கப்பலின் மேல் தளத்திற்கு சென்று கப்பலின் முன் பக்க முனையில் உள்ள கம்பியினால் மேரியும்,மாரியும் கையை விரித்த படி நின்று கொண்டு...
மேரி:மாரி...இந்த கப்பல்ல நிறைய இடங்கள் இருந்தும் நாம ஏன் இங்க வந்துருக்கோம் தெரியுமா?
மாரி:தெரியுமே.கீழே கரண்ட் கட்.அதான் காத்து வாங்கலாமுன்னு வந்துருக்கோம்.
மேரி:அது இல்ல.இந்த கப்பலை சுத்தி இருக்கிற கடல பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது?
மாரி:நீ எனக்கு தண்ணி காட்டுறேன்னு தோணுது.
மேரி:மாரி...சுத்தி எங்கும் கடல்,சில்லுன்னு காத்து,மாலை நேரம்,சூரியன் மறையும் அழகுல கடலே தங்கம் போல ஜொலிக்கிற இந்த அழகுல நீயும் நானும் இப்படி ஒருத்தர் மேல ஒருத்தர் சாஞ்சு கை கோர்த்து நிக்கும் போது என்னமோ பண்ணுதுல.
மாரி:ஆமா பா.அடி வயிறு என்னமோ பண்ணுது.கீழ இறங்கிடலாமா?
மேரி:ச்சா ஏன் பயப்படுறீங்க.யாராச்சும் நம்மளை பார்த்துட்டா என்னாகும் என்ற பயமா.யாரு என்ன பண்ணாலும் சரி.ஏன்,இந்த கப்பலே கவுந்தாலும் சரி..
மாரி:என்னது...
மேரி:நம்ம காதலை அழிக்க முடியாது.
மாரி:அஹ,கப்பல் கவுந்த பின்னாடி நாமலே அழிஞ்சி போய்டுவோம்.அப்புறம் நம்ம காதல் அழிஞ்சா என்ன அழியாட்டி என்ன.
மேரி:தேவையில்லாம பயப்படாதீங்க.கொஞ்சம் அங்க பாருங்க,கடல் மேல பறக்கிற பறவைகள்..நம்மளையும் கூட பறக்க சொல்லி அழைக்கிற மாதிரி இல்லை..
கடல்ல இருந்து துள்ளி குதிக்கிற டால்பின்கள் நம்மளையும் துள்ளி குதிக்க சொல்ற மாதிரி இல்லை..
நம்மளை தொட்டு செல்கிற காத்து நம்ம மனசையும் லேசாக்கின மாதிரி இல்லை..
மாரி:அப்படியே கொஞ்சம் மேல பாரு..யமஹா பைக் ல வரமாதிரி எருமை மேல எமனும்,அவனுக்கு பின்னாடி வாடா பேராண்டின்னு என் தாத்தாவும் கூப்பிடுற மாதிரி இல்லை....
மேரி:ஏன்பா இப்படி பயந்து சாகுற.அப்படியே சாவு வந்தாலும் நாம ஒண்ணா போவோம்.
மாரி:ஒண்ணா போவோமா...என்னமோ ஹனிமூனுக்கு அயர்லாந்த் போறா மாதிரி சொல்ற.ரொம்பத்தான் ஆர்வம்.
மேரி:உன்கூட இப்படி தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எத்தன நாள் ஆசை தெரியுமா.நீ என்னடான்னா..
மாரி:நான் தப்பு சொல்லலை செல்லம்.ஏதோ டைனிங் ஹால்,டிஸ்கோ ஹால் னு சுத்துனா ஓகே.ஏன்,ஸ்விம்மிங் புல்லுல பில்லா பட பிகினி நயன்தாரா மாதிரி கும்முன்னு இல்லன்னாலும் யாரடி நீ மோகினி நயன்தாரா மாதிரி ஜம்முன்னு இருந்தா கூட உன்னை பார்த்துகிட்டே பொழுதை போக்கிடலாம்.அதெல்லாம் வுட்டுட்டு இப்படி ஜகம் மோகினி கணக்கா கத்தி முனைல நிக்குற மாதிரி கம்பி முனைல நிக்க வச்சிட்டியே.அதான் பேதில ச்சா பீதில பீலிங்.
மேரி:கூல்.ஆமா,நீங்க முதல் முறை என்னை பார்க்கும்போது உங்க மனசுல என்ன தோணிச்சு?
மாரி:நீ சுமாரான பிகருன்னு தோனுச்சு.
மேரி:யு.....சரி அத விடுங்க.இப்போ காதலிச்ச பிறகு என்ன தோணுது?
மாரி:உன்னபத்தி நான் நினைச்சது தப்புன்னு தோனுச்சி.
மேரி:என்ன சொல்றீங்க?
மாரி:ஆமா மேரி,உன்னை சுமாரான பிகருன்னு தப்பா நினைச்சுட்டேன்.இப்போதான் தெரிது,நீ படு சுமாரான பிகருன்னு.
மேரி:யு..ச்சி..போடா..அப்புறம் ஏன்டா என்னை லவ் பண்ண.வேற பொன்னை லவ் பண்ண வேண்டித்தானே?
மாரி:நானா மாட்டேங்குறேன்.எவளும் பண்ணலை.நீதான் பண்ணுற.அதான் என் மனசை உன்கிட்ட ஒப்படைச்சுட்டேன்.
மேரி:ஹிஹி...மாரி..நீங்களும் நானும் சாகுற வரைக்கும் இதே மாதிரி இருக்கணும்.
மாரி:இதே மாதிரியா...கிழிஞ்சிது...கொஞ்ச நேரம் நிக்குறதுக்கே டப்பா டான்ஸ் அடுத்து.இதுல சாகுற வரைக்கும் னா டண்ட நக்கா தான்.
மேரி:ஏன் இப்படி இருக்கீங்க.இப்படி இருந்தா எப்படி என்னை காலம் முழுக்க காப்பாத்துவீங்க.
மாரி:என்னது நான் காப்பாத்துறதா.எந்த நம்பிக்கைல நீ இப்படிலாம் பேசி பழகுற.என்னை காப்பாத்திக்கவே வக்கில்லாம இருக்கேன்.இதுல எப்படி உன்னை காப்பாத்த?
மேரி:என்ன பேசுறீங்க.எனக்கு ஒண்ணுன்னா நீங்க உசுர குடுத்து காப்பாத்த மாட்டீங்களா?
மாரி:என் உசுர குடுத்த பிறகு நான் எங்கத்த காப்பாத்துறது.வேணும்னா என் பக்கத்துல எவனாச்சும் இருந்தா,அவன் உசுர குடுத்தாச்சும் உன்னை காப்பாத்துறேன்.
மேரி:ச்சா..டூ பேட்.உங்களை நம்பி என் மனசுல ஒரு காதல் கோட்டையே கட்டிக்கிட்டு இருக்கேன்.
மாரி:நானும் உன்னை நம்பி என் ஊருல ஒரு வீட்டை கட்டிக்கிட்டு இருக்கேன் கடன வாங்கி.
மேரி:உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.
மாரி:என்னது விளையாட்டா.நான் என்ன கடலை முட்டாய் வாங்குனேன்னா சொன்னேன்.கடன் வாங்குனேன்னு தானே சொன்னேன்.இதுல என்ன விளையாட்டு.
மேரி:நம்ம காதலுக்கு எத்தன எதிர்ப்பு,பிரச்சனை வந்தாலும் பயப்படாம எதிர்த்து நின்னு மோதணும் மாரி.
மாரி:கண்டிப்பா..பிரச்சனை வந்தா மோதலாம்.ஆனா பாறை வந்தா?
மேரி:எந்த பாறை டியர்?
மாரி:தோ வருதே இந்த பாறை தான்.
மேரி:ஒ,மை காட்.ஐயோ.....
(கப்பல் கவிழ..அனைவரும் கடலில் முழுங்க)
மேரி:மாரி,என்னை கை விட்றாதீங்க..
மாரி:நீ என் கைய விடாம இருந்தா சரி.
மேரி:என்ன சொல்றீங்க?
மாரி:எனக்கு நீச்சல் தெரியாதுப்பா...
மேரி:டோன்ட் வொர்ரி.அதான் நான் இருக்கேன்லே.
மாரி:எதுக்கு அம்பது வருஷம் கழிச்சு பிளாஷ்பேக் சொல்றதுக்கா..
மேரி:அடடா..எனக்கு கூடத்தான் நீச்சல் தெரியாது.நான் பயப்படுறேனா?
மாரி:என்னது உனக்கும் தெரியாதா...சூப்பர்..கதை முடிஞ்சுது.
மேரி:கூல்.இப்போ என்ன பண்றதுன்னு யோசிங்க.
மாரி:வேற என்ன பண்றது...ஒண்ணா அயர்லாந்துக்கு ஹனிமூன் போகவேண்டிதான்.
மேரி:பரவாலை.சாவை கூட சந்தோசமா ஏத்துப்போம்.
மாரி:சாவு என்ன சால்வையா சந்தோசமா ஏத்துக்க.சரி,ஜல்சா பண்ணாமலே ஜலசமாதி ஆகணுமுன்னு இருந்தா என்ன பண்ண முடியும்.மேரி...
மேரி:மாரி....
கப்பலோடு கதையும் பினிஷ்.
பட்டையக் கிளப்பிட்டீங்க..பாஸ்! எங்கும் தொய்வு இல்லாம கதை கப்பலோட போகுது! மேரி மாரி அயல்லாந்தில் தேனிலவு கொண்டாட வாழ்த்துக்கள்!
ReplyDelete