Friday, 7 September 2012

வீட்டைத்தாண்டி வருவாயா

லூசிய அழைத்து வர கேரளா சென்ற சித்திக்,இறுதியில் அவளை கண்டுபிடித்து தங்கள் காதலை பத்தி உரையாடும் காட்சி.

சித்திக்:லூசி...ஒரு வழிய உன்னை கண்டுபிடிச்சிட்டேன்...உன்னை தேடி எங்கெல்லாம் அலைஞ்சேன் தெரியுமா?

லூசி:எங்கெல்லாம்?

சித்திக்:அஹ..அது வந்து..எங்கெல்லாமோ அலைஞ்சேன்.அது எதுக்கு இப்போ.

லூசி:அப்போ வேற எதுக்கு வந்த சித்திக்?

சித்திக்:அஹ,இங்க பெட்ரோல் விலை லிட்டருக்கு பத்து ரூபான்னு சொன்னாங்க.அதான் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்.

லூசி:டோன்ட் கிட்டிங் சித்திக்.

சித்திக்:ஊ மீ.நோ.இட்ஸ் யு ஊ கிட்டிங்.நான் ஏன் வந்தேன்னு தெரியாது.நம்ம காதல பத்தி.நம்ம வாழ்க்கைய பத்தி பேசத்தான்.

லூசி:அதபத்தி பேச எனக்கு உரிமை இல்லை.ஏன்னா என் வாழ்க்கை எனக்கு சொந்தம் இல்லை.

சித்திக்:ஏன் மார்வாடி கடைல அடகு வச்சுட்டியா?

லூசி:சித்திக்...சி,என் டாட் எனக்கு வேற இடத்துல அலையன்ஸ் பார்த்துருக்காரு

சித்திக்:அவுரு பார்த்தாரா.அப்போ அது அலையன்ஸ் இல்லை.ஏலியன்ஸ்.

லூசி:என்ன பேசுற நீ.லுக் சித்திக்,லவ் வேற.லைப் வேற.நீயும் நானும் கல்யாணம் பண்ணா நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்காது.

சித்திக்:நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இருக்காது.

லூசி:முட்டாள்தனமா பேசாத 

சித்திக்:(உன்ன லவ் பண்ணிட்டு புத்திசாலிதனமா பேச முடியுமா)லூசி,நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கூட நாம நினைச்ச வாழ்க்கைய வாழ முடிலைன்னா அந்த வாழ்க்கைய வாழுறதே வேஸ்ட்.

லூசி:புரிஞ்சிக்கோ சித்திக்,நாம சந்தோஷமா வாழ முடியாது நம்ம ரெண்டு குடும்பத்தை விட்டுட்டு.நான் எங்கப்பா சொல்ற பையன கட்டிக்கிறேன்.நீ உனக்கு ஏத்த ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்கோ.

சித்திக்:(எனக்கு ஏத்த நல்ல பொண்ணா.நீ கிடைச்சுதே உலக அதிசயம்.இதுல எங்கடி இன்னொண்ண தேட)அதனால் தான் உன்னை கட்டிக்கலாமுன்னு வந்தேன் லூசி.எனக்கு ஏத்த பொண்ணு நீதான்.

லூசி:கண்டிப்பா இல்லை.

சித்திக்:பாரு லூசி.காதலுங்குறது சும்மா இல்லை.முதல் பார்வையிலையே மண்டைய போட்டு உருட்டணும்.மாவ போட்டு ஆட்டனும்.உலகத்துல எத்தனையோ மொக்கை பிகருங்க இருக்கும்போது நான் ஏன் உன்னை மட்டும் பார்க்கணும்,காதலிக்கணும் சொல்லு.

லூசி:ஏன்?

சித்திக்:ஏன்னா (எனக்கு கிடைச்ச இளிச்சவாயி நீ மட்டும்தான்) அதான் காதல்.

லூசி:காதல் காதலுன்னு சொல்றியே.எனக்காக நீ என்ன செஞ்ச?

சித்திக்:(உன்னையும் ஒரு மனுஷியா மதிச்சு காதலித்தேன்னே அதவிட வேற என்ன செய்யணும்)என்ன செய்யணும்?

லூசி:உன்னால எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்க முடியுமா.என்னை விடு.முதல உன்னால உன் சொந்த கால்ல நிக்க முடியுமா?

சித்திக்:இப்போ என்ன என் சொந்த கால்ல நிக்காம என் சொந்தக்காரன் கால்லையா நிக்குறேன்.என்னப்பா நீ.நான் பந்த கால் நடுறத பத்தி பேசவந்தா,நீ சொந்த கால்,நொந்த கால்லுன்னு கடுப்பேத்துற.

லூசி:உனக்கு எல்லாமே விளையாட்டு தான்.சித்திக்..நீயும் நானும் எப்பவும் சந்தோஷமா வாழ முடியாது.

சித்திக்:எந்த தம்பதிகள் தான் எப்பவுமே சந்தோசமா வாழுறாங்க சொல்லு.அப்பப்போ சண்டை,சச்சரவுகள் வரத்தான் செய்யும்.அதுவும் உறவை பலப்படுதுமே தவிர பலவினப்படுத்தாது.
நாமும் நல்லாத்தான் வாழ்வோம் லூசி.

லூசி:இந்த கல்யாணத்துக்கு எங்கப்பா சம்மதிக்க மாட்டாரு.

சித்திக்:எங்கப்பா மட்டும் வாழ்த்தி வழியனுப்புனாரா.வாட்டி வதைச்சாரு.இருந்தாலும் நான் வரல.ஆமா உங்கப்பன்  எதுக்கு தான் சம்மதிச்சான்.எப்பவும் இடைஞ்சல் தான்.

லூசி:மரியாதை சித்திக்.எங்கப்பா பெரிய மனுஷர்.

சித்திக்:பார்த்தாலே தெரியுமே.ஆறு அடி,ரெண்டு அங்குலம்.ரொம்ப பெரிய மனுஷர்.கீர்த்தி சிரிசுனாலும் மூர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க.உங்கப்பாக்கு கீர்த்தி பெருசு,பட் மூர்த்தி சிறிசு.முதல இருக்காங்கிறதே டவுட் தான்.

லூசி:எங்கப்பா பத்தி தப்பா பேசுனா நம்ம காதல் அவ்வளவுதான் சித்திக்.

சித்திக்:நீ நேசிச்ச உங்கப்பாவ திட்டினதுக்கே இப்படி கோபம் வருதே.அப்போ,நான் நேசிச்ச உன்னை மறக்க சொல்லும்போது எனக்கு எப்படி இருக்கும்.

லூசி:எப்படி இருக்கும்?

சித்திக்:அஹ,குளு குளுன்னு இருக்கும்.யாரா இவ.லுக் லூசி,உனக்காக நான் எத்தன வருஷம் வேணும்னாலும் காத்துருக்க தயார்.

லூசி:ஐ அம் சாரி சித்திக்.நீ காத்துருக்கலாம் சித்திக்.பட் என்னால முடியாது.ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.ஏன்னா,எங்கப்பாவ மீறி என்னால ஏதும் செய்யமுடியாது.சோ....

சித்திக்:சோ?

லூசி:சோ...நமக்குள்ள இனி எதுவுமில்லை.எல்லாத்தையும் முடிச்சிப்போம்.பை.

சித்திக்:லூசி..லூசி...
 (சித்திக் வருத்தத்தோட திரும்பி வர,எதிர்ல கணேஷ் வந்து)

கணேஷ்:சித்திக்..என்னடா டல் ஆகிட்ட...கவலைபடாதே.இங்க என்னா சொல்லுது..லூசி லூசின்னு சொல்லுதா?

சித்திக்:அவளை தேடி நாய் மாதிரி அலைஞ்சுதுல லஸ்ஸி லஸ்ஸின்னு சொல்லுது.

கணேஷ்:என்னடா இப்படி சொல்ற.அப்போ இதோட எல்லாம் முடிஞ்சுதா...இனி என்னடா பண்ணபோற?

சித்திக்:ஒரு கதவு மூடுனா இன்னொரு கதவு திறக்குமுன்னு சொல்வாங்க.அதான் எதுக்கும் இருக்கட்டுமேன்னு லூசியோட தோழி ரோசியோட நம்பர் வாங்கி வச்சேன்.இனி ரோசி தான் எனக்கு ராசி.

கணேஷ்:அப்போ லூசி?

சித்திக்:ஆரோமலே...............

1 comment:

  1. நல்ல உரையாடல். அதிலும் அப்பப்ப அந்த மைன்ட் வாய்ஸ் சூப்பர். உங்களுக்கு கதை, உரையாடல் நன்றாக வருகிறது. நிறைய நூல்கள் படியுங்கள். உங்கள் திறமை மேலும் கூடும். நன்றி வாழ்க வளர்க

    ReplyDelete