ரூல்ஸ் ரோசப்பா:யுவர் ஆனர்,இதோ இங்கு நிற்கும் குஜ்லி குமாரி கடந்த சனிக்கிழமை கோவிலுக்கு போய் இருக்காரு.அப்போது வெளியே விட்டு சென்ற செருப்பு,திரும்பி வந்து பார்க்கும்போது இல்லை.அதை திருடியது இதோ இந்த குற்றவாளி கூண்டில் நிற்கும் சில்க் சிந்தாமணி தான் என்று உறுதியாக கூறுகிறேன்.
ரவுசு ராசப்பா:நோ.யுவர் ஆனர்,எனது கட்சிகாரர் சில்க் சிந்தாமணி மீது அபாண்டமா பழி போடுறாங்க.அவர் நிரபராதி.அதற்க்கு ஆதாரம் அதே கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சாண்டி மற்றும் செருப்புக்கு டோக்கன் போடும் மாக்கான்.
நீதிபதி:சில்க் சிந்தாமணி செருப்பு திருடலைன்னு உங்களுக்கு தெரியுமா?
மாக்கான்:ஐயா,அப்போ நான் தம் அடிச்சிட்டு இருந்தேன்.எனக்கு தெரிஞ்சு அவங்க திருடலையா.
பிச்சை:ஆமாயா,அவங்க திருடலையா.ஏன் எனக்கு பிச்சை கூட போடலையா.
ரூல்ஸ்:யுவர் ஆனர்,இவர்களை நான் விசாரணை பண்ண அனுமதி தாருங்கள்.
நீதிபதி:எஸ்,ப்ரொசீட்.
ரூல்ஸ்:முதலில் பிச்சாண்டி.
பிச்சாண்டி,பிச்சாண்டி.பிச்சாண்டி....
பிச்சை:ஐயா சாமி,தர்மம் பண்ணுங்கையா..
ரூல்ஸ்:நான் சொல்வதெல்லாம் உண்மை,உண்மைய தவிர வேறோன்றுமில்லைன்னு சொல்லணும்
ரவுசு:அதை ஏன் அவுரு சொல்லனுமுன்னு கட்டாய படுத்துறீங்க?
ரூல்ஸ்:அதை சொன்னாதான் அவுருக்கு காசு போடுவேன்.
பிச்சை:என்னது காசா...நீங்க சொல்றதெல்லாம் உண்மை..உண்மைய தவிர வேறொன்றுமில்லை.இப்போவாச்சும் தர்மம் பண்ணுங்கையா..
ரூல்ஸ்:பார்த்தீங்களா யுவர் ஆனர்.பிச்சை போடுறேன்னு சொன்னா,நான் சொல்றதை கூட அப்படியே சொல்ல தயாரா இருக்கிறார் இந்த பிச்சாண்டி.இவரை போன்றோர் சொல்வதை சாட்சியாக ஏற்கக்கூடாது.நீங்க போகலாம்.
பிச்சை:சாமி அப்போ காசு?
ரவுசு:கேஸ் போச்சு.அப்புறம் என்னடா காசு.
பிச்சை:சாமி,அப்போ நீங்களாச்சும் தர்மம் பண்ணுங்க.
ரூல்ஸ்:சாரி,சேன்ஜ் இல்லை.
பிச்சை:பரவாலை சாமி.ஒரு ரூபா கூட அசெப்ட் பண்ணுவோம்.ஆல்சோ,அம்பது காசு.
ரூல்ஸ்:அதெல்லாம் இல்லை.
பிச்சை:அதுவும் இல்லையா.அப்புறம் எதுக்கு இங்க இருக்கிற.என்கூட வா.நீதி நீதின்னு அலையுறதுக்கு பதிலா என்கூட வீதி வீதியா அலைஞ்சா வயித்துக்கு சோறாவது மிஞ்சும்.என்ன சொல்ற சாமி?
ரூல்ஸ்:கெட் அவுட் ஆப் மை சைட்.
பிச்சை:நீங்க சைட் அடிக்கிறதுக்கு நான் கெட் அவுட்டா.என்ன நீதியோ போ....ஐயா சாமி,,யாராச்சும் தர்மம் பண்ணுங்கையா..
மாக்கான்,மாக்கான்,மாக்கான்...
மாக்கான்:வணக்கம் சார்.
ரூல்ஸ்:வணக்கம் மிஸ்டர் மாக்கான்.நீங்க டோக்கன் போடுறதை தவிர்த்து வேற என்னென்ன செய்வீங்க?
மாக்கான்:கூட்டம் வரலைன்னா கடையாண்ட போய் ஒரு தம் போடுவேன்.
ரூல்ஸ்:அப்புறம்?
மாக்கான்: அடிச்ச தம்முக்கு காசு கேட்டா சண்டை போடுவேன்.
ரூல்ஸ்:தென்?
மாக்கான்:சண்டை போட்டதுல வலியா இருந்துச்சுனா நைட் ஒரு கட்டிங் போடுவேன்.
ரூல்ஸ்:தென்?
மாக்கான்:இப்படியே கேள்வி கேட்டா உங்களை போடுவேன்.
ரூல்ஸ்:அஹ,குட்.யுவர் ஆனர்,இதுல இருந்தே இவரோட வெளிப்படையான வெள்ளை உள்ளம் தெரிது பாருங்க.நீங்க போகலாம்.
மாக்கான்:அது..வரட்டா..
ரூல்ஸ்:யுவர் ஆனர்,இவர்கள் இருவரையும் விசாரித்ததில்..இருவருமே தவறு என்பது உறுதியாகி உள்ளது.
ரவுசு:அதெப்படி சொல்றீங்க?
ரூல்ஸ்:பிச்சைகாரன் பத்தி அல்ரெடி சொல்லிட்டேன்.டோக்கன் போடுறவர் கூட்டம் இல்லைன்னா தம் அடிக்க போய்டுவேன்னு சொன்னாரு.சம்பவம் நடந்த அப்போ தம் அடிக்க போனாருன்னு சொன்னாரு.சோ,அவரும் அப்போ அங்க இல்லை,கூட்டமும் இல்லை.அப்போதான் திருட்டு நடந்துருக்கு.சோ,ரெண்டு பேரும் சொன்னது ஏற்றுகொள்ள முடியாத,நம்ப முடியாத பொய்.ஆகையால்,சில்க் சிந்தாமணிதான் குற்றவாளி என்பது நிரூபணம் ஆகிறது.
நீதிபதி:சில்க் சிந்தாமணி அவர்களே...
சில்க்:மாமா....
நீதிபதி:அஹ....யேம்மா...
ரூல்ஸ்,ரவுசு:சார்.....
நீதிபதி:அஹ,அது,,தபு..ஏம்மா..இப்படிலாம் கூப்பிட கூடாது.மாமாக்கு ச்சா எனக்கு சங்கடமா இருக்குல.இந்த குற்றசாட்டை பத்தி என்ன சொல்றீங்க?
சில்க்:அதை நான் பண்ணலைங்க.என்ற மாமன் மேல சத்தியம்.ஏன்,உங்க மேலேயும் சத்தியம்.
நீதிபதி:என்னது என் மேலயுமா..ஈஸ்வரா...
ரவுசு:ஆம் நீதிபதி அவர்களே..அவர்கள் குற்றம் அற்றவர்.செருப்பு தொலைந்த போன சமயம் அவர் ஒரு கடையில் கடலை முட்டாய் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.அதற்க்கான ஆதாரம் இதோ அவர் சாப்பிட்ட கடலை முட்டாய் கவர்.இதில் அவரது கை ரேகை பதிந்திருக்கு.
ரூல்ஸ்:கண்ணால் காண்பதும் பொய்,மோர்ந்து பார்ப்பதும் பொய்,சாப்பிட்டு பார்ப்பதே மெய்.கவுரு கடலை முட்டாய்ன்னு சொன்னாலும் அவுரு சாப்பிட்டது பர்பி.கடலை முட்டாய் உருண்டையாக இருக்கும்.பர்பி தட்டையாக இருக்கும்.இதில் இருந்து என்ன தெரிகிறது?
ரவுசு:நீ கண்டமேனிக்கு கடலை முட்டாய் தின்னுறேன்னு தெரிது.
ரூல்ஸ்:ஒய்,அது இல்லை.இவர் சொன்னது பொய்.அந்த கடையில் இவரு தின்றது பர்பி தான்.அந்த செருப்பை திருடியது இவர்தான்.
சில்க்:ஐயோ,நான் சாப்பிட்டது வேணும்னா பர்பின்னு தெரியாம இருக்கலாம்.ஆனா,அந்த செருப்பை நான் திருடலைங்க.
நீதிபதி:அப்போ அந்த செருப்பை திருடியது யார்?
பூவாத்தா:அதை நான் சொல்றேன்.
நீதிபதி:நீங்க யாரு?
பூவாத்தா:அஹ,அந்த செருப்போட ஓனர்.பூ விக்குற பூவாத்தா.அது என் செருப்புங்க.
நீதிபதி:அப்போ இவங்க செருப்பு?
ஜெர்க்:அதை நான் சொல்றேன்.
நீதிபதி:நீங்க யாரு?
ஜெர்க்:நான் குஜ்லியோட ஓனர்.ஜெர்க் ஜெகன்னாதன்.
குஜ்லி:ஏன்னா...
ஜெர்க்:என்ன நோன்னா...ஜட்ஜ் சார்,அன்னைக்கு இவ செருப்பே போட்டுட்டு போல.பிஞ்சி போச்சுன்னு வீட்டுலையே விட்டுட்டா..
நீதிபதி:போடாத செருப்புக்கா கேஸ் போட்டேள்.ஆமா,செருப்பு எப்படி பிஞ்சுது?
ஜெர்க்:அதெல்லாம் எதுக்கு நோன்டுறேல்.அதெல்லாம் பர்சனல்.அதான் குழப்பம் போய்டுதேன்னோ.அதோட விடுங்கோ.தீர்ப்ப சொல்லி கேஸ்ஸ முடிங்கோ ஒய்.
நீதிபதி:தொலையாத செருப்பை தொலைஞ்சதா சொல்லி கேஸ் போட்டு கோர்ட் நேரத்தை வீணடிச்ச குஜ்லிக்கும்,அதுக்கு வாதாடுறேன்னு பேருல வறுத்தெடுத்த வக்கீல் ரூல்ஸ் ரோசப்பாவுக்கும் According to Slipper Robbery Act, sec.111 படி வறுக்கும் வெயிலில் செருப்பில்லாம நூறு முறை கோவிலை சுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்குகிறேன்.
குஜ்லி:ஏன்னா,இந்த கொடுமைய கேட்டேளா...
ஜெர்க்:என் பேச்சை நீ கேட்டுருந்தா இப்போ இந்த தீர்ப்பை கேட்க வேண்டி இருந்துருக்காது.ஆணி மேல செருப்பு பட்டாலும்,செருப்பு குள்ள ஆணி போனாலும் சேதம் என்னவோ செருப்புக்கு தான்.இனிமேலாச்சும் புரிஞ்சி நடை செருப்பில்லாம.
நல்லதோர் நகைச்சுவை. கற்பனைவளம் மிகுந்த, பொருத்தமான வார்த்தை ஜாலம் அபாரம். நல்லா வருவீங்க ராஜா. வாழ்க வளர்க.
ReplyDeleteநான் சிரித்து முடித்த பின் என் கமெண்டை பதிவு செய்கிறேன்
ReplyDelete