காவலாளி:ராஜாதி ராஜ,கூஜாதி கூஜ..ராஜ குலோத்துங்க,ராஜ குலமும் தூங்க...மா மன்னர் வரார்..வரார்..வரார்...
மன்னர்:அனைவரும் அமருங்கள்
மந்திரி:எவருமே எழவில்லையே மன்னா.
மன்னர்:அஹ,அப்படியா..ஹ்ம்ம்.அப்போ அனைவரும் எழுந்துருங்கள்.
(அனைவரும் எழுந்த பின்னர்)
மன்னர்:இப்போது அனைவரும் அமருங்கள்.எப்படி மந்திரியாரே
மந்திரி:ஆகா,அருமை மன்னா அருமை.எழாதவரை எழ வைத்த எழுச்சி திலகம் வாழ்க.
சபையினர்:வாழ்க.
மன்னா:ஹாஹா..இருக்கட்டும் இருக்கட்டும்...ஆமாம் இன்று எனை காண எவெரேனும் வந்துள்ளனரா?
மந்திரி:ஆம் மன்னா.உங்களிடம வேடிக்கை காட்ட வேண்டும் என கவிஞர்கள் வந்துள்ளனர்.
மன்னர்:என்னது வேடிக்கை காட்ட கவிஞர்களா..என்ன இது விந்தை..
மந்திரி:ஆம் மன்னா.உங்களின் வீர,தீர செயல்களை பற்றிப்பாடி உங்களின் சிறப்புகளை பறைசாற்ற போகிறார்களாம்.கேட்கவே வேடிக்கையாக உள்ளதல்லவா.ஹஹஹஹஹா
மன்னர்:மந்திரியாரே..
மந்திரி:அஹ,மன்னிக்கவும் மன்னா.யாரங்கே,அவர்களை அழைத்து வாரும்.
கவிஞர் கசக்கிமுத்து(கசக்கி):சபையினருக்கும்,மா மன்னருக்கும் வணக்கம்...
மன்னர்:வணக்கம்.தங்கள் பெயரென்னவோ?
கசக்கி:கசக்கிமுத்து மன்னா.தங்களின் புகழை பாடி பரிசல் பெறவே யாம் வடுகபட்டியில் இருந்து வண்டியோட்டி வந்தோம்.பாடவா மன்னா?
மன்னர்:ஹ்ம்ம்..ஆரம்பியுங்கள்...
கசக்கி:மன்னா..மக்காலையா..மக்காலையா...யாஹு.யாஹு..சே...
மன்னா..மக்காலையா..மக்காலையா..யாஹு..யாஹு.சே...
மந்திரி:மன்னா....
மன்னா:என்னா?
மந்திரி:உங்களை இழிவுபடுத்திவிட்டான் மன்னா.
மன்னா:என்ன சொல்கிறீர் மந்திரியாரே?
மந்திரி:ஆம் மன்னா.மக்காலையா என்றால் மக்கா இல்லையா என்று பொருள்படும்.யாஹு என்றால் யாராவது என்று அர்த்தம்.சே என்றால் சொல்லுங்கள் என்று அர்த்தம்.அவன் மன்னர் மக்கா இல்லையா என்று யாரவது சொல்லுங்களேன் எனப்பாடி இழிவுபடுத்தி உள்ளான் மன்னா.
மன்னர்:ஆக்ஹா,உனக்கு என்ன ஒரு இறுமாப்பு.யாரங்கே..இவனை குண்டுசட்டிக்குள் குப்புற போட்டு கொப்பரை எண்ணெய் ஊற்றி வேகும்வரை வறுத்தெடுத்து,வாடும்வரை கொழுப்பெடுத்து இவன் நாட்டைவிட்டு ஓடும்வரை உயிர் எடுக்கவும்.
காவலாளி:ஆகட்டும் மன்னா...
மன்னர்:அடுத்தது யார்?
கவிஞர் பஞ்சாபிகேஷன்(பஞ்சு):அனைவருக்கும் வணக்கம்.அனைவரையும் அரவணைக்கும் அரசருக்கும் வணக்கம்.
மன்னர்:ஆகா,என்ன ஒரு அவையடக்கம்.தங்கள் பெயரென்னவோ?
பஞ்சு:என் பெயர் பஞ்சாபிகேஷன்.நஞ்சை இன்றி புஞ்சை இன்றி பண்ருட்டியில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பஞ்சாபிகேஷன்.தங்களிடம் பாடி பஞ்சம் போக்கவந்த வழிப்போக்கன் மன்னா.
மன்னர்:மிக்க மகிழ்ச்சி.பாடும்.
பஞ்சு:என் உச்சி மண்டைல சுர்ருங்குது.உன்னை நான் பார்க்கைல கிர்ருங்குது...கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது..கர்ருங்குது....
மந்திரி:மன்னா...
மன்னா:இப்போ என்னா?
மந்திரி:அவன் பஞ்சத்திற்கு காரணம் நீர் என்று அவன் தங்களை சாடுகிறான் மன்னா.
மன்னர்:எப்படி கூறுகிறீர்கள் மந்திரியாரே?
மந்திரி:மன்னா..அவன் பாடியது என்ன.."என் உச்சி மண்டைல சுர்ருங்குது"..அதாவது உணவுக்காக அலைவதால் அவன் உச்சந்தலை உஷனமாக உள்ளதாம்.அடுத்து "உன்னை நான் பார்க்கைல கிர்ருங்குது"..அதாவது பசியால் வாடும் அவன் உங்களை காணும் போது தலை சுற்றுகிறதாம்..அடுத்து "கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது"..அதாவது அவனை பசியால் வாடவைக்கும் நீங்கள் அருகில் வந்தால் எரிச்சல் வருகிறதாம்...கர்ருங்குது..அதாவது இப்படி தரமற்ற ஆட்சி நடத்தும் தங்களை கொலை செய்ய தோன்றுகிறதாம்.
மன்னா:அவன் பாடியதை விட பெரிதாக உள்ளதே.இது உண்மையிலே அவன் பாடியதன் பொருளா..இல்லை என்னைபற்றி தாங்கள் எண்ணியதன் பொருளா?
மந்திரி:ஐயகோ..என் மீது ஐயமா...அன்னமிட்ட அரசருக்கு அநியாயம் செய்வேனா...
மன்னா:நம்பிவிட்டோம் உம்மை.யாரங்கே...இந்த பஞ்சாபிகேஷனை பஞ்சாலையில் போட்டு பஞ்சு பஞ்சாய் ஆக்கி பஞ்சாமிர்தம் ஆக்கி முடிந்தவரை நக்குங்கல்.முடியாவிட்டால் உரலில் போட்டு ஆட்டுங்கள்....ஹ்ம்ம்..அடுத்தது யார்?
பணிப்பெண்:மன்னா...
மன்னா:ஆஹ,யார் இந்த பதுமை?
மந்திரி:அரண்மனை பணிப்பெண் மன்னா.
மன்னா:அப்படியா..அப்போது இன்று முதல் இவள் என் அந்தரங்க பணிப்பெண் ஆக்குங்கள் மந்திரியாரே.
மந்திரி:மன்னா..நான் மந்திரி.
மன்னா:என் பேச்சை கேக்காவிட்டால் நீ எந்திரி.
மந்திரி:ஆ...இன்றுமுதல் நீ இவர் அந்தபுரத்து சுந்தரி.
மன்னர்:ஹஹஹஹா...இப்போதுதான் நீ என் மந்திரி..ஹ்ம்ம்..அடுத்தது யாரு?
கவிப்பெண் கயல்விழி(கயல்):அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் கயல்விழி.யாம் காஞ்சிவரத்தில் இருந்து வந்துள்ளோம்.
மன்னா:வணக்கம்.ஆமாம்..ஏன் வேறு திசை நோக்கி திரும்பி உள்ளீர்.
கயல்:எங்கள் குலவழக்கப்படி எங்கள் முகத்தை வெளியாட்களோ,அவர்கள் முகத்தை நாங்களோ பார்ப்பதில்லை.சரி,தங்களை பற்றி யாம் இயற்றிய பாடலை பாடவா மன்னா?
மன்னா:இல்லறம் போற்றும் பெண்ணுக்கு இலக்கியமும் வருமா..பலே பலே...எங்க பாடும் கேட்போம்..?
கயல்:கருப்பு பேரழகா..கண்ணுக்குள்ள நிக்குறியே ஜோரா ..கிளிச்சிபுட்ட நாரா..
கருப்பு போல ஏதும் பூமியில இல்லை..நீ அந்த கண்ணன்னோட புள்ளை...
மன்னா:அடி ஆத்தா..ஆத்தா..குங்குமப்பூ சோத்தை தான்...தின்னுபுட்டு உங்கம்மா பெத்தாலா...
அடி..செழிப்பா..ஜொலிப்பா ..வெள்ளை கலரை காட்டிதான்....கருப்பு பையனை கவுத்துபுட்டேடி...
மந்திரி:ஆகா,அருமையாக பாடுனீர் மன்னா...
மன்னா:எம்மைவிட இவள் குரல் இனிமையாக இருந்தது மந்திரியாரே.அவளை கண்களில் காந்தம் உள்ளது போல் தோன்றுகிறது.இவளை நான் மனம் முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்..
மந்திரி:மன்னா அரசியார் கோபம் கொள்வார்..
மன்னா:நாம் அரசியாரை கொன்று விடுவார்...
மந்திரி:மன்னா..அவர் இந்நாட்டிற்கும் தங்களுக்கும் தலைவி.
மன்னா:என்னை நச்சரிக்கும் குலவி ...நலிந்து போன கிழவி..அவளா என் தலைவி.இல்லை.இனி இவள்தான் என் தலைவி..கயல்விழி என் தலைவி.என்ன சொல்கிறார்?
கயல்:தங்கள் சித்தம் என் பாக்கியம்..
மன்னா:மிக்க மகிழ்ச்சி...திரும்பி நின்றது போதும்.எங்கே இவ்வண்ணம் திரும்பி உன் இன்முகத்தை காட்டு...
(திரும்பி முகத்தை காட்டியதும்)
மன்னா,மந்திரி:அஹ,தலைவி...
அரசி:தலைவி அல்ல..நச்சரிக்கும் குலவி ...நலிந்து போன கிழவி...யாம் கோபம் கொண்டால் நீர் என்னை கொள்வீரோ...இப்போது யாம் கோபமாக உள்ளோம் எங்கே எம்மை கொள்ளுங்கள் பார்ப்போம்.
மன்னா:தலைவியாரே...
அரசி:தங்களுக்காக இன்னொரு பாடல் உள்ளது மன்னா..பாடவா...சிரிச்ச முகத்தை சிதற வைக்க,முறைச்ச கண்ணை மூட வைக்க,இளிச்ச பல்லை இடிச்சு நொறுக்க,அடிச்ச கைய முறிச்சு உடைக்க...கொலைவெறியோட நெருங்க நெருங்க நெருங்கவே.....சூர காத்த போல வராடா ..கிறுக்கு பிடி பிடிக்க வராடா......உன் எழும்பு உடைய உடைய உடைய..விளையாட வரா காஞ்சனா...

No comments:
Post a Comment