Monday, 1 October 2012

ஒசாமாவின் ஓசானா

சத்யா:சபா,வாடா கிளம்புவோம்...

சபா(சபாபதி):எங்கடா?

சத்யா:என்னடா மறந்துட்டியா.இன்னைக்கு என் ஆளு அணுவோட அப்பன் அதான் என் மாமா என்னை மீட் பண்ணனும்னு சொன்னதா அணு சொன்னாலே.மறந்துட்டியா?

சபா:உன்னதான மீட் பண்ணனும்னு சொன்னாரு.என்னய்யா சொன்னாரு.நீ போ.என்னை ஏண்டா  கூப்பிடுற?

சத்யா:என்னடா இப்படி சொல்லிட்டா.நீ இல்லாம நான் எப்படிடா தனியா போவேன்.

சபா:ஏன் அணுவ சைட் அடிக்கும்போது,லவ் பண்ணும்போது,அவளோட ஊர் சுத்தும்போது எல்லாம் என்னையும் கூட கூட்டிட்டு போனியா.

சத்யா:அது..

சபா:இல்லைல.அப்போ ஏன்டா இப்போமட்டும்.அவல பார்க்கிறதுக்கு தனிய போவ.அவங்கப்பன பாக்குறதுக்கு நான் கூட வரணுமா.

சத்யா:பயமா இருக்குடா?

சபா:அவுரு என்ன  அணுவோட அப்பண்ணா இல்லை அணுகுண்டு போடுற வெப்பன்னா.பயப்படுறதுக்கு ..சரி போ,அடி வாங்கனும்னு இருந்தா யாரால மாத்த முடியும்.

சத்யா:கவலைபடாத...நல்லபடியா முடியும்.

சபா:எது நம்ம கதையா?

சத்யா:அட வாடா..

(அணுவின் வீட்டில்)

சத்யா,சபா:வணக்கம் சார்...

அப்பா:வணக்கம்,நீ தான் என் பொண்ணு சொன்ன சத்யா வா?

சத்யா:ஆ..ஆ....ஆமா சார்.

அப்பா:நீங்க யாரு தம்பி?

சபா:நான் யாரோட தம்பியும் இல்லைங்க.வீட்டுக்கு ஒரே பையன்.

அப்பா:ஹ்ம்ம்....ஆமா,சத்யா..நீங்க என்ன பண்ணுறீங்க?

சத்யா:ஒரு கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்குறேன்.மாசம் 8000 சம்பளம்.

அப்பா:நீங்க?

சபா:இவன் பாக்குற வேலையை வேடிக்கை பாக்குறேன்.

அப்பா:வேடிக்கை பாக்குறீங்களா?

சபா:அட,சூப்பர்வைசர் வேலை என்பதை அப்படி சொன்னேன் சார்.மாசம் 12000  சம்பளம்.

அப்பா:குட்..உங்களபத்தி நான் தெரிஞ்சிகிட்டேன்...என்ன பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா?

சபா:ஒ தெரியுமே.நீங்கதான் அணுவோட அப்பா.

அப்பா:அதை கேட்கலை.வேற ஏதாவது தெரியுமா?

சபா:அவ அம்மாவோட புருஷனும் நீங்கதானாமே.

அப்பா:என்னது?

சத்யா:அடேய்...சாரி சார்.இவன் இப்படிதான்.எதாச்சும் உளறுவான்.நீங்க சொல்லுங்க சார்.

அப்பா:எனக்கு ஏகப்பட்ட சொத்துபத்து,தொழில்கள் இருக்கு.ஒரு நாளைக்கு நான் எத்தன கோடி சம்பாதிக்கிறேன்னு எனக்கே தெரியாது.

சபா:ஏன்?

அப்பா:ஏன்னா கணக்கே இல்லாம சம்பாதிக்கிறேன்.

சபா:கணக்கே இல்லாமணா,அப்போ கருப்பு பணமா?

அப்பா:ஷு...நீ வாங்குற சம்பளம் என் வீட்டு நாயோட ஒரு மாச சாப்பாட்டு செலவு.அவ்வளவு ஏன்,என் பொண்..

சபா:உங்க பொண்ணும் அந்த சாப்பாட்டை தான் சாப்பிடுறாங்களா?

அப்பா:ஹ்ம்ம்.....என் பொண்ணோட ஒரு நாள் செலவு நீ வாங்குற 12000 சம்பளம்.இதுல இருந்து என்ன தெரிது?

சபா:உங்க பொண்ணு நல்லா தண்ட செலவு பண்ணும்னு தெரிது.

சத்யா:ஏன்டா..கம்முன்னு இருடா..நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரிது சார்.நான் வாங்குற சம்பளத்துல உங்க பொண்ணை சந்தோசமா வச்சிக்க முடியாதுன்னு தானே சொல்றீங்க.

அப்பா:எஸ்.ஏன்,என் வீட்டு வேலைக்காரி கூட 6000 ருபாய் சம்பளம் வாங்குறா தெரியுமா.

சபா:அப்போ அவளை சந்தோசமா வச்சுக்கலாம்னு சொல்றீங்களா.

அப்பா:அஹ,அதுகூட கஷ்டம் தான்.

சபா:ஏன்,அவங்களை நீங்க வச்சுருக்கீங்களா?

அப்பா:ஹலோ..ஹோல்ட் யுவர் டங்(hold ur tongue)

சபா:முதல நீ அடங்.

சத்யா:டேய் சபா...

சபா:இருடா...ஓவரா ஓட்டுறீங்க.எப்பவுமே தேவைக்கு தான் பணம்.பணம் நம்ம தேவையா இருந்திட கூடாது.உங்க பொண்ணுக்கு கோடீஸ்வர மாப்பிள்ளைய பாக்குறீங்கன்னு வச்சிகோங்க.கல்யாணத்துக்கு அப்புறம் அவன் பொண்ணுக விஷயத்துல அப்படி இப்படின்னா என்ன பண்ணுவீங்க.பணக்காரன் தானேன்னு பொண்ணை அட்ஜஸ்ட் பண்ண சொல்வீங்களா.சொல்லுங்க.இல்லைலா.

அப்பா:அதுக்குன்னு இவனுக்கு என் பொண்ணை கட்டி தர சொல்றியா.இவனுக்கு கட்டிக்கிட்டு என் பொண்ணு எப்படி சந்தோசமா இருப்பா?

சத்யா:உங்க பொண்ணு சந்தோசமா இருப்பாளான்னு சொல்ல தெரில சார்.ஆனா கண்டிப்பா கஷ்டப்பட மாட்டா.ஏன்னா அவளுக்கு என்னை பிடிக்கும்.பிடிச்சவங்க கூட வாழ்ந்தா எதுவும் கஷ்டமா தெரியாது.

அப்பா:ஆனா,என் பொண்ணு சந்தோசமாவும் வாழணும்னு நான் நினைக்குறதுல தப்பில்லையே.

அணு:தப்பே இல்லை டாட்.பட் அதே சமயம்,உங்க பொண்ணு புடிச்ச வாழ்க்கைய அவ வாழுறதுலையும் தப்பில்லையே.

அப்பா:உனக்கு பிடிச்சிருக்குங்குற ஒரே காரணத்துக்காக உன்னை அவனுக்கு கட்டி கொடுக்க முடியுமா?

சபா:கட்டி கொடுக்க சொல்லலை.உங்க பொண்ணை கட்டிகிறத்துக்கு ஒரு வாய்ப்பு குடுங்க.அதை வச்சு,தன் தகுதிய வளர்த்துகிட்டு,அப்புறம் உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுப்பான்.

அப்பா:அப்படி அவன் செய்யலைன்னா?

சபா:அதெல்லாம் செய்வான் சார்.நம்பிக்கை தானே வாழ்க்கை.

அப்பா:இந்த வாழ்க்கை,வாழக்காய் எல்லாம் வேண்டாம்.அவன் அப்படி செய்யலைன்னா?

சத்யா:என் நண்பனை என்ன வேணும்னாலும் செஞ்சுகோங்க..

சபா:என்னது என்னய்யா..?

அப்பா:இது பேச்சு.நீ சொன்ன மாதிரி நடந்துக்கலைன்னா உன் நண்பனை நான் தூக்கிடுவேன்.

சபா:என்னது தூக்கா?

(வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு)

சபா:டேய் ஒழுங்கா பண்ணிடுவல.

சத்யா:கவலைப்படாதடா.கண்டிப்பா இந்த வாய்ப்ப வீணடிக்க மாட்டேன்.என்ன,இதுலதான் எங்க ரெண்டு பேரு வாழ்க்கை அடங்கி இருக்கு.

சபா:என் வாழ்க்கையும் இதுலதான் டா அடங்கிருக்கு.

சத்யா:ஏண்டா பயப்படுற?

சபா:பின்ன.சும்மா இருந்தவன வாடான்னு வம்படியா கூட்டிட்டு போய் வம்புல மாட்டிவிட்டுட்ட.பயப்படாம என்ன செய்றது.அவங்கப்பன் வேற ஒசாமா கணக்கா தீவிரமா இருக்கான் என்னை தூக்குரதுல.இந்த லவ் தேவையாடா?

சத்யா:டேய்,என்னடா இப்படி கேட்டுட்டா.அவங்கப்பன் ஒசாமாவ இருந்தாலும் என் அணு எனக்கு ஓசானா டா.நிச்சயம்,எங்கள் காதல் கை கூடும்.

சபா:கை கூடனும்.அப்படி கை கூடாம போன,என் தலை காணாம போய்டும் டா.பார்த்து....நம்பி கூட  போனதுக்கு கோர்த்து விட்டானே.ஆத்தா மகமாயி,இவங்களுக்காக இல்லாட்டினாலும் எனக்காகவாச்சும் இந்த காதலை சேர்த்து வச்சு அந்த ஒசாமா கிட்ட இருந்து என் உசுர காப்பாத்து தாயே.   

3 comments:

  1. நல்ல நகைச்சுவை மச்சி, இன்னும் வசன நுணுக்கங்களை இம்ப்ரூவ் செய்யனும், வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகா! நானும் இதை வழிமொழிகிறேன்! ஆனால் ஒன்னு... புதுசா புதுசா யோசிக்கிறீங்க! வாழ்த்துக்கள்!

      Delete
  2. :அவுரு என்ன அணுவோட அப்பண்ணா இல்லை அணுகுண்டு போடுற வெப்பன்னா. intha varigal super nanbaa... antha saba neeyaa???

    ReplyDelete