Friday, 14 September 2012

தண்டர் தயா

ஜக்கு:தலைவாஆ.....தண்டர் தயா சார்....வணக்கம் சார்.

தயா:அஹ,வணக்கம் வணக்கம்..யாரு நீங்க?

ஜக்கு:நான்தான் தலைவா ஜாம்பஜார் ஜக்கு.உங்களோட தீவிர ரசிகன்.உங்க படம் எல்லாத்தையும் முத நாள் முத ஷோ பார்த்திடுவேன் சார்.

தயா:அப்படியா.ரொம்ப சந்தோசம்.நான் ரீசன்டா நடிச்ச குப்பையிலே கோபுரம் படத்துல பிச்சைகாரனா என் நடிப்பு எப்படி இருந்துச்சு?

ஜக்கு:அதுலாம் நடிப்பா?

தயா:என்ன சொல்றீங்க?

ஜக்கு:இல்லை தலைவா.அப்படியே பிச்சைகாரனாவே வாழ்ந்து இருக்கீங்க.அதுவும் கடைசி சீன்ல உங்க ஆளு சாப்ட எச்சிலைய எடுக்க நீங்களும் வில்லனும் போடுற டாக் பைட் இருக்கே அசத்தல் சார்.

தயா:யாஹ்.அதுக்காக ஸ்பெஷலா வெளிநாட்டுல இருந்து ஒரு டாக் பைட் தெரிஞ்ச பிச்சைகாரரை கூட்டிட்டு வந்து தெரு தெருவா நாய் மாதிரி சண்டை போட்டு பயிற்சி எடுத்தோம்.சம்டைம்ஸ்,நாய் கூடவும் சண்டை போட்டோம்.

ஜக்கு:சூப்பர் சார்.இதைதான் நாய் மாதிரி உழைப்பவகன்னு சொல்றது.சார்,உங்களோட இன்னொரு படமான "ரோடு மேல ஓடு" படத்துக்காக ரோடு ரோடா ஓடுனத பார்த்து நான் கலங்கிட்டேன் சார்.
அன்னைக்கு எனக்கு சோறு கூட இறங்கல சார் வயித்துல.

தயா:அய்யய்யோ,அப்புறம்?

ஜக்கு:அப்புறம் என்ன சார்.ஒரு ஹாப் அடிச்சிட்டு ஆப் ஆகிட்டேன் சார்.சார்,நீங்க மடிச்ச "மானம் கெட்ட மாமன்" படத்துல கிளைமேக்சுக்கு முன்னாடி வர கற்பழிப்பு சீன்ல உங்களோட ஆர்வம்,அயராத உழைப்ப பார்த்து நான் மெய் சிலிர்த்திட்டேன் சார்.எப்படி சார் அப்படிலாம்?

தயா:ஐயோ நீங்க வேற.எல்லாம் என் தாத்தா கிட்ட இருந்துதான்.அவர்தான் எப்பவும் சொல்வாரு,எதுல ஈடுபட்டாலும் முழு மூச்சோட,ஈடுபாட்டோட இருக்கனுமுன்னு.அதான்.

ஜக்கு:சூப்பர் தலைவா.அந்த படத்துல நீங்க பேசுற ஒரு பஞ்ச் டயலாக் இருக்கே..அடடடடாஆ....அருமை.."தோல்விய கண்டு தோப்பு கர்ணம் போடமாட்டேன்.வெற்றிய கண்டு வெத்தலை பாக்கு போடமாட்டேன்"..பிண்ணிடீங்க சார்.உங்களுக்கு ஏன் சார் அவார்ட் தரமாற்றாங்க?

தயா:அவார்ட தேடி நாம போக கூடாது.அவார்ட் தான் நம்மளை தேடி வரணும்.

ஜக்கு:அதான் வரமாட்டேங்குதே.நீங்க போகலாம்ல."லல்லி என் வில்லி" படத்துல உங்க நடிப்பு பிரமாதம் சார்.அதுக்கு அவார்ட் தரலாம்.உங்களோட ஒவ்வொரு வசனமும் நெஞ்சை உருக்கிச்சு.

தயா:அந்த படத்துல நான் ஊமையாச்சே.ஒருவேளை என்னோட முக பாவனைகள் உங்களை அப்படி ஈர்த்துருக்கு.நான் நல்லா நடிச்சிருகேன்னு எல்லாரும் பார்ரட்டுனாங்க.இத்தனைக்கும்,அந்த படத்துல எனக்கு மேக் அப் இல்லை.

ஜக்கு:அதனால தான் தலைவா நல்லா நடிச்சிருக்கீங்க.உங்களோட அடுத்த ரெண்டு படத்துல,ஒரு படம் உங்களோட நிஜ குணத்தை பிரதிபலிப்பதா பேட்டி வந்துச்சே தலைவா.

தயா:ஆமா.அடுத்து நான் "மானஸ்தன்" என்ற படத்துல எந்த உணர்வுமே இல்லாத ஒருத்தன் ரோல் பண்ணுறேன்.அதாவது,எப்படி சொல்றதுனா அஹ,சுடு சுரணை இல்லாதவன்னு மாதிரி.

ஜக்கு:ஒ,அப்போ நீங்க சொன்னது சரிதான் தலைவா.அதுக்கு அடுத்து என்ன படம் பண்றீங்க?

தயா:அடுத்து "குச்சி முட்டாயும்,குருவி ரொட்டியும்" படம் பண்றேன்.அதுல ரெண்டு கதாநாயகிகள்.

ஜக்கு:ரெண்டு பேரா தலைவா.சூப்பர் தலைவா.கதை என்ன தலைவா?

தயா:அதாவது ஊரு சந்தைல நானும் என் ரெண்டு மாமன் பொண்ணுகளும் போகும்போது ஒருத்தி குச்சி மிட்டாயும்,இன்னொருத்தி குருவி ரொட்டியும் கேக்குறாங்க.அத வாங்கிட்டு வரதுக்குள்ள அவங்க ரெண்டு பேரையும் காணோம்.அவங்களை கண்டுபிடிகிறது தான் பார்ஸ்ட் ஹாப்(first half).

ஜக்கு:அப்போ சகென்ட் ஹாப்(second half)?

தயா:அது என்னன்னா,அந்த பொண்ணுகளை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்து பார்த்தா இப்போ குச்சி மிட்டாயும்,குருவி ரொட்டியும் காணோம்.சோ,அதை கண்டுபிடிப்பது சகென்ட் ஹாப்.

ஜக்கு:அருமை தலைவா.ஆகமொத்தம் அது காணமல் போனவர்களை பற்றிய படப்பிடிப்பு.சூப்பர் தலைவா.

தயா:ஹிஹிஹி..இது என்ன பிரமாதம்.படத்துல வர சாங்க்ஸ் எல்லாம் பட்டைய கிளப்பும்.அதுலயும் அவங்களை தேடும்போது நடுவுல வர ட்ரீம் சாங்க்ஸ் "குல்பி பேபி" அண்ட் "பன்னீர் பாப்பா" ரெண்டும் டாப் டக்கரா இருக்கும்.

ஜக்கு:அடாது தேடும்போது கூட விடாது ஆடுறீங்க பாருங்க கிரேட் தலைவா.நீங்க எங்கேயோ போய்டீங்க.

குப்பு:அவர் போறது இருக்கட்டும்.நீ எங்கடா போன?

தயா:ஹலோ யாரு நீங்க.என்ன என் ரசிகரை மரியாதை இல்லாம பேசுறீங்க.

குப்பு:சார்,இவன் ஒரு பைத்தியக்காரன் சார்.யாருக்கும் தெரியாம ஹாஸ்பிடல்ல இருந்து எஸ்கேப் ஆகிட்டான் சார்.இப்போ மாட்டிகிட்டான்...இவனை இழுத்திட்டு போங்கையா.

தயா:பைத்தியக்காரனா?

ஜக்கு:தலைவா...என் உடல் மண்ணிற்கு...உயிர் உங்களுக்கு....குல்பி பேபி...ஒ,பன்னீர் பாப்பா.

தயா:ஒரு பைத்தியக்காரன் கூட என் படத்தை ரசிக்கிறான்.பெருமையா இருக்கு.

குப்பு:அட உங்க படத்த ரசிச்சதால தான் அவன் பைத்தியக்காரனே ஆனான் சார்.


                                         ஓவர் சீன் பிலிமுக்கு ஆகாது.
                                       OVER SCENE HILARIOUS TO FILM

1 comment: