தெருவெங்கும் மின்சாரம் இல்லா
ஒரு மாலை பொழுதின் தொடக்கத்திலேசூரியன் மறையும் அழகின் மயக்கத்திலே
சில்லென்று காற்றும்...
அக்காற்றிலே சிறகு விரிக்கும் பறவைகளும்
வான்மேகத்தில் வான வேடிக்கை காட்டும் தருணம்
பூலோகமே சொர்க்கமாய் தெரியும் வேளையில்
எதிர்புற வீட்டின் ஜன்னல் என்னும் கண்கள் திறக்க
அதில் கூந்தலை சிறகுகளாய் காற்றில் பறக்க விட்டுகொண்டே
மின்னல் போன்ற கண்கள் கொண்ட ஒரு தேவதை என்னை உற்று தாக்க
என் மனம் காற்றாய் மாறி அவள் திசை நோக்கி செல்ல
அவளோ ஒல்லிய முகத்தினுள்ளே ஒரு மெல்லிய புன்னகையை வீச
சிப்பிக்குள் இருக்கும் முத்தை விட அவள் சிரிப்புக்குள் இருக்கும் பிரகாசம்
ஒரு கணம் என் கண்களை மறைக்க...அக்கணம் அவள் மறைந்து போனால்
என் கண்களில் மட்டும்...
என் கண்ணோடு,மனதும் கை கோர்த்து
அவள் இருக்கும் திசை நோக்கி அலைபாய
என் கால்கள் வேகமெடுத்து விரைந்து செல்ல
அவளை பார்க்கும் அத்தருணத்தை எதிர்நோக்கும் வேளையில்
மீண்டும் அந்த தேவதை..
என் இதய வாசலை திறந்த தேவதை
என் வீட்டு வாசலில் வந்து நிற்க
என் மனமோ பந்தை போல எம்பி குதிக்க
மனதில் துடிப்போடும்,முகத்தில் சிரிப்போடும்
அவளிடம் சென்று நிற்கிறேன்
அதே சிரிப்பு..அதே பார்வை
தூரம் குறைந்தன,நேரம் கரைந்தன
அருகில் வந்தால்..அன்பாய் நின்றால்
புது மின்சாரம் பாய்ந்தது போன்ற தருணத்தில்
"கரென்ட் வந்துடுச்சு அண்ணா"
பவர் கட்
ஏன் இந்த கண்டிராவியான ஆர்ட்டிக்கல் ...
ReplyDelete