தியா-டேட்டா
வீ.தியாகராஜன்,
No.420,வெட்டி பைய தெரு,
முட்டாப்பய நகர், தொலைப்பேசி எண்:9876543210
வெண்னை - 000000 இணைய முகவரி:@tigerthia,@DonDagulu
வாழ்க்கை லட்சியம்:
வாழ்க்கைன்னு ஒன்னு எனக்கு இருக்கான்னு கண்டுபிடிப்பதே என் லட்சியம்.
கல்வி தகுதி:
பள்ளி:
பத்தாம் வகுப்பு:
பத்தாம் வகுப்பில் கனவில் கோட்டைகட்டி கணக்கில் கோட்டைவிட்டு மறுத்தேர்வின் மூலம் நடுத்தெருவிற்கு வராமல் பிழைத்துகொண்டேன்.
பணிரெண்டாம் வகுப்பு:
16 பேருகொண்ட பனிரெண்டாம் வகுப்பில் ஒழுங்கா படிக்க துப்பிருந்தும் விருப்பு இல்லாமல் 13 பேர் சுமாராக படிக்க போய் நான் 2ஆம் மாணவனாய் வந்தேன்.(It's a Medical Miracle)
கல்லூரி:
அறிவு பற்றாக்குறையாலும்,கொழுப்பு வற்றாக்குறையாலும்,படிப்பு எட்டாக்குறையாலும் சிறப்பாய் விளங்காது போன நான்,வரலாறு பாடத்தில் கதையடிக்க பயின்ற திறமையின் உதவியுடன்,சரிவில் போகாது சராசரி மாணவனாய் கலங்காமல் கல்லூரிக்காலத்தை கடந்துவிட்டேன்.
சிரிப்பு தகுதி:
மொழிகள்:
தமிழ்:என் தாய் (என்னை தினமும் வையும்) மொழி.
ஆங்கிலம்:SEEN போடுவதற்கும்,SIGN போடுவதற்கும்.
ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்:படப்பெர்யர்கள் அத்துப்பிடி.பாஷை பேசினால் செருப்படி.BE CAREFULL ...என்னை சொன்னேன்.
சொந்த/நொந்த குறிப்புகள்:
பலம்,பலவீனம்:
பேச்சு.
மேல் சொன்ன குறிப்புகள் யாவும் என் சுய நினைவுடனும்,கடுப்புடனுமே குறிப்பிடப்பட்டவை என உலறிக்கொள்கிறேன்.
நொப்படிக்கு,
வீ.தியாகராஜன்

- கிண்டல்,கேலி,நக்கல்,நையாண்டி,மொக்கை,கடலை போன்ற (வெட்டி)பேச்சு போட்டிகளில் பலமுறை ஆர்வமுடன் பங்கேற்று பிறர் ஆத்திரத்துடன் ஆப்பு வாங்கிருக்கேன்.
- பலமுறை வகுப்பு நேரத்தில் தூங்கி,அதற்காக ஆசிரியரின் ஆசியோடு வெளிநடப்பு செய்துருக்கிறேன்.
- வகுப்பில் கடைசினாலும்,படிப்பில் முதல் வகுப்பில் வந்து என் நண்பர்களே நம்ப முடியாத அளவுக்கு சூழ்ச்சி செய்யாது தேர்ச்சி பெற்றுள்ளேன்.
மொழிகள்:
தமிழ்:என் தாய் (என்னை தினமும் வையும்) மொழி.
ஆங்கிலம்:SEEN போடுவதற்கும்,SIGN போடுவதற்கும்.
ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்:படப்பெர்யர்கள் அத்துப்பிடி.பாஷை பேசினால் செருப்படி.BE CAREFULL ...என்னை சொன்னேன்.
சொந்த/நொந்த குறிப்புகள்:
- பெயர்:தியாகராஜன்(தியாகம் பண்ணாத ராஜன்)
- வயது:கால் சதம் கடந்தும் காலரை தூக்கிவிட்டு கொள்ளும்படி எதுவுமில்லை.
- தந்தை:என் முதல் நண்பன் (உயிரும் கொடுப்பார்,என் உயிரையும் எடுப்பார்)
- தாய்:என் முதல் ஆசிரியர் (கனிவும் உண்டு,கண்டிப்பும் உண்டு)
- சகோதர உறவு:சண்டை இட்டு மண்டைய பொளக்க 2 அண்ணன்கள்,1தங்கை.
- நட்பு:நெறைய உண்டு-நிறையும் உண்டு.குறையும் உண்டு.அதான் பிரெண்ட்.
பலம்,பலவீனம்:
பேச்சு.
மேல் சொன்ன குறிப்புகள் யாவும் என் சுய நினைவுடனும்,கடுப்புடனுமே குறிப்பிடப்பட்டவை என உலறிக்கொள்கிறேன்.
நொப்படிக்கு,
வீ.தியாகராஜன்
U gotta creative mind:)
ReplyDelete@rasimohan
U gotta supportive mind :D
ReplyDelete