Sunday, 22 November 2015

வாழ்க்கை வாழ்வதற்கே

Situation two-A young man with his positive outlook in life.

SONG:

உனக்கென எனக்கென 
தனி உலகம் இல்ல.
இதை உணர்ந்திட்டா 
நமக்குள்ள கலகம் இல்ல.

இருப்பதோ
ஓர் உலகம்.
வாய்ப்பதோ
ஓர் வாழ்க்கை.
மனமிருந்தால் நமக்கு வானம் இல்லை.

கரை தொடாமல் அலை போவதில்லை.
கறை படாமல் யாரும் வாழ்ந்ததில்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சுற்றம் துறந்தால் வாழ்க்கை இல்லை.

இழக்கத்தான் உயிருண்டு,
ஜெயிக்கத்தான் உலகுண்டு,
வாழ்க்கைதான் நமக்குண்டு,
வா வா வா...வாழ்ந்து பாப்போம்.
சேர்ந்தேதான் உலகை ஜெயிப்போம்.

எனக்குள் ஒருத்(தீ)

Situation one- A young man from Chennai sees a girl and instantly loses his heart. More than her beauty, her resilience in her eyes strikes him the most. His heart soars at this unknown feeling that surely must be love.

SONG:

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா.

வலியினில் துடித்திடும் 
விழியினில் தெரிந்திடும்
உன் உறுதிக்கு வியந்தேன் தோழியே..

எதிர்வரும் தடைகளை
எதிர்த்திடும் துணிவினை
உன் செயல்வழி உணர்ந்தேன் தோழியே..

எதையும் தாங்கும் இதயம் உனக்கு..
உன்னை தாங்கும் இதயம் எனக்கு..
உன்மேல் கொண்டேன் காதல் கிறுக்கு..
ஏற்றுகொள்ளடி தோழியே தோழியே.. 

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா..

Tuesday, 3 November 2015

வக்கிரத்தின் வலி

வணிக நகர வாலிபன்
கணினியில் தொலைத்த கண்ணை மீண்டெடுத்து
இரவு நேர உலா செல்ல,

கண்ணெதிர உலகத்தை உள்ளடுக்கும் அலைப்பேசியில்
நவநாகரிக பெண் ஒருத்தி அளவளாவ..
வைத்த கண் வாங்காது
உடலின் அமைப்பை உடையின் அளவோடு ரசித்தபடி
"செம பீஸ்" என கூறிக்கொண்டு நடை பயணிக்க,

கண்ணுக்கு விருந்தளித்த மனசு வயித்துக்கும் விருந்தளிக்க தூண்ட
தள்ளுவண்டியில் நடுத்தர வர்கத்தின் நட்சத்திர உணவகத்தில்
சில பல தோசைகளை முழுங்கிய வாறே
அன்னமிட்ட அஞ்சலையின் அங்கத்தை
உணவின் சூட்டோடு சூடாக ரசித்தபடி
மனதுக்குள் "நாட்டு கட்டை" என்று எண்ணியவன்,

புகை போட பொட்டிகடை செல்ல
அருகில் தெரு சுத்தம் செய்யும் பெண்ணின்
சரிசெய்யப்படா ஆடைவழியே தெரியும் இடையை
இமை கொண்டு இச்சித்த படி "சூப்பர் பிகரு" என நகர்ந்தவன் கண்ணில்

கணினி கம்பெனி கன்னி காரில் வந்திறங்க,
ஆங்கிலேயர் கீழ் பணிபுரிபவள்
ஆங்கிலேயனுக்கே பணிபுரிபவலாய் எண்ணி "ஐயிட்டம்" என முனுகிகொண்டே நடக்க.
 அலைப்பேசியில் மணி அடிக்க,
"ஏரியா பசங்க கிண்டல் பண்ணிச்சின்னு தங்கச்சி தற்கொலை பண்ணிகிட்டா"ன்னு அம்மா குரல் ஒலிக்க,

ஒரு கணம் அவன் மனதில் பெண் குறித்த தன் வக்கிரத்தால் வலி உண்டாவதை உணர்ந்தான்.

Tuesday, 31 December 2013

அன்புடன் 2013

அனைவருக்கும் வணக்கம்,

நான்தான் 2013,

சாதிக்கணும்னு நினச்ச பலரோட கனவுகளுக்கு கை கொடுத்தேன்.சிலரோட ஆசைகளுக்கு ஆப்பு வச்ச்சேன்  (இதை எழுதுற @tigerthia-க்கும் சேர்த்துதான்).

தேஞ்சி போன அரசியல்வாதிகள் முதல் காய்ஞ்சி போன காம பிசாசுகள் வரை பல்லு முளைக்காத குட்டிகள்ல ஆரம்பிச்சி பல்லு போன பாட்டிகள் வரை ஒருத்தரை விடாம வயசு கணக்கா,சைசு கணக்கா பாரபட்சம் பார்க்காம காத்து கருப்பு மாதிரி வந்து காசு,கற்ப்பு களவாடி தேசத்தை சேதபடுதிட்டாணுக.என்னதான் ரைமிங்கா சொன்னாலும் ரணம் இருக்கு நெஞ்சுக்குள்ள..எல்லாத்தையும் பார்த்திட்டு,படிச்சிட்டு வெறும் வார்த்தைகள்ல மட்டும் வேதனையை வெளிபடுதிட்டு போற இயலாமை ஈஈனு இளிச்சிகிட்டு,இழிவுபடுதிகிட்டு இருக்கு உங்களை..

கலவி தரத்தோட வளர்ச்சி கல்வி கூடங்களின் கட்டிடங்களின் தரத்தில் தான் பார்க்க படுகிறது இன்னும் ஊருல..building strong..teaching weak கதை தான் தொடருது.இந்த சோக கதையை தாண்டியும் சில சாதனை கதைகள் இடம்பெறத்தான்  செய்யுது...படிக்க வசதிஇல்லாத இடத்துல சாதிக்க மனசு உள்ள வயசுல உள்ள மாணவர்கள் செய்யும் சாதனை அபாரமானது.ஆனால அவர்களுக்கு கை கொடுக்காமல்,உயர செல்ல தடை விதிக்கும் நம் கல்வி திட்டமும்,அந்த திட்டத்துக்கு தீனி போடும் அறிவில்லா அதிமேதாவிகளின் கொட்டமும் அகோரமானது.

காதலும்,கடலையும் சார்ந்த காலேஜ் மாணவர்களின் சமுக அக்கறையும், தமிழ் உணர்வும் ஈழ போராட்டத்தில் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தின் மூலமும்,அதற்க்கு ஆதரவு தெரிவித்து தமிழக அணைத்து கல்லூரிகளின் போராட்டத்திலும் வெளிப்பட்டபோது "அவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்" நினைப்பு தான்..சூப்பர் பா..

ஆனா அதுக்குகுட லீவ் விடாம,எங்களை லீவ் போடவும் விடாம உக்கார வச்சி வேலை கொடுத்து இம்சை கொடுத்த அயல் நாட்டு அப்பாடேக்கர்கள் அதான் MNC நிறுவன நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி கும்பிடுகள்..மோசம் பா..

ஆரம்பத்துல சாம்பியன் கோப்பை கைபற்றி வெற்றிகரமா ஆரம்பிச்சாலும் போக போக சுறா தேய்ஞ்சி சுண்டெலி ஆன கதைதான்.ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஜொலித்தாலும்,தென் ஆப்ரிக்கா தொடரில் பல்லிளிக்கும் படி சொதப்பிவிட்டனர்...சச்சின் என்னும் மந்திர சொல் கடைசி முறை கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்ததும்,காலிஸ்  என்னும் ஜாம்பவான் விடை பெட்ட்றதும் ஒரு சுகமானா சோகம்.விஸ்வநாதன் ஆனந்த் ஆட்டம் கே.வீ .ஆனந்த் மாற்றான் போல் பெரும் எதிர்பார்ப்போடு வந்து பப்படம் ஆகிவிட்டது...சரிவென்பது சகஜம்.அதை நீங்கள் வெல்வீர் என்பது நிச்சயம்.இறகு பந்தாட்டம் (badminton ) வியாபாரம் ஆக்கபட்டதின் பெரும் பங்கு IPL போய்  சேரும்..இருப்பினும் பல திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது (இப்படித்தாண்ட IPL ஆரம்பிச்சோம்)..விளையாட்டு வினால் ஆனால் கூட பரவாயில்லை.வியாபாரம் ஆனால் ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் கதைதான்.

நம்ம ஊர் விஞ்ஞானிகள் விடும் ராக்கெட்டை விட வேகமாக மேல செல்கிறது தங்கம் விலை.அதுக்கு கீழே கொஞ்சம் வேகமாக செல்கிறது காய்கறிகள் விலை.நடுத்தர வர்க்கம் இனி நடுதெருவுக்குத்தான் வருகும்.

தலைவான்னு பேரு போட்டதுக்கே பாம் போடுறேன்னு சொன்ன புரட்சி புயல்கள் அடுத்த முதல்வர்,அடுத்த பிரதமர்,அடுத்த பீதமகர்..அம்புட்டு ஏன்..கடவுள்ன்னு கூட பேன்னர்,போஸ்டர் ஓடும்போது பாம் இல்லை சாணி கூட அடிக்கலை...விஸ்வரூபம் படத்தை எடுப்பதற்கு விட,அதை வெளியிடுவதற்கு கமல் எடுத்த முயற்சிகள் ஹாலிவுட்டே அதிர அளவுக்கு இருந்துச்சி.நாட்டை விட்டே போற அளவுக்கு புண்படுதிட்டாணுக..அப்படி என்னதாண்ட அந்த ரெண்டு படத்துலயும் இருக்குதுன்னு பார்த்தா பாம் இல்லை..பிஜ்லி வெடி வைக்குற அளவுக்கு கூட சமாசாரம் எதுவுமில்லை பெருசா...தனக்கு விளம்பரம் தேடுறேன்னு பேருல படத்துக்கு விளம்பரம் பண்ணிட்டணுக.யாரு பேத புள்ளையோ..நல்லா இருக்கணும் சாமி..பார்ட்-2 வர போகுதாம்..ரெடி யா..

ஒவ்வொரு வருஷமும் கடந்து போகும்போது நமக்கு சொல்லிட்டு போறது ஒரே விஷயம் தான்.அதைதான் நானும் சொல்லபோறேன்..என் வருஷத்துல இருந்த நீ அடுத்த வருஷத்துல இருப்பியானே தெரியாது..அப்புறம் ஏன் இந்த கொலை,கொள்ளை,வஞ்சம்,வெறி,காமம்,லஞ்சம்,துரோகம் எல்லாம்...அடுத்த வருஷம் இருந்தா மனிதனாக வாழ முயற்சி செய்.மிருகமா,அடிமையாய் வாழாதே...2014 - உங்களை அன்புடன் வரவேற்க காத்திட்டு இருக்கு..சென்று வருகிறேன்.


இப்படிக்கு
2013  

Friday, 1 November 2013

நண்பனே என் அன்பனே

நண்பனே என் நண்பனே என் மனம் அறிவாயா நண்பனே.. நண்பனே என் நண்பனே என்னை மனம் முடிப்பாயா நண்பனே

ஒரு குழந்தையை போல உன்னை நினைப்பேன்.
ஒரு தாயை போல அரவணைப்பேன்.
காமம் கடந்தும் காதலிப்பேன்.
என் காலம் முடிந்தும் உன்னுள் கலந்திருப்பேன்.

விடுகதையாக உன் வாழ்விருந்தால்
அதன் விடையாய் என்றும் நான் இருப்பேன்
 தொலை தூர பயணமாய் வாழ்விருந்தால்
உந்தன் வழி துணையாக நான் இருப்பேன்.
தோல் சுருங்கும்காலத்திலும் தோள்  கொடுக்க நான் இருப்பேன்..
நடை தளர்ந்தாலும் மனம் தளராது உன்னை காத்திருப்பேன்.

நண்பனே........என் நண்பனே

உன் இமைகள் மூடும் காலம் வரை நீ
என் கண்களில் இருந்திட வேண்டுமடா
உன் இதயம் துடிப்பது நிற்கும் முன்
என் இமைகள் மூடிட வேண்டுமடா..

என் உயிராய் நீயும் இருக்கனும்டா..
உன் உயிரை நானும் சுமக்கனும்டா..
சின்ன ஊடல்கள் நம்முள் இருந்தாலும்
நம் அன்பை கொஞ்சம் இழந்தாலும்
நட்புடன் என்றும் உன்னை புரிந்திருப்பேன்
காதலும் கொண்டு உன்னுள் வாழ்ந்திருப்பேன்.

நண்பனே என் நண்பனே
மனம் அறிவாயா நண்பனே.. 
நண்பனே என் நண்பனே
மனம் முடிப்பாயா நண்பனே

Saturday, 24 November 2012

PROPOSAL FORM

PROPOSAL FORM
APPROVED BY VALENTINES GROUP OF COMPANIES


NAME OF PROPOSEE:
(Name should be written in capital letters)

*AGE:

ADDRESS:

*MOBILE NO:

  PHONE NO:

 *EMAIL-ID:


PROPOSAL QUALIFICATION

                                   DAILY                    WEEKLY                   MONTHLY
*DATING:

*CHATING:

*SHOPPING:


PREVIOUS EXPERIENCE

PLACE     YEAR OF PROPOSAL      YEAR OF APPROVAL      YEAR OF BREAK-UP 






PERSONAL DETAILS

RELATION     OCCUPATION       REMUNERATION        LOCATION

FATHER

MOTHER

BROTHER

SISTER

*COUSIN 
SISTER/BROTHER

*FRIENDS


PROPOSERS DETAILS

NAME:

*AGE:

ADDRESS:

MOBILE:

EMAIL-ID:


IMPORTANT NOTES:
Form has to be fill by Blood(Any kind of bloog group is applicable if dont have HIV+).
Proposers income should be within 2.5 lakhs P.A
Proposers should not have any ambition to achieve except marriage.
Proposers family income should be above 8-10 lakhs P.A

DOCUMENTS NEEDED:
Both Proposee n Proposer should need to attach their Salary Slip.
Age proof(Voter ID,Birth Certificate,License etc)
Medical Report
Bank statement and Pass Book



Thursday, 8 November 2012

தியா-டேட்டா

                                                        தியா-டேட்டா 

வீ.தியாகராஜன்,
No.420,வெட்டி பைய தெரு,
முட்டாப்பய நகர்,                            தொலைப்பேசி எண்:9876543210
வெண்னை - 000000                         இணைய முகவரி:@tigerthia,@DonDagulu 

வாழ்க்கை லட்சியம்:
வாழ்க்கைன்னு ஒன்னு எனக்கு இருக்கான்னு கண்டுபிடிப்பதே என் லட்சியம்.

கல்வி தகுதி:
பள்ளி:
பத்தாம் வகுப்பு:
பத்தாம் வகுப்பில் கனவில் கோட்டைகட்டி கணக்கில் கோட்டைவிட்டு மறுத்தேர்வின் மூலம் நடுத்தெருவிற்கு வராமல் பிழைத்துகொண்டேன்.

பணிரெண்டாம் வகுப்பு:
16 பேருகொண்ட பனிரெண்டாம் வகுப்பில் ஒழுங்கா படிக்க துப்பிருந்தும் விருப்பு இல்லாமல் 13 பேர் சுமாராக படிக்க போய் நான் 2ஆம் மாணவனாய் வந்தேன்.(It's  a Medical  Miracle)

கல்லூரி:
அறிவு பற்றாக்குறையாலும்,கொழுப்பு வற்றாக்குறையாலும்,படிப்பு எட்டாக்குறையாலும் சிறப்பாய் விளங்காது போன நான்,வரலாறு பாடத்தில் கதையடிக்க பயின்ற திறமையின் உதவியுடன்,சரிவில் போகாது சராசரி மாணவனாய் கலங்காமல் கல்லூரிக்காலத்தை கடந்துவிட்டேன்.

சிரிப்பு தகுதி:

  • கிண்டல்,கேலி,நக்கல்,நையாண்டி,மொக்கை,கடலை போன்ற (வெட்டி)பேச்சு போட்டிகளில் பலமுறை ஆர்வமுடன் பங்கேற்று பிறர் ஆத்திரத்துடன் ஆப்பு வாங்கிருக்கேன்.
  • பலமுறை வகுப்பு நேரத்தில் தூங்கி,அதற்காக ஆசிரியரின் ஆசியோடு வெளிநடப்பு செய்துருக்கிறேன்.
  • வகுப்பில் கடைசினாலும்,படிப்பில் முதல் வகுப்பில் வந்து என் நண்பர்களே நம்ப முடியாத அளவுக்கு சூழ்ச்சி செய்யாது தேர்ச்சி பெற்றுள்ளேன்.


மொழிகள்:
தமிழ்:என் தாய் (என்னை தினமும் வையும்) மொழி.

ஆங்கிலம்:SEEN போடுவதற்கும்,SIGN போடுவதற்கும்.

ஹிந்தி,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்:படப்பெர்யர்கள் அத்துப்பிடி.பாஷை பேசினால் செருப்படி.BE CAREFULL ...என்னை சொன்னேன்.


சொந்த/நொந்த குறிப்புகள்:

  • பெயர்:தியாகராஜன்(தியாகம் பண்ணாத ராஜன்)
  • வயது:கால் சதம் கடந்தும் காலரை தூக்கிவிட்டு கொள்ளும்படி எதுவுமில்லை.
  • தந்தை:என் முதல் நண்பன் (உயிரும் கொடுப்பார்,என் உயிரையும் எடுப்பார்)
  • தாய்:என் முதல் ஆசிரியர் (கனிவும் உண்டு,கண்டிப்பும் உண்டு)
  • சகோதர உறவு:சண்டை இட்டு மண்டைய பொளக்க 2 அண்ணன்கள்,1தங்கை.
  • நட்பு:நெறைய உண்டு-நிறையும் உண்டு.குறையும் உண்டு.அதான் பிரெண்ட்.


பலம்,பலவீனம்:
பேச்சு.

மேல் சொன்ன குறிப்புகள் யாவும் என் சுய நினைவுடனும்,கடுப்புடனுமே குறிப்பிடப்பட்டவை என உலறிக்கொள்கிறேன்.

                                                                                                                                 நொப்படிக்கு,
                                                                                                                              வீ.தியாகராஜன்