில குடிக்கிறதுக்கு எங்களை ஒகேய்வான்னு கேக்குது பாரு..இதெல்லாம்)

ஐ.ஜி:என்ன?

சக்தி,ஜான்:எஸ் சார்.


No comments:

Post a Comment