பாஸ்:எல்லாரும் கவனமா கேளுங்க.இந்த பேங்க் ல தான் இன்னைக்கு நாம கொள்ளை அடிக்க போறோம்.
ஜான்:என்ன பாஸ்,பேங்க் மூடிருக்கு.எப்படி கொள்ளை அடிக்கிறது.வேணும்னா இப்போ போயிட்டு நாளைக்கு காலைல பேங்க் திறக்கும்போது வருவோமா பாஸ்?
பாஸ்:சூப்பர் டா.காலைல வந்தோம்னா ஈஸியா உள்ள போய்டலாம் ல.
ஜான்:சரியாய் சொன்னீங்க பாஸ்.ஆமா உள்ள போய் எப்படி கொள்ளை அடிக்கிறது.
பாஸ்:அது ஒண்ணுமில்லடா.அங்க கொள்ளை அடிக்கிறதுக்கு challan வச்சுரிப்பாங்க.அதை பில் பண்ணி கொடுத்து இஷ்டத்துக்கு கொள்ளை அடிக்கலாம்.எப்படி.
பக்கிரி:சூப்பர் பாஸ்.
பாஸ்:செருப்பால அடி.ஏன்டா,பேங்க் நடத்துறவன் என்ன கேனப்பயலாடா.கொள்ளை அடிக்க வரவங்களை கை குடுத்து,கைல சாவியும் குடுத்து அனுப்பி வைக்க.முட்டா பயலுகளா.
ஜான்:ஏன் பாஸ் திட்டுறீங்க.எங்களுக்கென்ன தெரியும் கொள்ளை அடிப்பது பத்தி.இப்போதானே சேர்ந்துருக்கோம்.
பாஸ்:நான் மட்டும் என்ன கொள்ளை அடிக்கிறதுல கோர்ஸ் படிச்சிட்டா வந்துருக்கேன்.ஏன்டா இப்படி உசுர வாங்குறீங்க.மூடிகிட்டு வாங்க கொள்ளை அடிக்கலாம்.
பக்கிரி:மூடிகிட்டு தான் கொள்ளை அடிக்க போறோம்.ஆனா எப்படி,அத சொல்லுங்க பாஸ்.
பாஸ்:பேங்க் ல கொள்ளை அடிக்க வந்தா என்னமோ பேங்க் எக்ஸாம் எழுத வந்தா மாதிரி இத்தன கேள்வி கேட்டு கொல்றீங்களேடா.இதான் இந்த பேங்கோட மேப்.இதுல பின் பக்கம் ஒரு டிரைனேஜ் இருக்கு.அது வழியாதான் போறோம்.அதே வழியாதான் வாறோம்.
பக்கிரி:என்னது டிரைனேஜா..அங்க ஒரே இருட்டா,கலீஜா இருக்குமே பாஸ்.கொசு வேற கடிக்கும் பாஸ்.
பாஸ்:வேணும்னா டிரைனேஜ் ல டைல்ஸ் போட்டு ஏ.சி போட்டு,அப்படியே கொசுவத்தி ஏத்திவைக்கவா.கொள்ளை அடிக்க போறோமா,குடித்தனம் பண்ண போறோமா.இருட்டா இருக்கும்,கொசு கடிக்குமுன்னுகிட்டு.இம்சை பண்ணாமா வாங்கடா.
(பேங்க்கின் உள்புறம் நுழைந்த பின்னர்)
பாஸ்:சப்பாடா,ஒரு வழியா வந்தாச்சு.
ஜான்:பாஸ்,நீங்க கிரேட் பாஸ்.பக்காவா ரூட் போட்டு இருக்கீங்க.எப்படி பாஸ் இப்படிலாம்.
பாஸ்:இதுக்கு முன்னாடி டிரைனேஜ் ல கொஞ்ச நாளா வேலை பார்த்தேன்.அதான்.
பக்கிரி,ஜான்:ஐயையே...டிரைனேஜ்லையா....
பாஸ்:ஆமா,இதுக்கு முன்னாடி இவுரு ரயில்வேசுலையும்,இவுரு ஏர் இந்தியாவுலயும் இருந்தாங்க பாரு.நீ வேலூர்,அவன் பாளையங்கோட்டை,நான் சென்ட்ரல்.இதுல என்னடா ஐயையே.மூடிகிட்டு போய் லாக்கர் எங்கன்னு தேடுங்கடா.
பக்கிரி:லாக்கர் னா என்ன பாஸ்?
பாஸ்:(லாக்கர் னா என்ன சொல்றது)அஹ.கல்லா பெட்டி.
பக்கிரி:ஒ,அதுவா.தோ வாசல் கிட்டதான் இருக்கு.
பாஸ்:வாசல் கிட்டவா.அதெப்படிடா தெரியும் உனக்கு?
பக்கிரி:அட,கல்லா பெட்டியெல்லாம் வாசல் கிட்டதான் பாஸ் இருக்கும்.வாங்க போய் பார்ப்போம்.
பாஸ்:அடேய் அது வேற பெட்டி.இது வேற பெட்டிடா.
ஜான்:அட,எந்த பெட்டினாலும் உள்ள காசுதான் பாஸ் இருக்கும்.அப்புறம் என்ன.
பாஸ்:ஆஆ....உங்களுக்கு அர்த்தம் சொல்லுறதுக்குள்ள அடுத்த நாளே வந்திடும் போலருக்கே.எலேய்,நல்லா கேளு.நீ என்ன பண்ற லாக்கர் எங்க இருக்குன்னு பாக்குற.நீ என்ன பண்றேன்னா,அந்த லாக்கர் சாவிய தேடுற.நான் இந்த பேங்க்குக்கு பாம் வச்சிட்டு வரேன்.
ஜான்:பாம்மா.....
பாஸ்:டேய்....ஏன்டா கத்துற.வெளிய வாட்ச்மேன் இருக்கான்டா.மெல்லமா பேசுடா பக்கி.
ஜான்:சரி பாஸ்.ஆமா ஏன் பாஸ் பாம் வைக்குறீங்க.
பாஸ்:இந்த பேங்க்ல தாண்டா நான் முன்னாடி ப்யூன் னா வேலை பார்த்தேன்.அப்போ இங்க வேலை பார்த்த ஒரு பொன்னுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.ஆனா,அந்த பொண்னை இந்த பேங்க் மேனேஜருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.அதான் அவன் லவ்வுக்கு நான் இடைஞ்சலா இருக்கேன்னு என்னை ஏதேதோ சொல்லி வேலையவுட்டு தூக்கிட்டான்.அதுக்கு பழி தீர்க்கதாண்டா இந்த கொள்ளை.
பக்கிரி:ச்சா..உங்களை கஷ்டபடுத்துன அவன சும்மா உடக்கூடாது பாஸ்.உங்க லட்சியத்த நாங்க நிறைவேத்துறோம்.
பாஸ்:நண்பேண்டா.....ஆமா,டேய் ஜான் நீ என்னடா யோசிக்கிற?
ஜான்:இப்போ அந்த பொண்ணு என்ன பண்ணுதுன்னு யோசிக்கிறேன் பாஸ்.
பாஸ்:அஹ,அவ புருஷன் கூட வாழ்ந்துகிட்டு இருக்கா.
ஜான்:அப்புடியா,யாரு பாஸ் அவ புருஷன்?
பாஸ்:அந்த மேனேஜர் தாண்டா அது.பக்கி பையலே,ஏன்டா பழச கிண்டுற.வந்த வேலைய பாருடா.போடா.
(சில மணிநேரம் கழித்து)
பக்கிரி:பாஸ்,எங்கே தேடியும் சாவிய காணும்.
பாஸ்:காணோமா..இப்போ என்னடா பண்ண?
ஜான்:ஏன் பாஸ் கவலைபடுறீங்க.அதான் வெளிய வாட்ச்மேன் இருக்கான்ல.அவனை கூப்டு கேட்போம் சாவி எங்கன்னு.
பாஸ்:ஏன்,பேங்க் மேனேஜர் கிட்டையே போன் போட்டு கேட்போமே.
ஜான்:ஒ எஸ்.
பாஸ்:போடாங்க.எனக்குன்னு வந்து வாய்க்குறாங்க பாரு.அந்த சாவியோட போலி என்கிட்ட தான் இருக்கு வாங்க.
பக்கிரி:கிரேட் பாஸ்.எப்புடி பாஸ் அதோட போலி உங்களுக்கு கிடச்சுது?
ஜான்:எனக்கு தெரியுமே.
பக்கிரி:எப்புடிடா?
ஜான்:மேனேஜர் பொண்டாட்டி இங்க தான வேலை பாக்குறாங்க.அவங்க மூலமாதான்.என்ன பாஸ் சரியா?
பாஸ்:இன்னும் அவ நினப்புலயே இருக்கியாட நீயு.மவனே உன்னை....
(கொள்ளை அடித்த பின்னர்)
பக்கிரி:கச்சிதமா காரியத்த முடிச்சிட்டோம் பாஸ்.ஆனா லாக்கரோட பணத்தை எடுக்கணுமா பாஸ்.பணத்த மட்டும் எடுத்து இருக்கலாமே.
பாஸ்:பணத்தை மட்டும் எடுக்கிறதவிட,பணத்தோட லாக்கரையும் சேர்த்து எடுத்தாதான் அவமானம் ஜாஸ்தியா இருக்கும் அவனுக்கு.சரி,நான் முன்னாடி போய் டிரைனேஜ் கதவ திறந்து வண்டியோட காத்துக்கிட்டு இருக்கேன்.நீங்க லாக்கர பத்திரமா எடுத்திட்டு வாங்க.சரியா.
பக்கிரி,ஜான்:ரைட் பாஸ்.
(பேங்க்கில் இருந்து வெளியேறி காரில் போய்கொண்டு இருக்க)
பாஸ்:நான் நினைச்சப்படி பேங்க் ல கொள்ளை அடிச்சதுல ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா.ஆமா,லாக்கர் பத்திரமா இருக்குல.
ஜான்,பக்கிரி:எஸ் பாஸ்.
பாஸ்:குட்.லாக்கர் சாவி?
ஜான்:அஹ,அய்யய்யோ..அதை பேங்க் ல விட்டுடோம் பாஸ்.
பாஸ்:போடாங்க,அதவிட்டுட்டு என்னடா பண்றீங்க.ஒரு பொருளை எடுத்திட்டு போனா அதை மீண்டும் ஒழுங்கா எடுத்திட்டு வரணுமுன்னு அறிவு கூடவா இல்லை உங்களுக்கு.
பக்கிரி:பாஸ்,தப்பா பேசாதீங்க.அப்படி மறக்கிறவனா இருந்தா நீங்க வச்சிட்டு வந்த பாம்மே மறக்காமா எடுத்திட்டு வந்துருப்பேன்னா.
பாஸ்,ஜான்:என்னது பாம்மா..எங்கடா?
பக்கிரி:தோ...
(டமால்)
பாஸ்,ஜான்,பக்கிரி:ஐயோஓஓஓஓஓஓஓஓஓ.....
nice one!
ReplyDeleteApdiye vadivelu comedy!!